ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து…





ஆனைகட்டி வழியாக கேரளா செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் படுத்திருந்தது அந்த கருப்புத் தார் சாலை! பெய்த மழையில் உடல் நனைந்து சிலிர்த்துச் சில்லிட்டிருந்தது அதன் மேனி மின்னிய பனித்துளிகளில் பளபளத்தது.
நீண்ட நாட்களாகவே செங்கல் சூளையை ஒட்டியிருந்த ஆட்டுப் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடு மாடுகள் களவு போயும் புலியால் கடித்துக் குதறப்பட்டும் பலியாகிக் கொண்டிருப்பதாக வனத்துறைக்கு வாட்ஸாப் புகார்கள் பரவிக் கொண்டிருந்தன.

பன்னிரண்டு மணியிருக்கும் காது செவிப்பறை சவ்வுக்கு மட்டும் கேட்கும் சப்தத்தில் சொல்லப்பட்டது…”சத்தம் போடாம சாக்கால் மூடித் தூக்கீட்டு காருக்குக் கொண்டு வந்துடுங்க!” எண்ணை பூசிய உருவங்கள் ஆடு திருட அந்த வெள்ளை நிற ஸ்விப்டிலிருந்து இறங்கி ஆட்டுப் பட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்கள்.
சொன்னபடியே சாக்கால் மூடி, ‘லபக்கி’ காருக்குள் கொண்டுவந்து கிடத்த, கார் பயணிக்கத் தொடங்கியது.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து அடுத்து ஆளையே கடித்துக் குதறக் காத்திருந்தது…!
வனத்துறையின் மயக்க ஊசிக்குப் பாதியாளாகி பட்டியில் விழுந்து மயங்கிக் கிடந்த கருஞ்சிறுத்தை சாக்கு மூட்டைக்குள் லபக்கப்பட்ட ஆடுகளோடு ஒன்றாய்…!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |