ஐலேசா… ஐலேசா…!






‘ஐலேசா.. ஐலேசா..’ என்ற வார்த்தைகள் இன்றைக்கு வரைலலாகும் வார்த்தைகள் அதைக், கேட்டதும், அந்தப்பாட்டும் ஆடல் நாயகி சாய் பல்லவியும் வயது பேதமின்றி எல்லாருக்கும் ஜில்லுனு நினைவுக்கு வரும்.
அ ஆ இ ஈ சொல்லித் தரும் ஆசிரியைகூட ‘ஐலசா ஐலசா’ என்ற வார்த்தைகளுக்கு ‘படகோட்டுவது’ போலத்தான் அபிநயம் பிடிக்கிறார்..
ஐலசா ஐலசா என்பது கடலோடிகளின் காப்புச்செய்யுள் மாதிரியல்லவா?!
படகோட்டுவது போன்ற அபிநயம்தான் ‘ஐலசா.. ஐலசா’ பாட்டுக்கு ஆதாரம் என்றால்… அந்த வைரலான நடிகை கப்பலிலோ.. படகிலோ இருந்து கடலில்… இல்லை… காயலில்தானே அபிநயம் பிடித்திருக்க வேண்டும்?! அவர் ஏன் காற்றில் அபிநயம் பிடிக்கிறார்.
அந்த அபிநயம் ஆணையும், பெண்ணையும், சிறுசையும் பெரிசையும் வசீகரித்து இழுத்திருக்கிறதே எப்படி? அதிலென்ன நுட்பம் புதைந்து நூதன வசீகரிப்பை வைரலை உருவாக்கி இருக்கிறது?!
இப்படிச் சிந்தித்துக் கொண்டே இருந்த இருளப்பனுக்கு … அவன்மனசு ஒன்றை அவனுள் ஆழமாய் அறிவித்துக் கொண்டே இருந்தது.
‘எதுவும் யாரையும் அவ்வளவு எளிதில் மயக்கிவிடாது. ரசிகன் அப்படி எதற்கும் எளிதில் ஏமாந்துவிடுபவனல்ல…!’ என்று உணர்த்தியது.
செல்லை ஆன் செய்தால் போதும், எந்த மூலையிலும் எந்த இடத்திலும் வந்து தலைநீட்டி வசீகரித்தது ஐலசா?! ஐலசா?!
தானும் தரையில் தலைகீழாய் நின்றுகூட அபிநயம் பிடித்து ஆடிகூடப்பார்த்து அயர்ந்து போய்விட்டான். இருளப்பன்.
திருவிளையாடல் படத்தில் சிவாஜிசார், ‘எதோ தனக்குத் தன் குரு பாணபத்திரர் யாழிசை வல்லவர் யாழ்பாணத்திலிருந்து இறங்கி வந்து,
இசை சொல்லிக் கொடுத்துவிட்டு, “சீ! ஞான சூனியம் உனக்கெல்லாம் இசை வராது!ன்னு’ சொல்லித் துரத்திவிட்டதாகவும். ஆனா, ‘வயிறுன்னு ஒண்ணு இருக்கே …?! பொழுது போகலைனா அவர் சொல்லிக் கொடுத்த -பாட்டுல எதோ ஒண்ணை இப்படி எடுத்து வுடுவேன்!அம்புட்டுத்தான்னு!’ சொல்லி அவரை(ஹேமநாத பாகவதரை) ஊர் கடத்துவது உறைத்தது!. அவனுள் ஐலேசா? அது அவ்வளவு லேசா?!
சரி, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு நினைக்கலாம்., ஆனால்.. இருளப்பன் இதயம், முன்னர் சொன்ன சம்பவத்தை முன்னர் படித்த ஒரு பள்ளிப் பாடலோடு ஒப்பிடுகையில் ஒப்புக் கொண்டது.
‘ஐலசா… ஐலசான்னு’ காற்றைக் கிளித்துக் கொண்டு அபிநயம் பிடித்தாரே சாய் பல்லவி… அதைப்பார்த்த லட்சக் கணக்கானவர்கள் அவரைப் போலவே அபிநயம்பிடிக்க ஆசைப்படுவதும் அதை வைரலாக்கி வசீகரிப்பதும் தினமும் தொடர்கிறது.
இப்ப இருளப்பன் கேள்வியே… ‘ஐலேசாவிலோ’ அதை அபிநயம் பிடிப்பதிலோ இல்லை. இதற்கு மூல குரு யாருன்னு மூளையைக் குடைய அவனுக்குள் ஒன்று உதயமானது.
சாதனை படைக்க வேண்டும் என்று சபதம் எடுத்துவிட்டால்… அது காற்றிலென்ன? கடலிலென்ன…? கைகொடுக்க ஒரு கவிஞன் துணைவருவான்.,
யாரந்த கவிஞன்…?
யாரந்த சாரல்ல…? யாரந்த கவிஞன்…?
ஆது வேற யார்?
மகாகவி பாரதியார்தான்.
காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம்!” என்று சொன்னவன். வானக்கடலில் வானப்படகை ஓட்ட ஐலேசாதானே அடிப்படை??!!
காற்றிலேறி விண்ணைச் சாட காற்றைக் கடலாய்க் கிழித்துப் பயணிக்க, கைகளையே துடுப்பாக எடுப்பாக பயணிக்கிறார் சாய் பல்லவி.
அதைப் போலவே அபிநயிக்க ஆசைப்பட்டுத் துடுப்பும் போய்… இடுப்பும் போய் இப்போ, பரிதவிப்பில் இருக்கிறான் இருளப்பன்.
இருளப்பன் எழும்வரை ஒன்று சொல்லிக் காத்திருப்போம்!
ஐலேசா… ஐலேசா…!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |