வெளிநாட்டு வாழ்கை – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 11,646 
 
 

ராகுல்,அவன் மனைவி தீபா,குட்டிப் பாப்போவோடு அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்கள்.எங்கள் கம்பெனியிலிருந்து அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சொல்ல முடியாது அங்கேயே செட்டில் ஆவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்காக அவன் வீட்டிற்கு சென்றோம்.

” ஸாரி சார்! நாங்க யு.எஸ். போக வேண்டாம்னு முடிவு செய்திருக்கோம்.”

என்றான் ராகுல்.

“என்னாச்சு ராகுல்? என்ன காரணம்?”

” அது ஒன்றுமில்லை சார்! அங்கே போனா அங்கே உள்ள கல்ச்சருக்குதான் நம்ம பிள்ளைகளை வளர்க்க வேண்டிய சூழ்நிலை வரும்.

அது எனக்கும் என் மனைவிக்கும் பிடிக்கவில்லை. அதுமட்டுமில்லை.

என்னோட அப்பா,அம்மாவுக்கு நான் ஒரே பையன். தீபாவும் அப்படித்தான்.

அவங்க. அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு! ”

” நாங்க போயிட்டா அவங்களும் வயதான காலத்தில ரொம்ப கஷடத்தை உணர்வாங்க!

அதனால போகல சார்” என்றான்.

அவர்களின் நல்ல முடிவை வாழ்த்திவிட்டு வந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *