உபயம்




கோவிலுக்கு ஐந்து டியூப் லைட்டுகளை அன்பளிப்பாகக் கொடுத்த சாமிநாதன், குருக்களிடம்,
‘சாமி…இதை உடனே மாட்டிடாதீங்க!…‘உபயம் – சாமிநாதன்‘னு பேர் போடணும்!… பெயிண்டர் நாளைக்கு வருவான்!”;.
சொல்லி விட்டுக் கிளம்பிய சாமிநாதன் வரிசையாய் வைக்கப்பட்டிருந்த சில்வர் குடங்களைப் பார்த்து விட்டு,
‘என்ன சாமி… இதுகளும் உபயமா?” கேட்டவாறே ஒன்றை எடுத்து அதில் பெயரைத் தேடினான்.
”பெயர் போடலையா?”
‘போட வேண்டாம்னுட்டாங்க”
‘அந்த பெரிய மனுசன்… யாரு சாமி?”
‘வேற யாருமில்லை… கோயிலுக்கு வெளிய உட்கார்ந்திருக்காங்களே பிச்சைக்காரங்க அவங்கதான்! அஞ்சு வருசமா இதுக்காகவே தனி உண்டியல் வெச்சு சேர்த்திட்டு வந்திருக்காங்க!” என்றார் குருக்கள்.
‘நீங்க டியூப் லைட்டை மாட்டிடுங்க சாமி” சொல்லிக் கொண்டே வெளியேறினான் சாமிநாதன்.
![]() |
பெயர் - முகில் தினகரன் முகவரி - சைட் நெ-3ஃ சாந்தி நகர்ஆவாரம்பாளையம் ரோடுகணபதி அஞ்சல்கோயமுத்தூர் – 641 006. அலை பேசி எண் - 98941 25211 கல்வித் தகுதி - எம்.ஏ.(சமூகவியல்)எம்.காம்.பி.ஜி.டி.பி.எம். (மனித வள மேம்பாடு)டி.ஈ.எம். (ஏற்றுமதியியல்) வயது - 49 ஆண்டுகள் தொழில் - மத்திய அரசு சார்பு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரி சிறுகதைகள்இதுவரை எழுதியுள்ளவை - 600பிரசுரமானவை - 300 –க்கும் மேல்பிரசுரமான…மேலும் படிக்க... |