இழித்தொழில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 6, 2024
பார்வையிட்டோர்: 2,240 
 
 

அரசு பயணியர் மாளிகை வழக்கமாக இல்லாமல் சுத்த பத்தமாக பராமரிக்கப்பட்டு,
காவல் அதிகாரிகள்,சுகாதர பணியாளர்கள் மருத்துவர்கள் சூழ்ந்து நிற்க,சைரன் வைத்த வாகனங்கள் படை சூழ அமைச்சர் வாகனம் உள்ளே வர அந்த இடம்  பரபரப்பானது.

துண்டு போர்த்தி,புத்தகம் பரிசளித்து வரவேற்ற ஆட்சியர், மருத்துவ,சுகாதார அதிகாரிகளைப் பார்த்து தலையாட்டியபடியே தனது அறைக்குள் புகுந்த அமைச்சர் சுகாதாரத்துறை என பேசிக்கொண்டனர் வேடிக்கைப் பார்த்தவர்கள்.

“அந்த புத்தகங்களையெல்லாம் அமைச்சர் படிப்பாரா” என வேடிக்கைப் பார்க்கவந்த கூட்டத்தில் ஒரு குரல் கேட்க,

“போய்யா,என்ன வேடிக்கை? என கூட்டத்தை விரட்டி கலைத்தது காவல்துறை.

உள்ளே போவதுமாகவும் வெளியே வருவதுமாகவும் போய் வந்துக் கொண்டுயிருந்தவர் அமைச்சருக்கு பி.ஏ வாக இருப்பார் போல, யாருக்காகவோ காத்தியிருப்பது போல கூட்டத்தில் யாரையோ தேடிக் கொண்டியிருந்தார்.

“நேரத்தைப் பார்த்தியா?! ஐஏஎஸ், டாக்டர் என படித்தவர்களெல்லாம், அஞ்சாங்கிளாஸ் பெயில் ஆன அமைச்சருக்காக சூழ்ந்து வெளியே நின்றபடி காத்தியிருக்க வேண்டியிருக்கு என ஒருவர் புலம்பிட, “அதிகாரம்யா, அதிகாரம்” அது மட்டும் இருந்துச்சுன்னா உலகத்திலே எதையும் சாதிச்சிக்கலாம் என பேசிக்கொண்டனர் பொது மக்கள்..

அந்த சமயத்தில் கூட்டத்தை பிளந்துக்கொண்டு ஒரு ஆணும் பெண்ணும் அங்கே வரவும் அமைச்சரின் செயலர் ஓடி வந்து உங்களுக்காகத்தான் காத்தியிருக்காரு,சீக்கிரம் போங்க என விரட்டி அமைச்சரின் அறைக்குள் அனுப்பியவர், அறைவாசலில் காத்தியிருந்த அதிகாரிகள் அனைவரையும் பக்கத்து அறைக்குச் சென்று காத்தியிருக்கும் படி சொல்லிவிட்டு தனது காருக்கு சென்றுவிட்டார்.

யோவ்! சொன்ன டயத்திற்கு வரமாட்டியா?! எத்தனை வேலை கிடக்கு ? போ என ஒரு ஐநூறு ரூபாய்த்தாள் கை மாறியதும் அறையிலுருந்து கிளம்பி வெளியே போனாது அந்த ஆண் மட்டும்.

“உனக்கென்ன வெத்தல பாக்கு வைக்கனுமா” வந்து “சூட்டைத்
தனி” என்றார் காலை அகட்டி அமர்ந்து அதிகாரமாய். தயாரான போது அவளது போன் சினுங்கியது. எடுத்து பேச எத்தனித்தவளை எட்டி உதைத்தது அதிகாரம்,

ஐயா, எம் மவன்யா இதோ ரண்டு நிமிஷம் என கெஞ்சினாள்.

என்னடா?
…..

அப்படியா? சரி.

காசு சாயந்திரம் வந்திடும், பீஸ் கட்டிடலாம், தாத்தா வந்திருக்கா? கடைக்குப் போய் ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கி கொடு,வீட்டிலேயே இருக்கச்சொல்லு காசோட அம்மா வாறேன்” என்று பேசி முடித்ததும் கொத்தாக அவளது பின்முடியைப் பிடித்து இழுத்து திணித்து மிருகமாகியிருந்தான் அமைச்சர்.

அவளது வளமையை வறுமையும்,தனிமையின் வெறுமையும்,இயலாமையும் ஒன்று சேர்ந்து கரைத்துக்கொண்டியிருந்தன.

பாதி வேட்டையில் அமைச்சரின் பர்சனல் போனில் அழைப்பு வர,

சொல்லு சார்! என்றபடி மேலிருந்தவளை பக்கத்தில் தள்ளி விட்டான்.

“ஐந்து பர்செண்ட் பார்க்காதீங்க” உங்களுக்குத்தான் நட்டமாகும்.
நாடு பூறா சப்ளை பண்ணப்போறீங்க, பின்னாடி என்னை குறை சொல்லக்கூடாது, முப்பது பர்சண்டேஜ்னா சொல்லுங்க, டெண்டர் கிளியர் பண்றேன் என்றதும், ஓகே….,ஓகே.

யாரு மக்களா? யாரு அதிகாரிகளா? அதெல்லாம் ஒருத்தனும் கேட்க மாட்டான்,அதிகாரம் நம்ம கையிலே,நீங்க  அனுப்புறதுதான் நல்ல மருந்து,
சாப்பிட்டு பொழச்சு இருக்கிறவன் இருக்கட்டும், போறவன் போகட்டும் என்று கூறி இடியென சிரித்தார் அமைச்சர்.

பக்கத்து அறையில் அதிகாரிகள் கூடி, மருத்துவமனைக்கான தேவைகள்,மக்களின் குறைகள்,வேண்டிய நிதி ஆதாரம் என சீரியஸாக விவாதித்துக் கொண்டியிருந்தார்கள்.

நல்ல ராசிக்காரிடி நீ! நல்ல வசூல் ஆனது இன்னிக்கு என இழுத்து அனைத்தபடி அவளோடு சேர்ந்து சேர்ந்தான்.

“இந்தா கிளம்பு” என சில நோட்டுக்களை நீட்டியவரிடம்,

தப்பில்லையா இது ? மருந்து மாத்திரைகளை ஏழை மக்கள்தானே வாங்கி சாப்பிடுது என்றதும்,

அ….ரி முண்ட,உங்கூட செத்தநேரம் படுத்துகிடந்தால் நியாயம் சொல்வியா நீ எனக்கு.
இனிமே என் கண்ணில் பட்டே அவ்வளவுதான் வெளியே போ என விரட்டினார்.

அதுக உசிரு முக்கியமில்லையா? என்னய்யா இது? என்றதும்,கோபம் தலைக்கேறிய அமைச்சர், “இழித்தொழில் பண்ற நீ எனக்கு யோசனை சொல்லுவே” என அவளை அரையப் பாய்ந்தார்.

நான் செய்வது இழித்தொழில்தான் என்கிற நினைப்பு எனக்கு இருந்திச்சு, இருந்தாலும் என் மவன் படிப்புக்காகவும் என் ஆத்தா உடம்பு சரியாகமல் ஊரில் கிடக்கேனு பொறுத்துக்கிட்டே வேறு வழியில்லாமல் இதைச் செய்கிறேன், ஆனால்  நீங்கள் செய்வதை விட இது ஒன்றும் கேவலமானத் தொழில் இல்லை என இப்போது புரிஞ்சுகிட்டேன் என வாங்கியத்தொகையில் கூடுதலாக இருந்த ஒரு ஐநூறு ரூபாய் நோட்டினை விட்டெறிந்துவிட்டு விறுக்கென்று கிளம்பினாள்.

AyyasamyP பா.அய்யாசாமி தந்தை பெயர்: கி.பாலசுப்ரமணியன். பிறந்த ஊர்: சீர்காழி. நான் 15/10/1969 ஆம் ஆண்டு சீர்காழி எனும் ஊரிலே பிறந்தவன் என்னுடைய இளங்கலை இயற்பியல் படிப்பினை பூம்புகார் பேரவைக் கல்லூரியிலே 1989 ஆம் ஆண்டு முடித்து , தற்போது முதுகலை தமிழ் படித்துக்கொண்டு இருக்கின்றேன். தில்லி, உத்தர் பிரதேஷ் ,சென்னை என பல இடங்களில் பணிபுரிந்து தற்போது மயிலாடுதுறையிலே வசித்துக் கொண்டு இருக்கின்றேன்.2015 ஆம் ஆண்டு முதல் என்னை ரோட்டரியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *