விக்ரம்







(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம் – 1

சிங்க இலச்சினையுடன் பல மாரிக் காயங்களைப் பார்த்திருந்தது அந்தப் பெயர் பலகை, அதில் ‘பாரத் சர்க்கார்பாதுகாப்பு மந்திரி சனப ப்ராஜெக்ட் அக்னி புத்திரன்’ என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் மற்ற மொழிகளிலும் எழுதியிருக்க. ‘இந்த எல்லையை மீறிச் செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்’ என்று எச்சரிக்கையும் தனிப்பட்டு எழுதியிருந்தது. இதைப் படிக்குத் தெரியாத, இதைப் பற்றி எந்தவிதப் பயமும் இல்லாமல் ஒரு கருங்குருவி அதன் மேல் உட்கார்ந்து கொண்டிருக்க, தூரத்தில் ஒரு பெரிய வாரி ‘ஏதோ ஒன்றை’ மெல்ல இழுத்துக் கொண்டு வருவது தெரிந்தது. ஏதோ ஒன்று என்றுதான் அதைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. கான்வாஸ் துணி மூடி இறுகக் கட்டியிருந்தது. அதன் முன்புறம் ஒரு காவல் ஜிப்பும் பின்புறம் ஒரு காவல் ஜீப்பும் அது ஏதோ அலட்டிக் கொள்ள வேண்டிய சமாசாரம் என்பதைத் தெளிவாக்க, ஜீப்புகளில் வந்த ராணுவ ஜவான்களும் தீவிர முகத்துடன் வர, அந்த வண்டித் தொடர், வேலியை நெருங்கிய போது தடுப்பில் நிறுத்தப்பட்டது. ஒரு ஐவான் குதித்து இறங்கி அங்கு வந்த ராணுவ அதிகாரிக்கு சல்யூட் அடித்துவிட்டுக் காகிதக்களைக் காட்ட அவர் அதைப் பரிசீலித்து விட்டு ‘எல்லாம் சரியா இருக்குதில்லை?’.
‘எஸ் சார்’
கான்வாஸின் ஒரு முனையைச் சரியாக இழுந்து, ‘ரெண்டு மணிக்குள்ள ஸ்ரீஹரிகோட்டா போயிரணும். எங்கயும் நீக்காதீங்க. வழில ஏதாவது தடங்கல்னா உடனே மெஸேஜ் கொடுத்துரு.ரேடியோ செக் பண்ணிட்டில்ல?’
‘எல்லாம் சரியா இருக்கு சார்’
‘ஓ.கே. ஆல் த பெஸ்ட்’, அவர் கட்டை விரலை உயர்த்திக் காட்ட, தடை விலக்கப்பட்ட வண்டித் தொடர் கம்பிரமாகப் புறப்பட்டது.
மலைப் பாதையில், பாம்பு போல் நெளிந்து செல்லும் வழியில், அந்தத் தொடர் மெல்ல ஊர்ந்து செல்ல, அந்த இடத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் சற்று மேடான பகுதியில் பைனாகுலர் மூலம் அத்த வட்டாரத்தை வருடிக் கொண்டிருந்த ஒருவன் சட்டென்று நிறுத்தி, ‘வந்தாச்சு’ என்று சிரித்தான் அவனருகே சின்னதாக வாக்கி டாக்கி இருந்தது; அதை எடுத்து, ‘சுதி சார், வண்டி கிளம்பிருச்சு’ என்றான்.
ரேடியோ குரல் பதிலாக, ‘கிளம்பிருச்சா? நீ அங்க போயிரு உடனே, நான் முகூர்த்தத்துக்கு வந்தர்றேன்’.
ரேடியோ கரகரப்பில்கூட இந்தக் குரலில் இருந்த அலட்சியமும் தன்னம்பிக்கையும் தெளிவாகத் தெரிய பைனாக்குலர் இளைஞன் அருகே இருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டு அதை உதைத்துக் கிளப்பிக் குதித்துச் சென்றான்.
அங்கிருந்து இன்னும் மூன்று கிலோமீட்டர் தள்ளி மலைப்பாதை வளைவில் இருவர் காத்திருந்தார்கள் அவசரமே படாமல் உட்கார்ந்த வாக்கில் சுதாரித்த நிலையில் இருக்க, மோட்டார். சைக்கிள் வருவதை ஆர்வமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மோட்டார் சைக்கிள்காரன் நிறுத்தி, ‘வருது’ என்றான்.
இருவரில் ஒருவன் நிதானமாக எழுந்து அருகே வைத்திருந்த ஒரு பஸூக்கா வகைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். மற்றவன் காதில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்த டிரான்ஸிஸ்டரைப் பிடுங்கி தூர எறிந்து, “வாடா, வேலை செய்யலாம்” என்றான்.
இருவரும் சாலையின் மத்தியில் போய் நின்று கொண்டு எதிரே வரப்போகும் குறியை நோக்கித் தத்தம் துப்பாக்கிகளை அமைத்து இரண்டு கைகளாலும் அழுத்தி, தயாராகக் கால்கள் பரப்பிப் பதற்றமே இல்லாமல் காத்திருந்தார்கள்.
மிக மெளனமாக இருந்தது. லேசாகப் பட்சிகளின் சப்தம் கேட்சு. துல்லிய நீல வானம். ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அந்த ஜீப், லாரி ட்ரெய்லர் வரும் ஓசை தெளிவாகக் கேட்டது. இவர்கள் இருவரும் சிலைபோலக் குறி விலகாமல் காத்திருக்க, மோட்டார் சைக்கின் இளைஞன் ஒரு வாரப் பத்திரிகை எடுத்து நிழலில் உட்கார்ந்தபடி படித்துக் கொண்டிருந்தான்.
வரிசையின் முன் பகுதியில் ஜீப்பில் வந்துகொண்டிருந்த காவவாளி தன் சக டிரைவருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க அந்தத்திருப்பத்தில் திரும்பியதும் முதன் முதலாகச் சாலை மத்தியில் காத்திருந்த அவ்விருவரையும் பார்த்தபோது ஏதும் தோன்றாமல் ஆரன் அடித்தான்.
சட்டென்று அவர்கள் கைகளில் வைத்திருந்த துப்பாக்கிகள் உறைக்க, ‘மை காட், லுக் அவுட்’ என்று கத்தினான்.
அவர்கள் இருவரும் வெளியே பாய்வதற்குள் ‘டிச்சாங்! டிச்சாங் !’ என்று ஜீப்பின் கண்ணாடி வெடித்து ஒருவன் முகம் ரத்தக்களறி ஆயிற்று. பஸுக்காலின் அடுத்த தாக்குதலில் ஜீப் உருண்டது. பின்னால் காபினிலிருந்து மற்றொரு காவலாளி வெளிப்பட்டு, ஓட முடியாமல் வெளிப்படும் நிலையில் குண்டடி பட்டு விழுந்தான். பின் ஜீப்காரர்கள் ஒருவன் குறுக்கே ஓட, தடுக்கி முழங்கால் சில்லுப் பெயர, அடுத்த குண்டு தோளில், அடுத்த குண்டு மார்பில் என்று தொடர்ந்து வெடிக்க, சுருண்டு நின்று போனான். ஒரே ஒரு காவலாளி மட்டும் தப்பித்து தீவிரமாக மலைச்சரிவில் ஒட, நிதானமாக, மிக நிதானமாக குறிபார்க்கப் பட்டு அவன் பின் மண்டையில் சட்டென்று ஒரு ரத்தப் பொந்து ஏற்பட, சரிந்து சரிந்து விழுந்தான். அடித்தவன் சிரித்தான்.
கீழே கிடந்தவனின் முதுகில் பெட்ரோல் பட்டு எரிந்தது. ஜீப் அனாதையாக நின்றது. உடல்கள் சாலையில் இங்குமங்கும் கிடக்க, மொத்தம் மூன்று நிமிஷம்தான். இப்போது மறுபடியும் அந்த இடம் அமைதியாகிவிட்டது. மெல்லிய பட்சிக் குரல்கள் கேட்க, அம்மூவரும் கம் மென்று கொண்டே அந்த உடல்களின் அருகே வந்தனர். ஏதோ ஒரு ரக்சியம் போல ஒரு பென்ஸ் கார் உறுத்தாமல் அருகே வந்து நின்றது. அதன் கதவை அவர்களில் ஒருவன் திறக்க, சுகிர்தராஜா வெளிப்பட்டான்.
சுகிர்தராஜாவுக்கு முப்பது முப்பத்தைந்து வயதிருக்களாம். நல்ல உயரமான முகத்தில் பாதியை வெயில் கண்ணாடி மறைத்திருந்தாலும் அவனது காலர் இல்லாத கோட்டையும் துல்லியமான உடைகளையும் கவனித்தால் ஏதோ ஒரு மத்திய மந்திரி போலத் தான் இருந்தான். சிவந்த உதடுகள். ஒரு புல்லைப் பிடுங்கி. அதைக் கடித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்து, குழந்தை ஆர்வத்துடன், ‘காரியம் ஆச்சா?’ என்றான்.
‘சுத்தமா முடிச்சாச்சு அய்யா’.
சுகியின் சகவனம் பின்னால் அனாதையாக நின்றுகொண்டிருந்த ட்ரெய்லரில் கான்வாஸ் போட்டு மூடியிருந்த பொருளின் மேல் தான் இருந்தது. இடைப்பட்ட ஒரு பிணத்தை மிதித்துத் தாண்டிக் கொண்டு, அதை நோக்கிச் சென்று சரக்கென்று அதை மூடியிருக்கும் கான்வாஸ் மறைப்பை ஒரு சொடுக்கில் விலக்கினான். காலையில் அருமையான வெளிச்சத்தில் பளபளவென்று சுமார் முப்பதடி நீளமிருந்த ஏவுகணை ராக்கெட் அது. முகம் சற்றுத் தட்டையாக, வால் பகுதியில் செதிள்களாக, ஏதோ ஓர் எலக்ட்ரானிக் அம்புபோல, வானை நோக்கிக்கொண்டிருந்தது. ‘எப்போதும் புறப்படுவேன். எங்கேயும் போவேன். எதையும் அழிப்பேன்’ என்பது போல ஒரு விஞ்ஞான ஆணவத்துடன்.
சுகிர்தராஜா அதைப் பார்த்ததும் ஒரு சிறு குழந்தைபோல சந்தோஷம் முகத்தில் தெரிய, ‘இதப் பார்றா!’ என்றான், ராக்கெட்டின் உடலில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் ‘அக்னி புத்திரன்!’ என்று எழுதியிருந்தது.
‘அக்னி புத்திரனா நீ! உன்னை வெச்சுக்கிட்டு என்னவெல்லாம் ஆட்டம் காட்டப் போறேன். பார்த்துக்கிட்டே இரு! பாத்தியா சோமு! அக்னிபுத்திரன்! இட்ஸ் மைன்! என் புத்திரன்! என்னுது!’ என்று அதை வாஞ்சையுடன் தடவிக் கொடுக்க படபடவென்று வானத்தில் சப்தம் கேட்க, அவர்கள் மேலே பார்க்க, ஓர் அலுமினியப் பறவை போல ஹெலிகாப்டர் ஒன்று மெல்ல அவர்களை நோக்கி இறங்கியது. சுகிர்தராஜா மகிழ்ச்சியுடன், ‘வந்துட்டான்யா! வா! வா! சரியான சமயம்! எல்லாம் சொன்ன வேளைக்கு நடக்குது!’
அவர்கள் யாவரும் வானத்தில் பார்த்துக் கொண்டிருக்க, கீழே கிடந்தவனில் ஒருவனுக்கு வேசாக உயிர் இருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். அந்த ஜவான் சிரமப்பட்டுக் கண் விழித்து, தன் துப்பாக்கியை நோக்கி மெல்ல ஊர்ந்தான்.
ஹெலிகாப்டர் புழுதி கிளப்பிக்கொண்டு சற்றுத்தள்ளி வந்து இறங்குவதை சுகிர்தராஜா ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஜவான் சிரமப்பட்டு எழுந்து துப்பாக்கியை எடுத்துக் குறிபார்த்து சுகிர்தராஜாவை நோக்கி நடுங்கும் கைகளுடன், ‘நிறுத்து எல்லாத்தையும்!’ என்றான். ‘பொசுக்கிடுவேன்’ என்றான். ‘சுட்டுப் பொசுக்கிடுவேன்’.
சுகிர்தராஜா பதட்டப்படாமல், புல்லைக் கடித்துக் கொண்டே திரும்பிப் பார்த்துச் சிரித்தான்.
‘சிரிக்காதே! தீர்த்துருவேன் பொசுக்கிடுவேன்!’
‘ஏண்டா, ஒழுங்காக் கொல்ல மாட்டிங்களா? அரைகுறைப் பசங்கப்பா… இரு, இரு என்ன செய்யணும்? கையைத் தூக்கணுமா? ஹாண்ட்ஸ் அப்பு அவ்ளவ்தானே? இதோ’. சுகி அவனருகில் சென்றான்.
குற்றுயிர் ஜவான் தன்னை நோக்கிக் காட்டிய துப்பாக்கி முனையைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த சுகிர்தராஜா, ‘இருப்பா, இருப்பா! டேய். எல்லாரும் போட்டுருங்கடா. எக்குத் தப்பாச் சுட்டு வெக்கப் போறான்!’ என்று அவனை மேலும் நெருங்க, அவன் பதற்றத்தில், ‘கிட்ட வராதே, கிட்ட வராதே, சுட்றப் போறேன், சுட்றப் போறேன்’, என்றான். கைகள் நடுங்கின. சுகிர்தராஜா மெல்லத் தன் கைகளை மேலே உயர்த்த அவன் அணிந்திருந்த கோட்டுக்குள் ஒளித்து வைத்திருந்த சிறிய துப்பாக்கி ‘ட்டுய்’ என்று வெடித்தது. அதைச் சற்றும் எதிர்பாக்காத ஜவான் மார்பில் அடிபட்டு அப்படியே சரிய, அவன் விரல் அவசரமாக அழுத்திய துப்பாக்கிக் குண்டு இலக்கில்லாமல் எங்கோ பறந்தது.
சுகி, ‘எல்லாம் நானே செய்ய வேண்டியிருக்கு! ஞாபகப்படுத்துங்கடா. இவனுக்கு ஒரு நிமிஷம் மௌனம் அனுஷ்டிக்கணும். கடுமையான தேச சேவை’ என்று கீழே கிடந்தவனைக் காலால் நிரடினான்.
இதற்குள் ஹெலிகாப்டர் சற்று அஜாக்கிரதையாக, மண்டைச் சக்கரம் சுற்ற கூட்டுக்கு இரை கொண்டு வந்திருக்கும் பறவை போல அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க அதன் வயிற்றி லிருந்து இரண்டு கொக்கிகள் ஏவுகணை மேல் மாட்டப்பட்டு மெல்ல அது தூக்கப்பட்டது. சுகிர்தராஜா வலது கைக் கட்டை விரலை உயர்த்திக் காட்டி பென்ஸ் காரில் ஏறிக் கொள்ள, காப்டர் சாய்ந்து மடக்கி ராக்கெட் பயணியுடன் பறந்து சென்று மறைந்தது. மோபைக்கில் இருவர் தொடர மற்றவர்கள் காரின் பின் சீட்டில் நெருக்கி உட்கார்ந்து கொள்ள, கார் புறப்பட்டும் சென்றது. இந்த இடத்தில் சற்று நேரத்துக்கு முன் இத்தனை ரத்த சேதம் நேர்ந்ததா என்று வியக்கும்படி அமைதி கவிழ்ந்து கொள்ள, கீழே கிடந்த உடல்கள் அசையாமலிருக்க, ஓர் உடல் மட்டும் முதுகில் பெட்ரோல் எரித்ததற்கு ஏற்ப ஏதோ ஒரு ரத்தச் சூடு ஏற்பட்டுக் கொஞ்சம் புரண்டு நின்று போனது.
சுகிர்தராஜாவின் கார் சற்று நேரம் கழித்து எதிரே சென்ற போலீஸ் ஜீப்பையும் சைரன் அலறலையும் பார்த்து. ‘வழக்கம் போல லேட்டு, போங்க போங்க.’ என்றான்.
அத்தியாயம் – 2
ப்ரா என்றால், உங்களில் பலருக்கு மென்மையான கன்னிப் பெண்கள் நெஞ்சத்தில் அணிந்த கச்சணிகள் நினைவுக்கு வரலாம். ஆனால் இந்தக் கதையைப் பொருத்தவரையில் ப்ரா என்பது பெண்களின் மார்பகத்துக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லாத ‘பீரோ ஆஃப் ரிஸர்ச் அண்ட் அனாலிஸிஸ்’ என்கிற அரசாங்க அலுவலகம்.
இதன் சற்றே நவீனமான உறுத்தாத கட்டடத்தை நீங்கள் நந்தம்பாக்கம் போகிற வழியில் பார்த்திருக்கலாம். பார்த்து இங்கே என்ன செய்கிறார்கள் என்று வியந்திருக்கலாம். அதன் பித்தளைப் பிரகாச பெயர்ப் பலகை அத்தனை சொல்லவில்லைதான். கட்டடம் மிக அமைதியாக இருக்க, உள்ளே போகேன்வில்லா கொடிகள் அனைத்திருக்கும் போர்ட்டிகோ வரவேற்பு அறையில், தீட்டப்பட்ட நகங்களுடன் பெமினா படித்துக் கொண்டிருக்கும் பெண்ணோ அந்தக் கட்டடத்தின் எட்டாவது மாடியில் நடக்கும் மிசுத் தீவிரமான, நம் நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியமான ஒரு சமாசாரத்தைப் பற்றிப் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று – எங்கே இந்த வாக்கியத்தை ஆரம்பித் தேன்? ஞாபகமில்லை. முடித்துக் கொள்ளவும். அவசரம்!
ஒரு நீண்ட முட்டை வடிவ மேசையின் தலைமாட்டில் ஜிவி ராவ் உட்கார்ந்திருந்தார். சுமார் நாற்பத்தைந்து வயதிருக்கலாம். டீக்காக சூட் அணிந்து பைப் பிடித்துக்கொண்டு நல்ல நாட்களில் இவரிடம் ஃபிலாசஃபி, கெமிஸ்ட்ரி, லா என்று எது வேண்டுமானாலும் பேசலாம் போல இருந்தார். இன்று மிகவும் பதற்றத்தில் இருந்தார். எதிரே மேசையின் மற்ற நாற்கால்களில் ராணுவ கடற்படை, விமானப்படை, போலீஸ் பெரிய அதிகாரிகள் வீற்றிருக்க, ஒரு நாற்காலி காலியாக இருந்தது. லேசான புகைமண்டலம் படிந்திருக்க எதிரே ஒரு வீடியோ திரையில் ஹிரோஷிமா வகை அணுகுண்டு வெடித்ததின் நாய்க்குடை விளைவுகள் மௌனமாக சலனித்துக் கொண்டிருக்க ராவ் வீடியோவை அணைத்து விட்டு, ‘ஜென்டில்மன். நீங்க பார்த்தது முதல் அணு ஆயுதம். இன்னிக்குக் காலையில், பத்து பத்துக்கு ஸ்ரீஹரிகோட்டா போற பாதையில் 135 வது கிலோமிட்டரில், அரசாங்கத்தைச் சார்ந்த ரகசிய மிஸ்ஸைல் கடத்தப்பட்டது. பெயர் அக்னிபுத்திரன்’.
ராணுவம், ‘ஜிவி! ஹௌ டிட் திஸ் ஹாப்பன்?’ என்றார்.
‘எஸ்கார்ட் ஜீப் தாக்கப்பட்டது. அப்புறம் ஒரு ஹெலிகாப்டர் ஒரு கார், மோபைக், நாலைஞ்சு ஆளுங்க. சரியா நிமிஷத்திலே கடத்திக்கிட்டுப் போயிட்டங்க. ப்ரொஃபஷனல்! எ பர்ஃபெக்ட் ஜாப்! இது என்ன இண்டியாவா, அமெரிக்காவா?
‘மிலிட்டரி போலீஸ் ஜவான்கள் அஞ்சுபேர் இறந்து போயிருக்காங்க’.
‘ஜிவி! யார் அதைச் செய்திருப்பாங்க? ஏதாவது க்ளூ?
‘இல்லை. இன்னம் இல்லை.’
‘கண்டுபிடிச்சுரலாம்’ என்றார் போலீஸ் கமிஷனர்.
‘முதல்ல எங்க ஆபீஸ் சைக்கிள் ஒண்ணு காணாமப் போயிருக்கு, அதைக் கண்டுபிடிங்க. இது அத்தனை சுலபமில்லை. பெரிய இண்டர்நேஷனல் டெர்ரரிஸ்ட்டுங்க…’
‘சர்தாரா?’ என்றார் ராணுவ அதிகாரி. அவரே சந்தார்தான்.
‘ஒண்ணுமே தெரியலை’.
‘காணாமல் போனது ராக்கெட்டா வெடிகுண்டா?’
ஜிவி ராவ் சற்று ஆயாசத்துடன், ‘விஞ்ஞானிகள் பாஷைல் இண்டர்மீடியட் ரேஞ்ச் டாக்ட்டிகல் மிஸ்ஸைல், அதன் மூக்கில் ஒரு அணு ஆயுதம் இருக்கு. வீடியோ காட்டினேனே. அதைப் போலப் பத்து மடங்கு சக்தி!’
‘மேலிடத்தில் இப்பத்தான் போன் பண்ணியிருந்தாங்க. வெளியே தெரிய வேண்டாம்; ஒரு வாரத்துக்குள்ளே மீட்டாகணும்னு’.
அப்போது டக் டக் என்று அந்தக் கதவு தட்டப்பட, ராவ் தன் உதவியாளரை விளித்து, ‘தங்கராஜ், யார் பாரு’ என்றார்.
தங்கராஜ் திறந்த கதவை அகற்றிக்கொண்டு, மேட்டி, சட்டை துண்டுடன் ஒருவர் உள்ளே வர-
‘வாங்க மிஸ்டர் இளவழகன். ஜென்டில்மன், யூ நோ மிஸ்டர் இளவழகன், மினிஸ்டர்!’
‘என்ன விசயம் ராவு?’ என்றார் இளவழகன். ‘என்னவோ பேசிக் கிட்டாங்க. ஏதோ காணாமப் போயிருச்சாம். ஸாரி கொஞ்சம் லேட்டாயிருச்சு, வண்ணார்பேட்டைல் ஒரு தண்ணீத் தொட்டி திறந்து வைச்சுட்டு வர லேட்டாயிருச்சு, என்ன காணம்?’
ஜிவி ராவ் பொறுமையுடன் ‘மிஸ்ஸைல்ங்க!’
‘தமிழ்ல சொல்லுங்க’
‘ஏவுகணை பாணம்!’
‘அதாவது இங்க பத்தவெச்சா அங்க தள்ளிப்போய் விழும்?’
‘ஆமாம்.’
‘சிவகாசி சமாசாரம்!’
‘இல்லைங்க, கொஞ்சம் பெரிய ஆயிரம் மைல் கூடத் தள்ளிப் போய் விழும். மேலும் அதன் முனையிலே ஒரு அணு ஆயுதம்! அணு குண்டு மாதிரி இருக்கு.’
இளவழகன் யோசித்து, ‘அதாவது சப்பான்காரன் வெடிச்சானே அது மாதிரியா? சனங்க செத்துப் போயிருமில்ல? அய்யய்யோ! ராவு. அதைக் கொணாந்துருய்யா. எங்காவது நம்மூர் ஆம்பூர் பக்கம் வெடிக்க வெக்கப் போவுது? இப்பத்தால் கரும்பு போட்டிருக்கம். ஆமா, அனு ஆயுதங்க நாம் செய்யற தில்லைன்று மக்கள் மன்றத்திலே…’
‘தபாருங்க, அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லை. என்னப்பா?’.
தங்கராஜ் அவரிடம் அவசர டெலக்ஸைக் கொண்டு வந்து கொடுத்து அருகே பவ்யமாய் நின்றான். தங்கராஜ் இந்த ஆபிசில் இருபத்தைந்து வருஷங்களாக ஊறியவன் விசுவாசம் என்பது அவன் முகத்தில் எழுதியிருந்தது. திறமை என்பது அவன் துல்லியமான உடைகளிலும் தரமான டையிலும் தெரிந்தது. ‘இது இப்பதான் சார், டெலக்ஸ் வந்தது.’
ராவ் அதைப் படித்துப் பார்த்து ராணுவ விமான கடற்படை அதிகாரிகளிடம் காட்டினார்.
‘இம்பாஸிபிள்! திஸ் இஸ் லுடிக்ரஸ்! நோ! நாட் அட் ஆல்! நோ’
‘என்னது இங்கிலீஷ்ல திட்டிக்கிறீங்க? என்ன தந்தி?’
‘போன வாரம் செஷன்ஸ் கோர்ட்ல மூணு பேருக்குத் தண்டனை கொடுத்தாங்களே. தூதரகக் கொலை வழக்கில. ஞாபகம் இருக்கா?’
‘ஆமா’
‘அவங்களை உடனே விடுதலை பண்ணணுமாம். பத்து மில்லியன் டாலர் பணம் வேணுமாம்.’
‘மில்லியன்னா எவ்வளவுங்க?’
‘அது எவ்வளவோ பணமாவது குடுத்துத் தொலைக்கலாம். அந்த ஆளுங்களை எப்படி விடுதலை பண்ண முடியும்? அவங்க மேலே எக்ஸ்ட்ராடிஷன்லாம் இருக்கு, தேசவிரோதக் குற்றங்கள்!’
‘ஆமாமா. அதெப்படி முடியும்? முடியாது முடியாது’ என்று தலையைப் பலமாக ஆட்டினார் இளவழகன். ‘வேற எதும் வழி இருக்கா? ஏன்யா ராவு, உங்க ஆபிஸ்ல இதைக் கண்டுபிடிக்கக் கூடிய பயலுவ துடியா யாரும் இல்லையா?’
‘தங்கராஜ், அந்த ஃபைல எடுப்பா!’
ஜிவி ராவ் ஃபைலப் பிரிக்க, இளவழகன், ‘ஒரு பேச்சுக்கு நாம சம்மதிக்கிறோம்ன்னு வெச்சுக்க’.
‘பேச்சே இல்லை’ என்றார் கமிஷனர்.
‘அட ஒரு பேச்சுப்பா; கண்டுபிடிக்க முடியலை. ரொம்பக் கொட்டுவாயின்னு வெச்சுக்க. எப்படித் தகவல் தரதாம் அவனுங்களுக்கு! அட்ரஸ் குடுத்திருக்கான் இல்லை? அங்க போய்ப் புடிச்சர்றது?’
‘அவ்வளவு முட்டாள் இல்லை. மாலை பேப்பரில் விளம்பரம் கொடுக்கணுமாம். அந்தப் பேச்சே இல்லை. இம்பாஸிபிள்! இதுக்கெல்லாம் மசியக்கூடாது நாம. முதல்ல அவங்க யாருன்னு கண்டுபிடிக்கணும்.’
‘அப்பக் கண்டுபிடி… யாராவது ஆள் அனுப்பு! சும்மா நச்சு நச்சுன்னு பேசிக்கிட்டு இருந்தா?’
ஜிவி ராவ் அந்த டாஸியர் ஃபைலைப் புரட்ட அதில் பல பேருடைய போட்டோக்களும் ஜீவிதக் குறிப்புகளும் விண்ணப்பத்தாள் போல இருந்தன.
‘கேப்டன், ஒரு ஆள்தான் செய்ய முடியும். ஆனா…’
‘யாரு?’
‘விக்ரம்…’
‘நோ. நாட் தட் பாய்! நோ’ என்று பலமாகத் தலையாட்டினார் நேவி.
‘என், என்ன என்ன?’ என்றார் இளவழகன்.
‘இல்லை சார். அவன் முறைகள்ளாம் நமக்குச் சரிப்பட்டு வராது. மேலும் அவன் ராஜினாமா கொடுத்துட்டான் இல்லை? இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?’
‘கல்யாணம் பண்ணிக்கிட்டுத் தேனிலவு கொண்டாடிக்கிட்டு இருக்கான்’
‘கெட் தட் விக்ரம் ஐ ஸே’ என்றார் விமானப்படை அதிகாரி படபடப்புடன்.
‘தேனிலவை எல்லாம் கலைய்யா? எவன் வங்கிருந்தாலும் போன்ல புடிங்க முதல்லே!’
கடற்படை அதிகாரி முகம் சிவந்து, ‘ஓ! நாட் விக்ரம்! நாட் ஹிம்’ என்று தலையை ஆட்ட ஜிவி ராவ் இண்டர்காமைத் தட்டி, ‘பார்கவி, விக்ரம் எங்கருக்கான்னு உடனே தகவல் வேணும்’ என்றார்.
அத்தியாயம் – 3
தங்கராஜ் விசுவாசமுள்ளவன் என்றுதான் எல்லோருக்கும் தெரியும். அந்த ஆபிஸில் ஒரே ஒரு ஆளுக்குத்தான் தங்கராஜ் தொடர்ந்து புரிந்து கொண்டிருக்கும் துரோகம் தெரியும். அது தங்கராஜ்தான்!
ஜிவி ராவ் மற்ற அரசாங்க அதிகாரிகளுடன் நடத்திய ரகசியக் கூட்டத்தில் மேற்கொண்டு தங்கராஜ் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவனுக்குத் தேவைப்பட்ட தகவல் கிடைத்து விட்டது. விக்ரம் என்பவனை அழைக்கப் போகிறார்கள்.
ஆபீசை விட்டு வெளியே வந்து ட்ரெஷரி போவதாக அவுட் பாஸ் தன் போட்டுவிட்டுப் பஸ்ஸைப் பிடித்து மயிலாப்பூரில் வீட்டுக்குச் சென்றான். சுருள் ஓடு வேய்ந்த சாதாரன வீடு அது. அதனுள்ளே தான் அசாதாரணம். ஃப்ரீஜ், வி.ஸி.ஆர்., டி.வி. என்று தங்கராஜின் துரோக அத்தாட்சிகள், இங்கும் வெங்கடாசலபதி படம்! அதை நீக்கினால் உள்ளே சுவரில் பதித்த அறையில் ஒரு எட்டிஸ்டோன் ட்ரான்ஸ்ரிஸீவர். அதிக தூரம் தொடர்பு கொள்ள ஓர் ஓயர்லஸ் இயக்கம்!
தங்கராஜ் அதன் மைக்கை எடுத்து பட்டனைத் தட்டி, ‘ஸ்டேஷன் டு காலிங் எச் க்யூ ஸ்டேஷன் எச் க்யூ’ என்று மூன்று தடவை சொல்லி நிறுத்தி கவனிக்க, வானத்து ஓசைகளிலிருந்து நடுவே தெளிவாக, ‘கோ அஹெட் ஸ்டேஷன் டு’ என்று பதில் வர, ‘பெரியவர் கூடப் பேசணும்’.
‘ஸ்டாண்ட் பை!’
தங்கராஜ் காத்திருக்க, ‘பெரியவர்’ என்று அழைக்கப்பட்ட சுகிர்தராஜா ஏதோ ஒரு தூரத்தில எங்கோ ஒரு இடத்தில் பாத்ரூமில் நீராவியின் மத்தியில் இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு சுகமாக வீற்றிருக்க, ஒரு நங்கை அவனுக்கு முதுகு தேய்த்துக் கொண்டிருக்க, ஒருவன் பவ்யமாக ஒரு போர்ட்டபில் டெலிபோனைக் கொண்டு வந்து தர, சுகிர்தராஜா அதைத் தட்டி, ‘என்னடா?’.
‘சார், நான் தங்கராஜு!’
‘சொல்லு. எல்லோரும் ராக்கெட்டைக் காணோம்னு பதறிக் கிட்டு இருக்காங்களா? நம்ம டெலக்ஸ் வந்ததா? கைதிகளை வெளியே விடறாங்களா? பணம் தர்றாங்களாமா? என்ன சொன்னான் ராயன்?’
‘விக்ரம்னு ஒரு ஆளை தேடிக் கண்டுபிடிக்க அனுப்பப் போறாங்க. நம்ம கண்டிஷனுக்கெல்லாம் சம்மதிக்கப் போவுறதில்லை!’
‘அப்படியா என்ன பேரு சொன்னே?’
‘விக்ரம்! துடியான ஆசாமி, சண்டை போட்டுட்டு ராஜினாமா செய்தவனைத் திரும்பக் கூப்பிடறாங்க.’
‘அவனை அனுப்பிச்சு என்னைப் பிடிக்கப் போறாங்களாமா? நல்லா இருக்குது! ராயருக்குப் பைத்தியம் புடிச்சிருச்சா? இரு. இங்க வாடி!’
‘அய்யா?’
‘இங்கே ஒரு பெண்ணை!’ சுகிர்தராஜா அந்தப் பெண்ணின் லிப்ஸ்டிக்கை வாங்கி அவள் முதுகின் மேல் ‘விக்ரம்’ என்று குறித்துக் கொண்டு அந்தப் பெயரைக் குறுக்கே கோடிட்டு அழித்தான்.
‘அவன் விலாசம் சொல்லு தங்கராஜ், நான் பாக்கியைக் கவனிச்சுக்கிறேன்’.
இதையெல்லாம் பற்றி எதுவுமே தெரியாமல் விக்ரம் ஓர் ஓட்டல் அறையில் தன் புது மனைவியைப் பட்டப் பகலில் கெட்ட காரியம் செய்து கொண்டிருந்தான். தேனிலவு. புதுமணம் ஆனவர்கள். சூழ்நிலையோ, குதிரைச் சவாரியோ, அறையின் சன்னலைத் திறந்தால் தெரியும் மரகத மலைச் சரிவோ கிறிஸ்டல் துல்லிய வானமோ அவர்களுக்குப் பொருட்டாக இல்லை. வருகிற புதன் கிழமைக்குள் ஒருவரை ஒருவர் சாப்பிட்டு விட வேண்டிய அவசரம் இருந்தது, அவர்கள் செயலில். அவர்கள் உரையாடலைப் பாருங்கள்!
‘விக்ரம்!’
‘யா?’
‘ஒண்ணும் இல்லே. சும்மா உன் பேரைக் கூப்பிடணும் போல இருந்தது!’
‘பேசிக்கிட்டே இருக்காதே! காரியம் பாக்கி இருக்கு!’
‘என்ன காரியம்?’
‘இது’
‘தூ!’
‘அப்புறம் இது!’
‘சே! இதுக்காக இத்தனை தூரம் எதுக்கு வரணும்? மெட்ராஸ்லேயே…’
‘மெட்ராஸ்லேயே?’
எழுந்து ஓடியவளை அப்படியே தன்முன் இழுத்து, ‘ஜாஸ்தி அழகா இருக்கே’ என்றான். மூக்கால் அவள் மார்பில் தோய்த்தான்.
‘மத்த ஹனிமூன் கப்பிள்ஸ்களைப் போலப் பேசேன்’.
‘என் இதயத்தில் ஒவ்வொரு துடிப்பும் ‘மீரா மீரா’ங்கும்! மீராதானே உம் பேரு?’ என்றான் விக்ரம் நாடக பாணியில்.
மீரா அவன் பிடியிலிருந்து தளர்ந்து நழுவி டிரெஸ்ஸிங் டேபிள் அருகில் சென்று உடையைச் சரி செய்து கொண்டு, ‘பசிக்குது’ என்றாள்.
விக்ரமின் கோட்டைத் தடவிக் கொடுத்தாள். ‘உன் கோட்லே கூட உன் வாசனையா?’ என்றாள்.
அவல் விரய்கள் கோட்டுப்பையிலிருந்த ஒரு பொருள்மேல் பட, அவள் அதை எடுக்க, துப்பாக்கி…
‘விக்ரம் இது எதுக்கு?’
விக்ரம் பார்த்து, ‘ஏய்? வை அதை!’
‘விக்ரம்! இது எதுக்கு?’
‘வந்து… வந்து… தற்காப்புக்கு.’
‘நிஜமாகவே சொல்லு. உனக்கு என்ன வேலை?’
‘சொன்னனே எக்ஸ்போர்ட் இம்போர்ட்’
‘பொய்.’
விக்ரம் எழுந்து உட்கார்ந்து அவளை அருகில் உட்கார வைத்து, ‘ஆல்ரைட், இப்பத்தான் கல்யாணம் ஆகியிருக்கு. பொய் சொல்லக்கூடாது. இந்தத் துப்பாக்கி என்னதில்லை. என் பழைய ஆபிஸ்லே தந்தது. கல்யாணமாகறதுக்கு முந்தி நான் ஒரு மாதிரி உளவு வேலைல இருந்தேன். கவர்மெண்ட் உத்தியோகம், இப்போ ராஜினாமா செய்துட்டேன். அவங்க முறை எனக்குப் பிடிக்கலை. என் முறை அவங்களுக்கு… இதை இன்னும் திருப்பிக் கொடுக்கல்லே. திருப்பிக் கொடுத்துடறேன்’.
இப்போது அந்த அறையிலிருந்த டெலிபோன் ஒலிக்க, மீரா அதை எடுத்துக் கேட்டு, ‘உங்களுக்குத்தான்’ என்றாள்.
‘என்னடாது! நான் இந்த ஒட்டல்ல தங்கி இருக்கிறது எனக்கே தெரியாது… ஹலோ.’
‘விக்ரம்! பார்கவி ஹியர். அட் லாஸ்ட் ஐ காட் யூ.’
ஜீவி ராவின் செக்ரட்டரியின் குரலில் இருந்த திறமையை நூற்றுக்கணக்கான டெலிபோன் மைல்களால் மறைக்க முடிய வில்லை. ‘யெஸ் மிஸ்டர் ராவ்…’ விக்ரமின் குரலில் விரோதம் தெரிய, தாடை மட்டும் அசைய சற்று நேரம் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். ‘ஐ ஸீ! ராக்கெட்டைக் காணோமா? மிஸ்ஸைலா? இன்னும் விசேஷம். சும்மாரு… ஸாரி, இங்க என் ஒய்ஃப் கடிக்கிறா… என்ன அணு ஆயுதமா? கட்! தி ஆன்ஸர் இஸ் நோ! ஆனா எந்த மிஸ்ஸைலா இருந்தாலும் ராஜினாமா கொடுத்ததை வாபஸ் வாங்கறதில்லை. லுக் மிஸ்டர் ராவ், அதெல்லாம் ஆயிடுச்சு. ஸாரி! நான் இல்லாம தாராளமா காரியம் நடக்கும். என் முடியை மாத்திக்கிறதா இல்லை.’
விக்ரம் டெலிபோனை வைக்கும்வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த மீரா, ‘என்னவாம்?’ என்றாள்.
‘என்னவோ ராக்கெட் காணாமப் போயிருச்சாம். நான் திரும்ப வந்து கண்டுபிடிச்சுத் தரணுமாம். நான் ஒருத்தன் தான் ஆப்ட்டேனா? பத்துப்பேர் ஏஜண்டுங்க இருக்காங்க நாற்காலியைத் தேய்ச்சுக்கிட்டு…’ அவளை முத்தமிட்டு, ‘உனக்குத் தேச பக்தி இல்லையான்னு கேக்கறாரு ராவ். அதானே செய்துகிட்டிருக்கேன்’.
‘விக்ரம்! என்னை விட்டுட்டுப் போயிடமாட்டியே?’
‘நெவர் மீரா! கம், லெட்ஸ் கோ அவுட்’
விக்ரமும் மீராவும் ஒரு மென்மையான புல்வெளியில் நடக்கும் போது அவர்களை முதலில் அந்தத் துப்பாக்கி குறி பார்த்தது.
‘டெலஸ்கோப்’ அமைத்த ரைஃபிள் துப்பாக்கி அது. நானூறு அடி மேட்டுச் சரிவில் அந்தத்துப்பாக்கிக்குச் சொந்தக்காரன், தன் சகாவுடன் ஒளிந்திருக்க, விக்ரம் சென்ற இடமெல்லாம் அதன் டெலஸ்கோப்பின் க்ராஸ் ஹேர் அவனைத் தொடர்ந்தது.
விக்ரம் மீராவிடம் தன் துப்பாக்கியைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான்.
‘தபாரு, பயப்படக்கூடாது. எவ்வளவு லைட்டா இருக்கு பாரு. இதான் டிரிக்கர், தொட்டுப் பாரு, எடுத்துப் பாரேன்.’
மீரா அதை ஆர்வம் கலந்த பயத்துடன் எடுக்க, விக்ரம், ‘கமான் ஷூட்! எங்கேயாவது அந்த மரத்தைப் பார்த்துச் சுடு’
‘நான் மாட்டேம்பா.’
‘கேப் துப்பாக்கி மாதிரிதான். என்னைக் கல்யாணம் பண்ணிட்டதுக்கு இந்தப் பயம் போகணும்’.
சின்னக் குழந்தை போலத்தான் சுட்டாள். அது தற்செயலாக அந்த மரத்தில் அடர்த்தியாக உட்கார்ந்திருந்த புறாக்கள் ஒன்றின் மேல் பட்டு அது ‘சொத்’தென்று விழ விக்ரம் கைதட்டி, ‘என்னா எய்ம்!’ என்றான்.
இந்த அசைவுகளினால் விக்ரம் அந்த மற்ற துப்பாக்கியின் குறியிலிருந்து அடிக்கடி விலக தூரத்தவனால் சரியாகக் குறி வைக்க இயலவில்லை.
‘ஏய், ஏன் அழறே?’
‘புறா செத்துப் போச்சு!’
‘செத்துப் போன என்ன? கறி பண்ணிச் சாப்பிடுரலாம்’.
மீரா அவன் மார்பில் குத்தி, ‘ஓ! க்ருயல்! அதுவும் ஒரு உயிர் இல்லையா? நம்மைப் போல அதுக்கும் வாழ உரிமை உண்டு! நமக்குக் கொல்ல உரிமை கிடையாது!’
‘ஓகே…ஓகே..’
‘முதல்ல அந்தத் துப்பாக்கியைத் தூக்கி எறி. அப்பத்தான் உன்கிட்டே பேசுவேன்’
‘ஹே.. ஹே… இது என்னதில்லை.’
‘நான் பேசமாட்டேன்’
‘ஆல்ரைட்! பாரு! இதிலே இருக்கிற தோட்டாக்கள் எல்லாத்தையும் எடுத்தாச்சு! இனிமே இதுக்குச் சக்தி இல்லை. வெத்துந் துப்பாக்கி! இப்பத் திருப்திதானே?’
விக்ரம் தன் நெற்றிப் பொட்டில் தன் துப்பாக்கியைப் பதித்து அதன் குதிரையை கிளிக் செய்து பாசாங்காகத் தொப்பென்று விழுந்தான். அதே சமயம் சைலன்சர் பொருத்திய தூரத்துப்பாக்கி வெடித்தும் குறி தவறிக் காற்றில் சிதறியது.
‘ஷ்ஷிட்’ என்றான் அதைச் சுட்டவன்.
‘அண்ணே! சாயங்காலத்துக்குள்ளே முடிச்சுரணும்! சுகி சாருக்குக் குறி தப்பக்கூடாது.’
விக்ரமும் மீராவும் அருகே இருக்கும் மர்க்கெட்டை நோக்கி, தம் எதிர்காலத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு நடக்க, அவர்கள் இருவரும் சற்றுத் தூரத்தில் தொடர்ந்தார்கள்.
சாலைகள் சந்தித்தும் சரிந்து கொள்ளும் இடத்திலிருந்து மார்க்கெட். இது என்ன மார்க்கெட். என்ன விற்கிறார்கள்? என்பதி லெல்லாம் அக்கறையின்றித் தக்காளிப் பழங்களும் முட்டை கோசும் காலிஃபிளவரும் கொட்டிக் கிடக்கும் சீசனில் வியப்பின்றி விக்ரம், மீரா இருவருக்கு மட்டுமே இந்த உலகம் முழுவதும் படைத்திருப்பது போல, ‘நான் பரமக்குடிக்குப் போய் விவசாயம் பண்ணப் போறேன்!’ என்றான் விக்ரம்.
‘நான் எட்டுப் பொண்ணுங்களைப் பெத்துக்க போறேன்?’
‘சரிதான்! விவசாயம் உன்னையா பண்ணப் போறேன்?’
அவள் தொடர்ந்து தன் சட்டைப் பையிலிருந்து ஒரு காதிதத்தை எடுத்துக் காட்டினாள், ‘பேர் கூட தயார்’.
அது ஒரு பெயர்ப் பட்டியம், ‘அனுபமா, நிருபமா ராதிகா, வித்யா, ஜ்யோத்ஸ்னா..’
‘அல்மேலு? ‘லூ’ என்று சின்னதாக் கூப்பிடலாமே? எப்படிப் பொண்ணாப் பொறக்கும்கறே?’
‘பெண்தான் வேணும் எனக்கு.’
‘காம சாஸ்திரத்திலே வலது மூக்கு வழியா மூச்சு விட்டுக்கிட்டு சம்போகம் பண்ணினாப் பொண்ணாப் பொறக்கும்னு போட்டிருக்கு’
‘சட்! ஒரு நாள்ல என்னைக் கெடுத்தாச்சு!’
இருவரும் உற்சாகமாக மார்க்கெட்டில் நடக்கும்போது அவ்விரு துப்பாக்கிகளும் ஆளுக்கொரு எதிர் எதிர்த் திசையில் வசமான இடத்தில் வந்து நின்று கொண்டனர். சாலை, குறுகலான இடம். மீரா சகட்டுமேனிக்கு வாங்கித் தள்ளிக் கொண்டிருக்க, அவள் வாங்க இவன் நிற்க, விக்ரம் துப்பாக்கிக் குறியில் இப்போது நிலைத்து நின்றான்.
‘மாட்டினான்யா!’
விரல் பதித்துத் துப்பாக்கியின் ட்ரிக்கர் அழுத்தி குண்டு வெளிப்பட்டு அதன் ரைஃபிள் இயக்கத்தில் சுழன்று சுழன்று வேகம் பெற்றுக் குறியின் தவறாந்தனத்தில் நேராக விக்ரமை நோக்கி ஸப்ஸானிக் வேகத்தில் பாய –
மீரா குறுக்கே வந்து விட்டாள். செங்குத்தாக அவள் மார்பகத்தில் பாய்ந்து குண்டு மார்பெலும்புக்கு இடையே இதயத்தில் பதிந்தது.
விக்ரம். ‘இதெல்லாம் வாங்கி…’ என்று ஆரம்பித்தவன் தன் மனைவி வினோதமாகச் சரிவதைப் பார்த்து உடனே செயல்பட்டு ஒரு விதமாக ரிஃப்ளெக்ஸ் செயல்பாடாகத் தன் துப்பாக்கிக்குக் கை பாய்ந்து விரல் பதிந்து இயங்க, க்ளிக்!
குண்டு இல்லை.
விக்ரமைக் குறிதப்பி அந்தப் பேதைப் பெண்ணை அடித்து விட்டதை உணர்ந்த அந்தக் கிராதகன் பயந்து விட்டான். மற்றொரு முறை விக்ரமின் மேல் குறி வைத்துச் சுட பதற்றத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை மேல் பட்டு அதிர்ந்தது. அதற்குள் இந்த இடத்தில் குழப்பம் அதிகமாகி மக்கள் ஒன்றும் புரியாமல் அங்குமிங்கும் சிதற ஒரு டெம்போ நிறையத் தக்காளி உருள அதன் மத்தியில் மீராவின் ரத்த இதயத்தைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது. மீரா ஒரு சின்னக் குழந்தையின் ஞாபகத்தின், பாதியில் தன் புத்தம் புதிய கணவன் மேல் சரிந்து இறந்து போனாள்!
விக்ரம், ‘மை காட்! இட்ஸ் நாட் ட்ரூ! மீரா! நீ செத்துப் போனே எனக்கு ரொம்பக் கோபம் வரும். நோ! நோ… மீரா… மீரா!’
– தொடரும்…
– 80களில் குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்தது.
– விக்ரம் (நாவல்), முதற் பதிப்பு: மே 2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.