கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 31, 2024
பார்வையிட்டோர்: 2,205 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘பட் பட்’ என்று செருப்புத் தாளமிட நடந்தாள் தேனம்மா. குதிகால் பக்கம் அரைவட்டத்திற்கு தேய்ந்து கரைந்த ரப்பர் செருப்பாதலால் கவனமாசு அடியெடுத்து வைக்க வேண்டியிருந்தது. குதிகால் வெடிப்புகளில்கல்பட ஸ், யப்பா என்று வேதனையில் முகம் சுணங்கியது. 

தலையில் பருத்த சுள்ளிக் கட்டுடன் இடுப்பில் காலி குடம். டெப்போ அருகில் நீர் நிரப்பியபின் வீடுதான். 

சாமி புண்ணியத்தில் மழை பெய்யத்தான் செய்யுது. பண்டு ஏரியத் தோண்டி ஆழமாக்கினால்ல? மழை மலையிலேன்னாலும், தண்ணி சமவெளிக்கினாப்பலே, அது உருண்டு ஓடிருது வெட்டி பயக்கா. நாலு நாளைக்கு ஒருவாட்டி, பைப்பில தண்ணி விடுதாங்க. அது எதுக்குக் காணும்? பொம்பளைங்க குடஞ்சொமந்தே ஒடிஞ்சி போறோம். 

மனதின் புலம்பலில் அவள் உதடுகளும் ஓசையின்றி அசைந்தன. தலையில் கள்ளிக்கட்டு எம்பி எம்பிக் கேட்டுக் கொண்டது. 

வளைவில் திரும்ப சரிவு சரிவாய்ப் பச்சைக் கம்பள புல்வெளி, அதில் உருண்டு, குதித்து விளையாடிக் கொண்டிருந்தது ஒரு நாய்க்குட்டி, தேனம்மா நெருங்கிய பின்னும் தலைச்சுமையால் அதை ஓரக்கண்ணால்தாள் பார்க்க முடிந்தது. நாயின் அழகும் உற்சாகமும் அவள் பார்வையை மீட்க விடவில்லை. 

மலைநாட்டு பிராணிகளுக்கே உள்ள ரோமமும் செழுமையுமாய் அது தேன் நிறத்தில் இருந்தது. நெற்றியிலும் பாதங்களிலும் வெள்ளை பளீரிட்டது. 

மல்லாந்து கிடந்து, அது முன்னங்கால்களால் மூக்கைத் தேய்த்துக் கொண்டது. 

‘மூக்கு அரிக்குதாக்குங்?’ 

லேசான முனகலோடு முதுகை புல் தரையில் புரட்டிக் கொடுத்தது. 

‘நல்ல சொகுசு போ…’

‘படக்’ கென்று உருண்டு எழுந்து நின்று புற்களை விளையாட்டாய் பிடுங்கி எடுத்தது. அழுத்தமாய் ஊன்றிய புல்லை உக்கிரமாய் தலையாட்டி உறுமி இழுத்தது. யாரோ சொன்னது போல ‘டக்கென்று உட்கார்ந்து தாதை விறைத்தபடி தேனம்மாவைப் பார்த்தது. 

‘உம்பாடு தேவலை. வயிறு ரொம்பிக் கிடக்குது. விளையாடுத, ம்?” விசாரித்தபடி நடந்தான். 

இளங் குரலில் நாய் குரைத்தது. 

‘நாய் ஜெம்மம் எடுத்திருக்கலாம். காலைலே முச்சூடும் பெருக்கி, துவைச்சு, கஞ்சி வச்சி, சுள்ளி பொறுக்கி வெறும் வயத்தோட தண்ணிக்கலைஞ்சு… உனக்கு நோவில்லாத புழைப்பு. மரங்கள் காற்றில் குனிய, வானம் மங்கியது. 

‘மழை வருதோ? வந்தாப்புல? குடிக்க தண்ணிக்கு ரெண்டு கல்லு சுமக்கதா வேணும். ராத்திரி ஊத்துச்சுனா, வீடு ஒழுகி பொதுமி நிக்கும். புள்ளைங்க சதா தும்முங்க. சுள்ளி காயாது. பிறவு சீமெண்ணைக்கே பாதி காசைக் குடுத்திரணும்! 

புலம்பி ‘பட்பட்’டென்று நடந்தாள், 

முக்கால் மணி நேரங்கழித்து அதே வழியில் திரும்பியவளின் நடை மட்டுப்பட்டிருந்தது. 

குடம் நிறைந்திருந்தது. முணுமுணுப்பு நிற்கவில்லை.

‘ஏற்கெனவே வசீலாவுக்கு வாய் சாஸ்தி. இப்போ வேல பாக்குற மெப்பில வாய் விரிஞ்சிடுச்சு. குடம் நிறைஞ்சுதுன்னா. இடுக்கிட்டு கிளம்பணும்னு இருக்காண்டா? அவ சம்பளமா ஐநூறு வாங்குதாளே, அதுல புருஷன் வீட்டுக்கு ‘இந்தா’ன்னு பத்துக் காசு நீட்டுவா? நா எம் மாமிக்கு தீபாவளிக்கு சேல வாங்குளேனே – எம்புட்டு நாத்தி கலியாணத்துக்கு சீரு என்ன செய்வேன்னு குடையுறா. அந்தந்த பாடு அன்னன்னைக்கு சாமி இருக்குதுல்ல? எந்தம்பி ராசு எவளையோ கட்டுதாள், இவளுக்கென்ன? அவ புள்ளையோட புருசனை விட்டுட்டில்ல ராசுவை புடிச்சுக்கிட்டாளாம்? அவன் நாய் ஜெம்மமா அலையறதுனாலதா தா நின்னு பேச்சு கேக்குதேன். வீட்டு ஆம்புள ஆடுபுலியில் தோக்காத பொறுப்பா நடந்தா நாலு காசு சேத்து கௌரதையா நிக்கலாம். நாத்திக்கு கூடையில் செய்யலாம் வீட்டைச் சீராக்கிப் பிள்ளைகளுக்குக்கூட ஒரு கம்பளிச் சட்டை எடுக்கலாம். மலை ஊருல முட்டி நெஞ்சோட சேத்து சுருண்டு படுக்குதுங்க பாவம்’ 

மனதின் அலுப்புப் பட்டியலுடன் உடல் சுமைகளும் சேர பிடரி நோக, நின்று பெருமூச்சு விட்டாள். 

காலை வீசிப்போட்டதில் செருப்புவார் பிடுங்கித் தொங்கியது. குடத்து நீர் தளும்பித் தெரித்தது. 

‘நாய் ஜெம்மம் என்னுது. இப்பவா போகும்? அறுந்தத எடுத்து வாயில் கௌவிகிட்டா ஓடது?’ 

உதடுகளை இறுக்கி, கவனமாய்க் குடத்தை இறக்கி வைத்தவள், சுவரோரமாய் தலை சாய்ந்து கமையை சரித்தாள். 

‘யப்பா…!’ 

பிடரியை நீவியபின், செருப்புகளை விறகுக் கட்டுக்குள் செருகி, மூச்சுப் பிடித்து சுள்ளிச் சுமையைத் தூக்கினான், 

நீளக்கட்டு இருபுறமும் ஆட, காலை ஆட்டி, சமமாக்கி ஒரு நிமிடம் நின்று திருப்தியானபின் குடத்தையும் சுமந்து கொண்டாள். 

நாலு எட்டில், நாய்க்குட்டியைப் பார்த்த வளைவு வர நினைவாய் ஓரக்கண் ஓட்டினாள். 

வெறும் பச்சைதான். 

உற்சாக வெள்ளைப் பொட்டைக் காணவில்லை.

“வேய், கழுத்துலகவுத்தகாணும் பிடி அதை” இருசிறுவர்கள் மேட்டிலிருந்து கூவினர். 

“பாச்சா காட்டுதுல். ” 

வெள்ளைப் பொட்டு பளீரென வெளிப்பட்டு ஓடியது. காதுகள் மடங்கி, வாலை கால்களுக்கிடையில் ஒளித்து, விழிகள் பயத்தில் மங்கி…. 

“பிடிறா… இதோ ஓடுதுல்ல?'” கீழே நின்றவன் துடியாய்க் கல்லெடுத்து வீச, மறுநொடி குட்டி, “ஊ ஊ” என்று பின்னங்காலைத் தூக்கிக் கொண்டது. மற்ற மூன்றைக் கொண்டு திரும்பி நொந்த காலை நக்கிக் கொண்டது. 

இப்போது நாலு சிறுவர்களும் வியூகமாய் வளைந்து அதை நெருங்கினர். அடுத்த கல், பிட்டத்தில் பட, கால் நடுங்க சுவரோரமாய் ஒடுங்கியது. 

“வாலப் பிடிறா டேய்.” 

“டேய், யாரு வீட்டு தாயி வால நீ பிடிங்கற? செருப்பெடு ராஸ்கோலு” – தேனம்மா அதட்டினாள். 

திரும்பி அவளைச் சந்தேகமாய்ப் பார்த்து நின்றனர் நால்வரும்.

“அண்ணாச்சி பாத்துது… விளாரி தொங்க வுட்டுரும்” பையன்கள் உதடசையாது தங்களுக்குள் குசுகுசுத்தனர். 

“அதாருடா அண்ணாச்சி?” 

“யாரு கண்டா” 

“பொம்பளை நவராம நிக்குது. ” 

“அண்ணாச்சி…!” – இல்லாத உறவுக்கு அவள் குரலெடுத்துக் கூவ, ஏமாற்றம் காட்டாது அலட்சியமாய் நகர்ந்தனர். 

“டாமி இங்ஙன வா. ச்ச்சு…சு” கழுத்தலுங்காது அவள் பரிவுக் குரலில் கூப்பிட குட்டி அண்டியது. 

கண்களில் நன்றி ததும்ப, காலுக்கிடையில் பலவீனமாய் வாலை ஆட்டியது. 

”வீட்டுக்கு ஓடு…போ…” 

புரிந்து அது மறுதிசையில், திரும்பித் திரும்பிப் பார்த்தபடி. ஓடியது. 

மீண்டும் பசுமை வெறுமையாகத் தேனம்மாள் நடந்தாள்.

‘வாயில்லாத ஜெம்மம். நாம் புலம்பித் தீத்துக்கிடுதோம். திட்டி ஆத்திக்கிடுதோம். அதுக்கும் வழியில்லாத சின்ன உசிர அடிக்கித பாவிங்க.’ 

கூரான கல் ஒன்று வெற்றுப் பாதத்தில் அழுந்த – “யப்பா…. ரோட்டப் போடாத பாவிகள நாயி பிடுங்க” அரற்றியவள், தொண்டி நடந்தாள். 

– In STC College’s centinary magazine.

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *