உழவு
கதையாசிரியர்: ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 6,728
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
உழுதொழில்
ஸ்ரீ மாசிலாமணித் தேசிகர் அவர்கள் 15வது தலைவராகத் தருமபுர ஆட்சியை நடத்தத் தொடங்கினார்கள். இவர்கள் காலத்தில் நட்டபயிர் வாடுகிறது. மரம் செடிகொடியும் வாடுகின் றன. குடி நீரும் இன் மையைக் கண்ட உழவர்கள் சுவாமிகளிடம் வந்து குறையை அறிவித்தனர். சுவாமிகள் பிற தொழில் களைச் செய்பவரும் முடிவில் ஏரை உடையவரிடம் சென்று யாசிக்கும் உழுதொழிலே முதன்மையா னது. அத்தொழிலுக்குத் துன்பமாக மழை இல்லை யே என்று தாம் பூசை செய்யும் சொக்கலிங்கத்திடம் நின்று ”புலனைந்தும் பொறிகலங்கி,” என்னும் பாடலை இசையோடு பாடினர். இறைவன் அருளால் மழைபெய்தது. உழவர்யாவரும் மகிழ்ந்து சென்ற னர். இவ்விதம் உலகம் உழவுத்தொழிலால் வாழ்கி றது. அதனால் உழவுத்தொழிலே சிறந்தது; அதற்கு உதவவேண்டும் என்றே சுவாமிகள் உழவர்களிடம் கருணைமிகுந்து உதவிசெய்தார்கள்.
சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை. (77)
சுழன்றும் = (பிற தொழில்களைச் செய்தும்) திரிந்தும்
ஏர் பின்னது உலகம் = முடிவில் எரையுடையவரின் வழியே உலகத்தார் வருவார்.
அதனால் = ஆகையினால்
உழந்தும் = பல துன்பம் அடைந்தாலும்
உழவே தலை = உழுதொழிலே முதன்மையாகும்.
கருத்து: உலகம் உழவாலே உயிர்வாழவேண்டியிருத் தலின் உழுதொழிலே சிறந்தது.
கேள்வி: உழவைப்பற்றி வள்ளுவர் கூறும் சிறப்பு யாது.
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.
தொடர்புள்ள சிறுகதைகள்
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026
அறிவு அற்றங் காக்கும் கருவி!
வளர்கவி
May 31, 2026
திருடாதே! பாப்பா திருடாதே!
வளர்கவி
May 25, 2026