லீலாவுக்கு நளினா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2026
பார்வையிட்டோர்: 105 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

லீலா! 

‘ஆசை’ லீலா, பிரியமுள்ள’ லீலா, ‘அன்புள்ள’ லீலா என்று அடைமொழிகள் சேர்த்து எழுதலாம் என்றுதானிருந்தேன். ஆனால், “லீலா” என்ற இரண்டு எழுத்துக்களையும் எழுதும்போது என் மனதில் மலரும் மகிழ்ச்சியே போதும். தேவையில்லாமல் வார்த்தைகளைக் கொட்டுவானேன் என்று விட்டுவிட்டேன். 

நீ எழுதிய கடிதத்தைப் படித்தேன். வெட்கங்கெட்டவள் இழிவுருவானவள் என்று ஏற்கனவே உன் மனதில் உருவாகி யிருந்த சில அருவருப்பான வார்த்தைகளை அள்ளிக் கொட்டியிருக் கிறாய். புனிதமான தெய்வத்தைத் தேடிச் செல்லும் உண்மை யான பக்தன் இருட்டறையிலும் குமட்டும் வாடையிலும் சிறைப் பட்ட அழுக்கேறிய சிலையைக் கண்டால் எப்படி வருந்துவானோ அப்படியே ஆனேன்! 

தோழி ! இளமையிலிருந்தே நீ என்னை நன்றாக உணர்வாய் மனமொத்து வாழ்ந்தோம். உன் புத்தகம் காணாமற் போனபோது என் உயிர்போனதுபோல நான் துடித்தேன். நான் கீழே விழுந்து என் முழங்காலில் அடிபட்டபோது நீ அழுதே விட்டாய். வளரும் பருவத்தில்கூட உள்ளங்களை மட்டும் ஒத்த அளவிலேயே விட்டு வைத்திருந்தோம். ‘அன்று ” என்று நீ நினைப்பாய். “இன்று’ எனத்தான் என் மனம் இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறது. பிணைப்புற்ற நம்மிருவர் உள்ளங்களும் பிடிப்புத் தளராது உற வாடிக்கலந்த அந்த நாட்கள் இன்னும் என் கண்முன்னே மறை யாமல் நிற்கின்றன. 

மலர்ந்த பருவத்தில்கூட மனங் கொஞ்சங்கூடப் பிணங்கா மல் காலங் கழித்தோமே! எதிர் காலத்தை மனதாலேயே எட்டிப் பிடித்தோமே! நம் கண்ணால் காணாமலே நமக்கென்று பிறந்து, வளர்ந்துகொண்டிருந்த வாலிபர்களை உருவகப்படுத்திப் பார்த் தோமே! நம்மில் யாராவது ஒருவர் ஆணாக இருந்தால் இந்நேரம் ‘அப்பா’, ‘அமமா” என்று நம்மை அழைக்கும் ஆசைக்குழந்தை களோடு கொஞ்சிக்கொண்டிருப்போம். அப்படியிருந்தும் இப் படிக் கடிதம் எழுத உனக்கு எப்படியடீ மனம் வந்தது? 

ஏதோ ஒரு சினிமாவில்தான் “ரயில் ஒரு பெரிய ஸ்டேஷனை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. வழியில் பலப்பல சின்ன ஸ்டேஷன்களில் நின்று நின்று போகிறது’ என்று சொல்லக் கேட் டிருக்கிறேன். அதுபோலத் தானம்மா மனிதர்களும் எங்கேயோ எதையோ நோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். மரணத்தை நோக்கிப் போவதாகப் பொய்ச் சொல்லுவார்கள். உண்மை அப்படித்தானிருந்தாலும் எவரும் அதை நோக்கிச் செல்லுவதே இல்லை! இன்ப வாழ்வு, ஆதிக்க ஆசை, மதிப்பு, பெருமை இவற்றில் ஏதோ ஒன்றை நோக்கித்தான் ஒவ்வொரு வரும் போகிறார்கள். வழியில் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள், சந்திப்புகள், உறவாடுதல்கள், இவற்றையெல்லாம் வெகு சீக் கிரம் உதறித் தள்ளிவிட்டு உணர்ச்சியற்ற ரயில்வண்டியைப் போலத்தான் எல்லோரும் நடந்துகொள்கிறார்கள். நாம் இருவரும் அப்படி இல்லையே, லீலா! ஒரே குறிக்கோளை எண்ணித்தானே கைகோர்த்துக்கொண்டு நடந்தோம், பிணைப்புற்ற இரு கரங் களையும் இவ்வளவு எளிதில் வெட்டித் துண்டிக்க எப்படியம்மா உனக்கு மனம் வந்தது? 

என்னை விட்டு நீ பிரியும்போது வெகு நேரம் அணைத்துக் கொண்டே உட்கார்ந்திருந்தோமே! எத்தனை எத்தனை வாக்குறுதி கள், மீண்டும் மீண்டும் பல முறைகள் பார்ப்போம், பேசுவோம், உறவாடுவோம், என்ற நம்பிக்கை நிறைந்த உறுதிமொழிகள்- இவைகளெல்லாம் என் நெஞ்சில் இன்னும் சதிராடிக் கொண்டிருக்கின்றனவே! 

என்னைத் தனிமையில் இருந்து தவிக்க விட்டு விட்டு நீ போய் விட்டாய். உன்னைத் தவிர வேறு எவரோடும் ஓரிரண்டு வார்த்தைகளுக்குமேல் பேசினதே இல்லை. தேவைக்கு மேல் பேசினால் தேன் சிந்திப்போகுமோ என்று என்னை எல்லோரும் கேலி செய்வார்களே, நினைவிலிருக்கிறதா? மனம் விட்டுப் பழக நீ ஒருத்திதான் இருக்கிறாய் என்று எண்ணியிருந்தேன், ஒளியாமல் சொல்லுகிறேன்: உன்னை என் மனம் இறுகத் தழுவியிருந்தது. முன்புறம், பின்புறம் திரும்பிப் பார்க்குமளவு கூடத் தளரவில்லை. அவைகளை எல்லாம் நீ மறந்துவிட்டாய். ஒளியை அணைத்துவிட்டு விழியைத் திறந்தவள்போல மாறிவிட்டாய்! 

நீ என்ன, உலகமே என்னை தூற்றும், கேலி செய்யும், உதா சீனமாக வெறுத்துப் பேசும். என்னிடத்தில் தற்காலிகமாக அன்பு காட்டும் ஆண்களெல்லாம் என்னென்ன சொல்வார்கள் தெரி யுமா? காந்தக்கல்லை ஆட்டினால் பக்கத்திலிருக்கும் இரும்புத் தகடும் ஆடுமே அதைப்போல என் சுழலும் கண்கள் அவர்கள் மூளையையே சுழற்றுகின்றனவாம்! கலங்கரை விளக்கு கடலில் வருங் கப்பல்கள் கல்லில் மோதிச் சிதறுவதைத் தடுக்க இருக் கின்றதாம். ஆனால் மூடி மூடித்திறக்கும் என் விழிகளோ அவர்கள் இதயங்களை என் மோகன உருவத்தில் மோதிச் சிதறச் செய்கின் றனவாம்! அவர்கள் சிங்கங்களாம்! நான் அவற்றை ஆட்டிவைக் கும் சர்க்கஸ்காரியாம்! இன்னும் என்னென்னவோ சொல்வார்கள். நான் மட்டும் இவைகளில் மயங்கினதே இல்லை. பலரிடம் கேட் டுப் பழகிப் போனதால் புளித்துக்கூடப் போய்விட்டது. பணம் அதிகமாகக் கொடுத்தால் பரிவோடு நடப்பேன். குறைந்தால் குமுறலைத்தான் காணலாம். அவர்களும் என்னைக் கண்டபடி ஏசுவார்கள். “வெட்கங் கெட்டவளே” என்று ஏசி இந்தக் கடி தத்தை வீசி எறிந்துவிடாதே! என் உணர்ச்சிகளெல்லாம் கருகித் தீய்ந்து போய்விட்டன. என் வாழ்வு ரூபாய் அணா பைசா வியா பாரமாக மாறிவிட்டது! 

நீ எனது உயிர்த் தோழி! ஆதரவு என்று நான் நினைக்கும் ஒரே பெண்! மனதைத் திறந்து பேச உன்னைத் தவிர எனக்கு வேறு எவரும் இப்போது – எப்போதும் – இல்லை. நீயும் நிந்தித்து என்னை உதறித் தள்ளிவிட்டால்…. ! லீலா! கேள் என் வாக்கு மூலத்தை. 

எனக்கு மணம் முடிந்தது. என் கணவர் என்னை அவர் மன தில் பொங்கும் மகிழ்ச்சியாகவே மதித்தார். பிரியமாயிருந்தார். 

நீகூட அடிக்கடி சொல்லுவாயே “நீ சிரித்தாலேபோதும், ஆயிரம் பொன்தரலாம்” என்று, அவரும் அதையே அப்படியே சொல்லு வார். அவர் சொல்லும்போதெல்லாம் உன் உருவத்தில் கூடு விட்டுக் கூடு பாய்வதுபோல எனக்குத் தோன்றும். உன்னைப் போலவே அவரும் என்னைத் தன்னந் தனியே விட்டு விட்டு வெகு சீக்கிரம் இறந்தார். நான் விதவையானேன். 

ஒரு முழந்தானடி அவர் கட்டிய கயிறு! அது அறுந்து, அவர் என்னை விட்டு மறைந்துபோன பிறகுகூட ஒரு மைல் தூரத்துக்கு என்னைச் சுற்றி வளைக்கப்பட்ட முள்வேலியாக இருந்தது. என் உடலின் இளமை அப்படியே இருந்தது. உள்ளத்தில் எண்ண எண்ணத் தெவிட்டாத இன்ப நினைவுகளெல்லாம் தலைதூக்கி நின்றன. என் கணவர் காட்டிய அன்பும் அவைகளில் பதிந்திருந் தது. தாவித் தாவி ஓடும் மனதையும், தன்னைமீறி அலையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்தி அடக்கினேன். அவைகளும் அலுத்து ஓய்ந்துபோயின. 

இரவு வேளைகளில் இருண்ட வானத்தில் எங்கேயோ இருந்து கண்ணைச் சிமிட்டிச் சிமிட்டிக் காதல்மொழிகள் பேசும் அந்த நட்சத்திரங்களில் மனதைப் பறிகொடுத்து உட்கார்ந்திருப்பேன். அவைகளுக்கு மேலே ஏதோ ஒரு உலகத்தில் இருக்கிறார் என் கணவர்! அதற்கும் மேலே அவதி நிறைந்த வாழ்வை எவரும் அழிக்கமுடியாமல் என் தலையிலெழுதிய ஆண்டவன் ! அவரை நோக்கித்தான் நல்ல கதி கிடைக்கிறதா என்று பிரார்த்தித்தேன், கண்ணீர் நிறைந்த கண்களோடு. என்னைக் கண்திறந்து பார்க்கும் படி வேண்டிக்கொண்டேன். மாலை நேரங்களில் கடவுள் சந்நிதி யில் நின்று என் குறைகளைக்கூறி அழுவேன். காலை நேரங்களில் உதிக்கும் சூரியனிடம் மறுஜன்மத்திலாவது என் தலையெழுத்தை மாற்றி எழுத ஆண்டவனிடம் போய்ச்சொல்லும்படி கேட்டுக் கொண்டேன். உன்னிடத்தில் கொண்டிருந்த அன்பு, என் கணவரிடம் காதலாக மாறி, கடவுளிடத்தில் பக்தியாகப் பரிண மித்தது! 

பெருமாள் கோவிலில், “சீதா கல்யாணம்” காலட்சேபம் ஏற்பாடு செய்தார்கள். இம்மையிலும் மறுமையிலும் எல்லையில்லாத இன்பம் ஏற்படும் அதைக் கேட்டால் என்று சொன் னார்கள். நாள் தவறாமல் அங்கே செல்லத் தொடங்கினேன். என்னைப்போன்ற எத்தனையோ சமூகத்தின் “அவமானச் சின்னங் கள்” அங்கே வருவார்கள். நாங்கள் கூடுவதைப் பார்க்க எத்தனையோ இளைஞர்கள்! பாகவதர்கூட எங்களுக்குத்தான் அது தேவை என நினைப்பார். எங்களைக் கரையேற்றுவதில்தான் அதிக அக்கரை காட்டுவார் ! கதை பூராவையும் எங்களுக்கே, எங்கள் பக்கம் பார்த்தே சொல்லுவார் ! 

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் உடல் அமைப்பை அழகாக வர்ணித்தார். இவருக்கு எப்படித்தான் தெரியுமோ ? ஒவ்வொரு அசைவிலும் அவர் எப்படி இருப்பார் என்று அவர் விளக்கும்போது என் மனம் நெகிழ்வடையும். பாலைவனம் போலிருந்த என் மனதில் பச்சைப் பசேலென்று ராமர் கொடியாக. செடியாக, மரமாக, சோலையாக வேர்விட்டார். அவர் உருவத்தோடு என்னை ஐக்கியப் படுத்திவிட்டேன். 

அன்று சீதையை ராமர் தன்னந்தனியே சந்தித்தார். மகாவிஷ்ணுவின் அவதாரமாயிருந்த போதிலும் ஸ்ரீராமர் சீதை யிடம் எப்படி நடந்துகொண்டார் என்று நினைக்கிறாய்? 

என் கணவர் அன்று முதல்நாளிரவு நாங்கள் இருவருந் தனிமையில் இருந்தபோது நடந்துகொண்டதைப் போலத்தான் ! மூடிக்கட்டி முடிச்சுப் போட்டிருந்த நினைவுகளெல்லாம் மெள்ளத் தலைதூக்கின. கடும் வெய்யிலில் காய்ந்து ஓய்ந்து நடக்கும்போது நிழலின் நினைவு தோன்றினால் எப்படி இருக்கும் ? அதே நிலை அடைந்தேன்! 

ஸ்ரீராமர் சீதாதேவியின் எதிரில் வந்து உட்கார்ந்தார். சீதை தன்னை மறந்தாள். நடுங்கும் கைகளோடு சீதையின் உடலை ராமர் பற்றினார். சீதை அவரைத் தழுவினாள். விரிந்து காற்றில் மிதக்கும் குடையோடு கயிறுகளால் பிணைக்கப்பட்டு ஆகாயத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் விமானியின் உடலைப்போலப் பிணைப் புற்ற இரு கைகளுக்கிடையே சீதையின் உடல் ஊசலாடியது. அவள் உடலில் இருந்த அத்தனை நரம்புகளும் முறுக்கேறின. வேகம் வேகமாக ஓடிக்கொண்டிருந்த இரத்தம் அவளை தத்தளிக்க வைத்தது. மத்தளத்தையும் தபேலாவையும் ஒரே நேரத்தில் ஓங்கி ஓங்கித் தட்டித் தாளம் போடுவதுபோல இருவர் இதயங் களும் அடித்துக்கொண்டன ; துடித்துக்கொண்டிருந்த மெல்லிய உதடுகளை முரட்டு உதடுகள் அழுத்தித் துடிப்பை அடக்கின. தாகத்தால் தவித்தவன் தண்ணீர் கிடைத்தால் தன்னை மறந்து அனுபவித்துக் குடிப்பதைப்போலச் சீதை அள்ளி அள்ளிப் பருகினாள் அந்த இன்பத்தை ! இப்போது நினைத்தால்கூட என் நெஞ்சு புல்லரிக்கிறது. மணிமுடி பூங்கோதையைத் தழுவிய போது, “அத்தான் விடாதீர்கள் என்றாள்” என்று கவியரசர் பாரதிதாசன் எழுதியிருக்கிறாரே, அதன் கவி நயத்தைச் சொல்லியா புரிந்துகொள்ள முடியும் ? சுவைத்து அனுபவிப்பதல்லவா அது களைத்துப்போய் ராமர் கைகளைத் தளர்த்தினார். மூடியிருந்த கண்களைச் சீதை திறந்தாள்! 

எவருமில்லை. இருள் சூழ்ந்திருந்தது. சந்நிதானத்தில் எரிந்த விளக்கு ஒளியைப் புகையாக மாற்ற நேரம் பார்த்துக்கொண் டிருந்தது. என்னெதிரே பக்கத்துவீட்டு ஷண்முகசுந்தரம் நின்று கொண்டிருந்தான். கலைந்துபோயிருந்த என் ஆடை, அவிழ்ந்து தரையில் படிந்திருந்த என் கூந்தல், படபடத்துக்கொண்டிருந்த உடல் இத்தனையும் என்ன நடந்தது என்பதை எனக்கு விளக்கின’ முள்ளில் விழுந்த உடலைப்போல என்மனந்துடித்தது. நான் கட்டிக் காப்பாற்றிய அந்தப் பொருள் எட்டாக காரத்தில் பயந்து எங்கேயோ மறைந்தே போய்விட்டது ! 

“அப்பாவி” என அவனைச் சபித்தேன். 

“எவரிடமும் சொல்லமாட்டேன். பயப்படாதே” என்று சொல்லி மறுபடியம் என் கையைப்பற்றினான். வெடுக்கெனக் கையைப் பிடுங்கிக்கொண்டேன். ஆண்டவனைப் பார்த்தேன். விழித்த கண்களை மூடாமல் என்னையே பார்த்துக்கொண்டு அவர் நின்றார். ஓங்கி ஓங்கித் தலையிலடித்துக் கொண்டேன். விளக்கும் அணைந்து இருளை வெளிப்படுத்தியது! 

நான் ஒழுக்கங் கெட்டவள், உன் நினைவில் | ஊரார் பேச்சில்! ஆண்டவன் சந்நிதியில் ! ஆண்டவன் கண்ணெதிரிலேயே, அவர் மகிமையை விளக்கும் கதை தந்த போதையால, பலிபீடம் என்று தெரிந்தோ தெரியாமலோ பக்தியின் பேரால் என்னை என் பெற் றோர் மனமுவந்து அங்கே அனுப்பியதால் கெட்டுப் போனேன் 1 கடுங்காவல் வைத்து கட்டுப்படுத்தியிருந்த என் மனதை மயங்கச் செய்ததே அந்த “சீதா கல்யாணம்” அதைப்பற்றி எவரும் நினைப்பதில்லை. 

மலர்ந்த மலரென்றுதானே பறித்துத் தலையில் சூடிக்கொண் டேன். மறைந்திருந்த “பூநாகம்” என்னைத் தீண்டியதற்கு நானா பொறுப்பாளி? கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணித்து அவித்தேன். சாம்பலாகப் போகும்போது. சத்கதா காலட்சேப மண்ணெண்ணெயை அதன்மேல் கொட்டி யது. மறுபடியும் தணல் எரிய ஆரம்பித்தது. அதற்கு நானென்ன செய்வேன்? வயிறு பசிக்கும்போது குலுங்கும் மாங்கனிகள் கண்ணில்பட்டால் சுவரேறிக் குதித்தாவது பறித்துச் சாப்பிடமாட். டோமா? தனியாகத் தன்னை மறந்திருந்த என்னை ஷண்முக. சுந்தரம் கனியாக எண்ணிவிட்டான்! 

ஏற்கனவே எவராலோ தயாரிக்கப்பட்ட முடிவுகளை நீ விழுங்கிவிட்டாய். தயவு செய்து வாந்தி எடுத்துவிடு. நான் நிரபராதி, குற்றஞ் செய்யாதவள்! என்று எதிர் வழக்காட வரவில்லை. நீ கடிதத்தில் எழுதிய ஆபாசம் நிறைந்த சொற்கள் அடுக்காதம்மா என்று கூற வரவில்லை. வீட்டுக்குள் சிறைபட்டு வெளி உலகம் இன்னதென்று தெரியாமல் எட்டுத் திக்கையும் உணர்ந்தவள் என்று எண்ணிக்கொண் டிருக்கும் உன்னை இப் போது கேட்கிறேன். உன் முடிவு சரியா? நானா குற்றவாளி? 

“உன் அன்புள்ள”, “உனதாசை”, “உன் பிரியமுள்ள’ என்ற வார்த்தைகளை வீணாக்காமல் என் நெஞ்சிலிருந்தே ஐந்து எழுத்துக்களையும் வெளியிலெடுத்து வைக்கிறேன்.

– நிலவும் தாமரையும், முதற் பதிப்பு: 1961, கே.ஆர்.நாராயணன் வெளியீடு, சென்னை.

டி.கே.சீனிவாசன் தி.கோ.சீனிவாசன் (டி.கே. சீனிவாசன் - Tamil Wiki) தமிழ்நாட்டின் ஒரு முன்னணி அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாசிரியர் மற்றும் சிறந்த பேச்சாளர் ஆவார். திராவிட இயக்கத்தில் இவரது ஆழமான சிந்தனைகள் மற்றும் பங்களிப்பிற்காக இவர் "தத்துவ மேதை" என்றும், பேரறிஞர் அண்ணாவால் "சின்ன அண்ணா" என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். முக்கிய குறிப்புகள்: பிறப்பு: நவம்பர் 14, 1922 அன்று கோதண்டபாணி - அலமேலு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அரசியல் பயணம்: தொடக்கத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *