வந்ததை வரவில் வைப்போம்!





கல்யாணம் மறுநாள் காலையில்தான். அன்று வேலை நாள் என்பதால் முந்தின தினமே மாலையில் மாப்பிள்ளை அழைப்பை கிராண்டாக வைத்துவிட இரு குடும்பமும் கலந்து பேசி அழைப்பிதழில் மாலை ஆறு மணிக்கே வரவேற்பு என்று எல்லாரையும் பத்திரிக்கை வைத்து ஊர்கூட்டி அழைத்தார்கள். கல்யாணம் பெண்வீட்டுச் செலவு.
கூட்டம் திமு திமுவென்று கூடியது. வந்து திரண்டவர்களை சமாளிக்க முடியுமா தெரியவில்லை.

‘என்னங்க இப்படி கூட்டம்சேருதே ?! மாப்பிள்ளை பெண் ரெண்டு பேருமே இன்னும் மேக்கப் பண்ணீட்டு வந்து சேரலை ! கூட்டத்தை நாம எப்படி மேக்கப் பண்ணப்போறோம்?’ பயந்தாள் மாப்பிள்ளை அம்மா.
மாப்பிள்ளை அப்பாவோ ‘வந்தவனெல்லாம் ஒரு அரைமணி வெயிட் பண்ணிப் பார்த்துட்டுப் போயிடுவான். வந்த கொடுமைக்கு மொய்க்கவர் தராம யாரும் போமாட்டானுக.. எல்லாம் லாபம்தான் விடு. ‘வந்ததை வரவில் வைப்போம்!’ இதை முன்யோசனை செய்துதான் அழைப்பிதழில் வரவேற்பு மாலை ஆறுமணி என்று போட்டிருந்தேன்… !
எப்படி என் திட்டம் என்று மனைவியின் காதோரம் கிசுகிசுத்தார், பெண்ணின் அப்பா.
உண்மைதான் வந்தவர்களெல்லாம் வந்த பாவத்து மொய்கவர் தராமல் போகவில்லை. ஆனால் வழியிலிருந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அதற்கும் சேர்த்தே தெண்டம் அழுதுதான் போனார்கள். பழிஓரிடம் பாவம் ஓரிடம்.
பெண்ணின் அப்பா ஒன்றைக் கணக்குப் போட்டால், நடந்தது வேறொன்றாக இருந்தது.
வந்ததை வரவில் வைக்க நினைத்தார் அவர். ஆனால், காசையும் தண்டம் அழுதுவிட்டு இப்படி பசிக்க விட்டுட்டானே பாவி என்று சபிக்காதவர்கள் யாரும் இல்லை.
பணத்தை வரவுவைக்க நினைத்து பாவம் சாபத்தை சம்பாதித்ததுதான் மிச்சம்.
அதுமட்டுமா இத்தனை பேரைக்கணக்குப்போட்டுச் சமைத்த உணவும் வேஷ்ட்.
பந்தாவுக்குப் பண்ற கல்யாணம் பாவத்தை சம்பாதித்தது.