ரோஜாவின் ராஜா
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 14,889
அரவிந்த் என்ன இன்னைக்கு நீ காலேஜ் வருவதற்கு இவ்ளோ நேரம் ஆச்சு. வீட்ல என்ன செஞ்ச… அதுவா ரோஜா அப்பா கொஞ்சம் வேலை கொடுத்தார் அதை செஞ்சிட்டு வருவதற்குக் கொஞ்ச நேரம் ஆயிடுச்சு. சரி நீ எப்போ? வந்த… அரவிந்த் நான்தான் நம்ம கிளாஸ்ல பஸ்ட் வந்தேன் தெரியுமா… பரவாயில்லையே இப்படி சீக்கிரமா வர்றதுகூட ரொம்ப நல்லது இல்ல… எந்தவித பரபரப்பும் இல்லாமல் நிம்மதியாக சீக்கிரமாக கல்லூரிக்கு வருவது நல்லதுதானே. இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே பல மாணவர்கள் வகுப்பறையின் உள்ளே வந்துகொண்டிருந்தனர்.
ரமேஷிடம் நம்ம பிசிக்ஸ் சார் சொன்ன பாடத்தைப் படிச்சிட்டியாடா என்று அரவிந்த் கேட்க… ரமேஷ் பாதிதான் படிச்சேன் அரவிந்த்… ரோஜா நீ எப்படி ….நீ எல்லாம் எப்பவுமே நல்லா படிச்சிடுவ.. இப்ப சார் கொஞ்சம்தான படிச்சிட்டு வரச் சொன்னாரு. கரெக்டா சொன்ன ரமேஷ் பாடம் ரொம்ப ஈசியாக இருந்தது அவர் கொடுத்த எல்லாத்தையுமே நல்லா படிச்சுட்டு வந்திட்டேன் என்றாள். வழக்கம் போலவே கல்லூரியின் நேரம் கடந்தது. ஆசிரியர்கள் வகுப்பறையில் மாறிமாறி வந்து பாடம் நடத்திவிட்டுப் போனார்கள்.
ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டு இருந்தனர். அரவிந்த் ரோஜாவைப் பார்த்துக்கொண்டே இருந்தான். சில சமயங்களில் ரோஜாவும் அவனைப் பார்த்துவிட்டு வேறு திசை நோக்கி பயணித்தாள். ரோஜா… அந்த அரவிந்த் உன்னையே அடிக்கடிப் பார்க்கிறான். உனக்குத் தெரியுமா? தெரியாதா? அடிக்கடி ஓரக்கண்ணால் பார்க்கிறான் என்றாள் பூங்கோதை.
சரி நான் பார்த்துக்கிறேன் என்றாள் ரோஜா. அழகான வகுப்பறை துள்ளி விளையாடும் மாணவர்களின் அரட்டையில் குதூகலமானது. சிறு இடைவெளிகளில் மாணவர்கள் தங்களுடைய அன்பைப் பரிமாறிக் கொண்டனர். கல்லூரியின் நேரம் முடிந்தது. அவரவர்கள் வீட்டுக்குப் புறப்படத் தயாரானார்கள். ரோஜா… ரோஜா என்றான் அரவிந்த்.
என்னடா என்றாள் ரோஜா. அரவிந்த்… நடந்துகொண்டே வா பேசிக்கலாம் என்றாள். அது ஒன்னும் இல்ல நான் உன் பிரண்டுதானே என்றான். என்னடா உனக்கு டவுட்டு என்றாள் ரோஜா. இல்ல உன்மேல நான் ரொம்ப ஆசை வெச்சிருக்கேன் தெரியுமா? என்றான். அதில் ஒன்றும் தப்பு இல்லையே. ரோஜா நான் உன்னை விரும்புகிறேன் என்றான். அடடே அரவிந்த் என்னாச்சுடா உனக்கு. நல்லா படிக்கிற பையன், ஒழுக்கமானவந்தான் என்று உன்கிட்ட நான் நெருங்கிப் பழகினேன். இப்படி தப்பு தப்பா பேசுறியே… எப்படி இப்படியெல்லாம் பேசற என்றாள் ரோஜா. படிக்கும்போது எதுக்கு இதெல்லாம் என்றாள். இது இப்பத் தேவையில்லாத வேலை. அப்படி இல்ல ரோஜா நீ என்கூட இருந்தா நான் நல்லா இருப்பேன். நீயும் நல்லா இருப்ப என்றான். அரவிந்த் படிக்கிற வயசுல படிக்கணும். அப்புறம் நல்ல வேலைக்குப் போகணும் அப்புறம்தான் நீ சொல்றதெல்லாம் என்றாள் ரோஜா.
ரோஜா அதுக்கென்ன படிச்சாப்போச்சு என்றான். நான் நல்லா படிச்சு.. வேலைக்குப் போகப்போறேன் என்றான் அரவிந்த். அரவிந்த் கல்யாணம் பண்ற வயசுல கல்யாண நேரம் வரும். அதுக்குள்ள என்ன அவசரம் வேண்டாம்… நீ ஒழுங்கா படிச்சு வேலைக்குப் போ என்றாள். சரி போறேன் என்றான் அரவிந்த். உன்னை எனக்குப் பிடிக்கும் அதுக்காக இப்பப்போய் திருமணம் எல்லாம் என்று சொல்வது கொஞ்சம் ஓவர்…
பஸ்ஸைப் பிடிக்க வேகமாக ஓடினாள் ரோஜா. அரவிந்த் தன்னுள் நினைத்துகொண்டான். நான் நல்லாதானே பேசினேன்… சரி பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டான். வீட்டுக்குச் சென்று ரோஜாவுடன் கைப்பேசியில், வாட்ஸ்அப்பில், முகநூலில் ரோஜாவிடம் உரையாடிக் கொண்டேயிருந்தான்.
காலங்கள் வேகமாக ஓடியது. அரவிந்த் வீட்டில் சொல்லிட்டீயா என்றாள் ரோஜா. அதற்கு அவன் அதற்கென்ன சொல்லிட்டா போச்சு என்றான். அதுக்குள்ள அவசரத்தைப் பாரு ஒழுங்காக வேலைக்குப் போயிட்டு.. உன் பெற்றோரிடம் சொல்லி என்னை முறைப்படி என்வீட்டுக்குப் பெண்கேட்டு வா என்றாள் ரோஜா. அனைத்திற்கும் தலையாட்டிவிட்டு மகிழ்ச்சியாக இருந்தான் அரவிந்த்.
ரோஜா தனது ஆசைப்படியே வீட்டில் தன் பெற்றோரிடம் கூறினாள். அவரது பெற்றோர்களும் முதலில் வேண்டாம் என்று கூறினர். பிறகு மகளின் விருப்பப்படியே இருக்கட்டும் என்று நினைத்தனர். அவள்தானே வாழப்போகிறாள் என்று இருவரும் சம்மதித்தனர்.
சரிம்மா அவன் நல்ல பையனா? என்ன வேலை செய்யறான்….அப்புறம் மற்றத பத்தி எல்லாம் நல்லா தெளிவா தெரிஞ்சுக்கோ என்றனர். பிறகு கஷ்டப்படக்கூடாதில்ல அதான் என்று கூறினர். சரிப்பா நான் பாத்துக்கறேன் என்றாள் ரோஜா. சரிம்மா நீ இன்னும் ரெண்டு வருஷத்துக்குப் படிச்சிட்டு பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம் என்றும் கூறினர். அரவிந்த்துக்கும் இப்போ சரியா சொல்லிக்கிறமாதிரி வேலை இல்ல… நாம அப்பா அம்மா சொல்றமதிரியே கேட்போம் என்று மேற்படிப்பு படிக்கத் தொடங்கினாள்.
அரவிந்த் நீ நல்ல வேலைக்குப் போகணும் பணம் சம்பாதிக்கணும் அதனால்தான் இந்த நேரத்தில் நான் படிக்கச் சம்மதம் சொல்லிட்டேன் என்றாள். சரி ரோஜா நீயும் படி அதுதான் நமக்கும் நல்லது என்றான். ரோஜா அரவிந்த் இருவர்களும் நேரிலும் வாட்ஸப்பில் பேசிக்கொண்டேயிருந்தனர். அரவிந்த் …ரோஜாவும் பேசும்போது இதுவரை இல்லாத உலகத்தில் பயணிப்பதாக உணர்ந்தனர்.
அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது. அரவிந்த் ரோஜாவிடம் உன் வீட்டிற்குப் பெண் கேட்டு வரட்டுமா? என்றான். அவசரப்படாத அரவிந்த் ….நான் ஏற்கெனவே வீட்ல கேட்டுட்டேன்… படிப்ப முடிச்சதக்கப்பறம்தான் கல்யாணம் என்று முடிவா சொல்லிட்டாங்க…. என்றாள்..
நல்லவேலை கிடைச்சிடுச்சு… ரோஜாவைத் திருமணம் செஞ்சுகிட்டு நல்லா வாழலாம்ன்னு பார்த்தா.. இப்படி ஆயிடுச்சே என்று வருந்தினான்… ரோஜாவுடன் அரவிந்த் உரையாடிக் கொண்டே இருந்தான்… தொடர்ந்து காலங்கள் மாறியது… அவர்கள் இருவரும் இணைய கொஞ்சம் நாட்கள் ஆகும்… வாழ்க்கைப் போடும் பல முடிச்சுகளில் இதுவும் ஒன்று… இந்த இருவரும் வாழ்க்கையில் இணைந்து வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்……