உருவுகண்டு எள்ளாமை வேண்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 35 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெரியார் ஒருவருக்கு அவருடைய நண்பர், அவர் பிறந்த நாள் விழாவைப் பாராட்டும் பொருட்டு இனிய பழ வகைகளும் தின்பண்டங் களும் தம் சிறுவன் மூலம் அனுப்பி வைத்தார். சிறுவன் பெரியவர்களிடம் வணக்க ஒடுக்கமாக நடக்கப் பழகியவனாதலால், நெடுநேரம் அவர் அவனைப் பாராததுபோல இருந்தும் பொறுமை யாகப் பழத் தட்டுடன் நின்றிருந்தான். கடைசி யில் அவன் பொறுமையிழந்து, “ஐயா, என் தந்தை இப்பழத் தட்டைத் தங்களிடம் தரச் சொன்னார். பெற்றுக் கொள்ளுங்கள்,” என்றான். பெரியவர் அப்போது அவனைப் பார்த்து, “உன் தந்தை உனக்குக் கற்பித்துக் கொடுத்த வணக்கம் ஒடுக்கம் இவ்வளவுதானா? பெரியவர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்று நான் காட்டுகிறேன். நீ எனது இடத்தில் இரு. நான் நடந்து கொள் வதைப் பார்,” என்று கூறிவிட்டு வெளியிற் சென்றார். 

சிறிது நேரத்திற்குள் அவர் தட்டுடன் வந்து, ஐயா, அன்புகூர்ந்து இக்காணிக்கையை ஏற்றுக் கொண்டருளுங்கள்,” என்றார். சிறுவன் உடனே அவர் வியக்கும் வண்ணம், “மிகவும் மகிழ்ச்சி. இப்படி வந்து உட்கார் தம்பி. நீ மிகவும் தொந்தரவு எடுத்துக்கொண்டு விட்டாய். இதோ ஒரு பழமும் சில தின்பண்டங்களும் தின்கிறாயா?” என்றான். 

அவனுக்குச் சிறுவர் நடந்து கொள்வது எப் படி என்று தாம் கற்பிக்கப்போக, அவன் பெரி யோர் எப்படி நடப்பதென்று தமக்குக் கற்பித்து விட்ட நயத்தை எண்ணி, அவர் சிறுவனைப் பாராட்டி மெச்சிக் கொண்டார். 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *