விழிகள் பேசாத மொழிகள்
கதையாசிரியர்: ராஜராஜ சோழன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 1, 2026
பார்வையிட்டோர்: 2,680
விழிகள் மொழிகள் பேசும். அதன் அருமை கண்களில் தூசு விழுந்து திறக்க முடியாமல் கண்களிலிருந்து வழிந்தோடும் ஒரு துளி தொடும் போது தான் உணர முடியும்.
உடனே மனது கண்கள் சரியானால் நல்லது என்று தோன்றும். ஒரு சில நிமிடங்களில் எல்லாம் சரியாகி விடும். பின்பு முற்றிலுமாக மறந்து போகும் விழிகள் பற்றிய பிரக்ஞை.
மழை வருவதற்கு முன் காத்து ஓங்கி அடிக்கும். முன்னெச்சரிக்கையாக மின்சாரத்தை நிறுத்தி விடுவார்கள். தெருவிளக்கு உட்பட அனைத்து விளக்கும் நின்று போகும். ஒரே இருட்டு கும்மிருட்டு தான். கண்கள் இமைகள் திறந்தாலும் பார்க்க முடியாமல் தடுமாறும்.
இருள் காட்டு விலங்கு போல் சத்தம் இல்லாமல் அசைந்து கொண்டு மிரட்டும். விளக்கு ஒளியில் பல பல நிழல்கள் வந்து வந்து போகும். கண்கள் ஓயாமல் தேடிக் கொண்டிருக்கும். பார்வை என்ன வென்று எளிதில் கண்டு கொள்ள முடியாது. இருளில் உடல்கள் காணாமல் போகும் குரல்கள் முன்னே வந்து நிற்கும்.
கண்களால் தான் நாம் இவ்வுலகத்தை காண்கிறோம் என்ற எண்ணம் வரும். இமைத்து கொண்டே இருப்போம்.
நிறங்கள் இல்லாத உலகத்தில் எண்ணங்களில் தோன்றிய நிறங்களை கண்கள் மூலம் காணும் போது நிறங்களின் பரவசம் ஆனந்தமாக இருக்கும் உடைத்த வானவில் போன்று. இது ஏதோ கண்கள் காட்டும் மாய உலகம் விரிந்து கொண்டே இருக்கும்.
ஒரு முறை நானும் என் நண்பன் சகாயமும் விவரம் தெரிந்த நாட்களில் திரைப்படம் செல்வது வழக்கம்.. ஒரு நாள் சற்று தாமதமாக சென்றோம். படம் தொடங்கி விட்டது பெரிய
சத்தத்துடன். ஜேம்ஸ் பாண்ட் என்பது நினைவு. உள்ளே நுழைந்தவுடன் ஒரே இருட்டு. நாம் காணாமல் போனது போல ஒரு இருட்டு. படம் பார்க்கும் ஆர்வத்தில் இருக்கை நோக்கி சென்றோம் சகாயம் ஒருவர் மடியில் தெரியாமல் உட்கார்ந்து விட்டான். நான் ஒரு பெண்ணின் மடியில், நல்ல வேளை உட்காரவில்லை. ஒரு நல்ல வார்த்தை வாங்கி கொண்டான் சகாயம். நான் அடி வாங்காமல் நல்ல உள்ளத்தால் தப்பித்தேன். இங்க சீட்டு இல்ல என்றொரு இனிய குரல். கூறியது. நடக்கும் பாதையில் சிறு நேரம் நின்றோம். கொஞ்ச நேரத்தில் இருள் பழகிய கண்கள் யாவற்றையும் தெளிவாக காட்டியது. நாங்கள் சென்றது முதல் வகுப்பு. பின்பு டார்ச் லைட் உதவியுடன் இருக்கையை கண்டு பிடித்து உட்கார்ந்து படம் பார்த்தோம்.
அதன் பின்பு ஒரு நாளும் தாமதமாக சென்றதில்லை. விளம்பரத்துடன் தான் நானும் சகாயமும் படம் பார்ப்போம்.
அவ்வபோது விழிகள் பற்றி நினைவு வந்து போகும்.
நீல வானம் மேக மூட்டத்துடன் ரம்மியமாக இருந்தது காலையில். அன்று வழக்கம் போல் வேலைக்கு தாமதம் ஆகிவிட்டது. எப்படி சரி செய்வது. காலை உணவை அலுவலகத்தில் சாப்பிடுவது வேடிக்கையை தவிர்ப்பது நலம் விசாரிக்காமல் பார்த்தும் பார்க்காதது போல் செல்வது முக்கியமாக தேநீரை மறப்பது வாகனத்தின் வேகத்தை கூட்டுவது.
ஏற்கனவே கடிகாரத்தை 15 நிமிடங்கள் வேகமாக வைத்தது ஞாபகம் வந்து கொஞ்சம் நிம்மதி வந்தது. 15 நிமிடங்கள் கையில் உள்ளது என்று.
சரியான நேரத்திற்கு சென்று விடலாம் என்ற நம்பிக்கை வந்தது. வெளியே வந்தேன் பச்சை வானத்தில் செம்மஞ்சள் கொன்றை தன் சிவந்த இதழ்களை தெருவில் வீசி கோலம் போட்டு இருந்தது. பக்கத்து வீட்டு சீசர் கத்தியது சத்தமாக. நாம் தாமதமாக செல்வது அதற்குக் கூட தெரிந்து விட்டது.
கொஞ்ச தூரம் சென்று சாலையில் திரும்பியவுடன் எதிரே அந்த பெண் சாலையோர நடைமேடையில் ஒரு நீண்ட ஸ்டிக்கை வைத்து ஊரையே தட்டி தட்டி சரி செய்து விடலாம் என்ற விருப்பத்தில் யாரையும் மோதி விட கூடாது என்று முதுகை காட்டி சென்று கொண்டிருந்தாள்.
அவள் பெயர் தெரியவில்லை. தினமும் அவளை பார்ப்பேன். தேர்ந்தெடுத்த ஆடையாக நீட்டாக போட்டு கொண்டு இருப்பாள். பக்கத்தில் உள்ள அரசு கல்லூரியில் படிப்பாள் போல. ஏதோ பக்கத்தில் உள்ள கிராமத்திலிருந்து வந்து படிக்கிறாள் என்று நினைக்கிறேன். முகத்தில் ஒரு கண்ணாடி அவள் விழிகளை மறைத்து இருப்பாள். அது எடுப்பாக வட்டமாக இருக்கும். முகத்தில் எப்போதும் குங்குமம் வைத்து இருப்பாள். ஒரு ஒளி இருக்கும். ஒரு நாளும் தவறுவதில்லை. எப்போதும் அவள் தோழியுடன் தான் வருவாள். இன்று ஏனோ அவள் வரவில்லை.
தினமும் அவளை பார்க்காமல் இருந்தது இல்லை. ஒரு வெள்ளை பை எப்போதும் அவளுக்கு துணையாக வலது தோளில் இருக்கும். கைகளில் ஒரு புத்தகம் இருக்கும். இரயிலில் படிப்பாள் போல. எனக்கு பொறாமையாக இருக்கும். என்ன புத்தகம் என்று கேட்க தோன்றும் ஆனால் எப்படி கேட்பது விட்டு விடுவேன். ஓரிரு முறை பார்த்து இருக்கிறேன் இரயில் நிலையத்தில். அவளை பார்க்கும் போது எல்லாம் தோன்றும். இந்த சாமி பூதம் பேய் பிசாசு எல்லாம் இல்லவே இல்லை என்று என்னுடைய மாமாவின் குரல் கேட்கிறது.
பரமானந்தம் அழைத்தார். வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு பேசினேன். எப்போதாவது இப்படி செய்வது உண்டு இல்லை என்றால் ஓடிக்கொண்டே பேசுவேன். எங்க மேலாளருக்கு சிவாஜி என்ற கோட் பெயர் வைத்திருந்தோம். நன்றாக பேசுவார் பல சமயம் நடிப்பார். சிரிக்கிறேன் என்ற பெயரில் வாய்க்கு உடற்பயிற்சி செய்வார். ரொம்ப நல்லவர் எதையும் மனதில் வைத்து கொள்ளமாட்டார் ரேடியோ போல் பிராட்காஸ்ட் பண்ணுவார்.
சார் good morning சார்
Good morning சார்
எங்க இருக்கறீங்க
வந்துட்டு இருக்கேன்
ஒரு உதவி
சொல்லுங்க சார்
ஒரு லெட்டரை வங்கியில் கொடுக்கணும்.
If you don’t mind
நான் மறந்துட்டேன்
கொஞ்சம் வீட்டிலிருந்து வாங்கி கொடுக்க முடியுமா
கண்டிப்பா சார்.
உடனே லெட்டர வாங்கி வங்கியில கொடுத்துட்டு வந்து கொண்டு இருந்தேன்.
அவள் எதிரே வந்து கொண்டு இருந்தாள். சட்டென்று என்ன நினைத்தாலோ வழிமாறி நடைமேடையை விட்டுட்டு சாலையோரமாக வந்து கொண்டு இருந்தாள்.
என்னை கடந்து ஒரு வண்டி சென்றது. ஒரு கைல செல்லு அது காதுக்கு முட்டு கொடுத்து பேசிக்கிட்டே ஒரு கைல வண்டி அது யார் பேச்சையும் கேட்காமல் ஓடிக் கொண்டு இருந்தது.
அவனுக்கு கேட்காமல் ஒரு நல்ல வார்த்தை என்னிடம் இருந்து வந்து நின்று அவனை அழைத்தது.
அவள் கொஞ்சம் விலகி ஒரு அறை அடி சாலைக்குள் வருவதற்கும் இவன் யாரிடமோ மிகத்தெரிந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும். டீ மாஸ்டர் டீயை வானுக்கும் பூமிக்கும் ஆற்றி நுரையை எழுப்புவது போல சண்டை இட்டான். எல்லோரும் பார்த்தார்கள். கவனம் கலைந்து சாலையை விட்டு செல்லுக்கு சரியாக சென்றது. நான் கத்தினேன் அவளும் பயந்து கத்தினாள். அவளை இடித்து விட்டான் என்று நினைத்தேன். நல்ல வேளை அவளை இடிக்காமல் அவள் முன்னால் இருந்த வேகத்தடை எழுந்து குறுக்கே பாய்ந்து அவனை தடுத்தது. அவள் தப்பித்து கொண்டாள்.
அவன் பாவம் வேகத்தடையில் பிரேக் போட முடியாமல் கீழே விழுந்தான். எந்த வாகனமும் வர வில்லை. தலைகவசம் இல்லை இருந்தாலும் தலை தப்பித்தது.
முருகா முருகா
கூட்டம் கூடி விட்டது. அவளை அனைவரும் திட்ட தொடங்கினார்கள். பக்கத்திலிருந்து ஓடி வந்த ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர்கள் அவனை தூக்கினார்கள். இல்லை அவள் மீது எந்த தப்புமும் இல்லை, இவன் தான் செல்லு பேசிட்டு வந்தான் என்றார் ஒருவர்.
அவனுக்கு நினைவு இருந்தது. கையிலும் காலிலும் நல்ல அடி மெதுவாக வந்ததால் தப்பித்தான். யாரோ அழைத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. அவனை வேகமாக ஏற்றி சத்தமிட்டு கொண்டே சென்றது.
அவள் மிகவும் பயந்தது போய் விட்டாள். அழ தொடங்கினாள். என்ன சொல்வது என்று தெரியவில்லை. பாத்து வர வேண்டியது தானே என்று ஒருவர் கூறினார். அதிகமாக அழ தொடங்கினாள்.
நான் வழக்கம் போல் எட்டி பார்த்து விட்டு சென்று விடுவேன். இன்று இந்த பெண்ணுக்கு உதவணும் என்று தோன்றியது. ஏன் என்று தெரியவில்லை.
அலுவலகத்திற்கும் நேரமாகி விட்டது
நல்ல வேலை ராஜா வந்தான். எங்க தெரு தான். ஆட்டோ ஓட்டுரான்.
என்னை பார்த்து விட்டு விசாரிக்க வந்தான்.
நான் ராஜாவிடம் அந்த பெண்ணை அவள் சொல்லும் இடத்தில் இறக்கி விடு என்றேன். பணம் வீட்டில் வந்து வாங்கிக்கோ எடுத்துட்டு வர வில்லை என்றேன்.
அண்ணா நான் போகும் வழிதான் பணம் வேண்டாம்.
அந்த பொண்ண வர சொல்லுங்க
நான் அவளிடம் எங்க போகனும் என்றேன்.
அண்ணே நான் போயிடுவேன். தினமும் செல்லும் வழிதான். இன்று என்னுடைய நேரம் சரியில்லை.
பரவா இல்லை எங்க போகனும்.
நான் இரயில்வே ஸ்டேசன் போகணும்.
சரி
என்று ஆட்டோவில் ஏற்றி விட்டேன்
தாங்ஸ் அண்ணா
உன் பெயர் என்ன
பார்வதி
அது என்ன புத்தகம் கையில்
திலீப்குமார் சார் புக்கு….