அம்மா என்ற ஜக்கம்மா

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 325 
 
 

அம்மா: பூஜை அறையில் நின்று கொண்டு, “ஜக்கம்மா சொல்றா, ரவி… இந்த வருஷம் கணக்கு பரிட்சை ரொம்ப கஷ்டமா இருக்குமாம். நீ நல்லா முயன்று படிக்கனும்”

ரவி: (யோசனையுடன்) “சரிம்மா. ஆனா பரிட்சைய பத்தி ஜக்கம்மா ஏன் சொல்றா”

அப்பா: (அவசரமாக) “ஏதோ அவளுக்கு தெரிந்திருக்கும். பெரியவங்க சொன்னா கேட்கணும்.”

(சில நாட்கள் கழித்து, இரவில் கண் விழித்து படித்துக்கொண்டிருந்த ரவி, பாத்ரூமுக்கு செல்கிறான். திடீரென, அம்மா அப்பாவின் அறையில் இருந்து மெல்லிய குரல் கேட்கிறது.)

அம்மா : (குரலை மாற்றி) “ஜக்கம்மா சொல்றா, இந்த முறை ரவிக்கு கணக்குல நூற்றுக்கு நூறு வரும். பயப்படாதீங்க.”

(ரவிக்கு தூக்கி வாரிப்போட்டது. அப்பா சிரிக்கிறார்)

அப்பா : (சிரித்தபடியே) “இனிமே ரவிக்கு பரீட்சை சமயத்துல உன்னை ஜக்கமான்னு தான் கூப்பிடனும். ஜக்கம்மான்னு சொல்லி, பையன நம்ப வச்சு, நல்ல படிக்க வச்சுட்ட. பேஸ் பேஸ்.”

(ரவி தலையில் கை வைத்து, இந்த ஜக்கம்மா சாமி இல்லை. அது தன் அம்மா என்பதை புரிந்து கொண்டான்.)

இருந்தாலும் அம்மாவின் தந்திரத்தை நினைத்து வியந்து போனான். ஜக்கம்மா சொன்னாள் என்று கூறியதால் நானும் கஷ்டப்பட்டு படித்தேன் என்பது உண்மைதான். அம்மா சொன்னால் கேட்க மாட்டேன் என ஜக்கம்மா மீது பழி போட்டுள்ளார்.

பரீட்சை முடிந்து, ஓடி வந்த ரவி, அம்மாவை கட்டிப்பிடித்து, “ஜக்கம்மா நான் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கி விடுவேன்” என கூறினான்.

அம்மா என்ற ஜக்கம்மா திகைத்து நின்றாள்.

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *