உன் கண்ணில் நீர் வழிந்தால்…

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 14,840 
 
 

அன்றுகாலை என்ன காரணம் என்றே சொல்லாமல் கேவிக் கேகி அழுது கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி.

‘என்னாச்சு கிருஷ் ஏன் அழறே..?! யார் என்ன சொன்னார் அக்கறையாய் விசாரித்தான் அவினாசி.

‘இல்லை… இந்த எதிர் அப்பார்ட்மெண்ட்ல கன்ஸ்ட்ரக்ஷன் வேலைக்கு வந்திருக்கிற நார்த் இண்டியன் பசங்களைக் கவனிச்சீங்களா?’ என்றாள் புதிர்போடும் புத்திசாலி போல.

‘அதான் ஆறுமாசமா வேலை பார்க்கிறானுகளே! கவனிச்சுட்டுத்தானே இருக்கோம்! அதுக்கென்ன திடீர்னு இப்போ?!’ கேட்டான்.

‘ஊர்விட்டு ஊர் வந்து தொலைதூரத்துல அல்ப காசுக்காக கஷ்டப்படறானுகளேனு நெனைச்சா கஷ்டமா இல்லே..?!?!’ ஆதங்கத்தைக் கொட்டினாள்.

‘அட அசடே இதுக்கா அழறே…?! இப்போ… இந்தியாவின் மூலை முடுக்கிலெல்லாமிருந்து மிலிட்டிரியில சேர்ந்து வேலை பார்க்கற இளைஞர்களை நெனைச்சுப் பார்…! காஷ்மீர்லயும் இமயமலை அடிவாரத்திலயும் அடிவாரமென்ன உச்சிலயும் இந்திய எல்லையைக் காக்கற மாதிரிதான் இதுவும் உழைப்புன்னா அப்படித்தான் இருக்கிற தங்கற எடம் திங்கறா சோறைப் பத்தியெல்லாம் நெனைக்க முடியுமா?’ என்றான்.

‘என்னங்க, எதை எதோடு முடிச்சுப் போடறீங்க?! நார்த் இண்டியன் பசங்க மொழி தெரியாம சரியா சாப்பிட முடியாம தூங்கப் படுக்க இடமில்லாம இருக்கறதைப் பார்த்தா..?!’

‘அதான் மிலிட்டரி சர்வீஸ் மாதிரீன்னு ஒப்பிட்டுச் சொன்னேன்!’

‘என்ன ஒப்பிட்டீங்க போங்க! மிலிட்டரீலயாவது சாப்பாடு மருத்துவம் துணிமணி ரிட்டயரான பென்ஷன் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் எக்ஸர்வீஸ் மேனா நல்லா வேலை பென்ஷன் எல்லாம் உண்டு…! மரியாதை கூட மக்கள் மத்தியில உண்டு…! ஆனா.. இவங்களுக்கு? மாடியில இருந்தோ வழியிலோ ஆபத்து நேர்ந்தால் அதோ கதிதான்னு’ சொல்லி, மீண்டும் கண்ணைக் கசக்க, அவள் அடிமன அன்பு புரிபட அவினாசியும் அழுதான் உள்ளுக்குள்.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *