ருத்ர காளி
சிதம்பரநாதனுக்கு வயது அறுபத்தி ஒன்பது.
இவ்வளவு வயதாகியும் அவரிடம் மாறாத ஒரே வீக்னெஸ் ‘பெண்கள்’.
பதினான்கு வயதில் பெண்களைப் பற்றிய புரிதலுக்கான ஏக்கமும் ஆசையும் அரும்ப ஆரம்பித்த விருப்பங்கள் அவரிடம் இன்றுவரை அடங்கவே இல்லை. அப்படியே வளர்ந்துவிட்டார்.
பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சென்னையின் ஏஜி ஆபீஸில் ஒரு நல்ல வேலையில் அமர்ந்துவிட்டார். அதிலேயே அடுத்தடுத்து பரிட்சைகள் எழுதி சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் வரை உயர்ந்து பின்பு அதிலேயே ஓய்வும் பெற்றார்.
சிதம்பரநாதன் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு லெளகீக முறைப்படி இருபத்தியெட்டு வயதில் திருமணமாயிற்று. மனைவி காயத்ரி குணவதி. ஒரே பெண் மாயாவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். அவள் தற்போது நியூஜெர்ஸியில் இருக்கிறாள். அடுத்த வருடம் அப்பாவுக்கு பீமரத சாந்தி சிறப்பாக நடத்தவேண்டும் என்று துடிக்கிறாள். இவ்வளவு நல்ல சுற்றங்கள் இருந்தும் சிதம்பரநாதனுக்கு பெண்களைச் சுற்றிவரும் நாய்க்குணம் மட்டும் மாறவேயில்லை.
வயதாகி விட்டது என்கிற போர்வையில், எட்டு முதல் பன்னிரண்டு வயது வரையான உறவுப் பெண்களையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவர்களின் கன்னத்தைக் கிள்ளுவது; மடியில் தூக்கி உட்காரவைத்துக் கொஞ்சுவது; அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு தேவையற்ற இடங்களில் அவர்கள் மீது கைகளைப் படர விடுவது என்று சில்மிஷங்கள் செய்வார். குழந்தைகளைக் கொஞ்சும் சாக்கில் நம்மிடையே பல கிழங்கள் இப்படி அலைவது நம்மில் பலருக்குப் புரிவதில்லை.
அப்படித்தான் மனைவி காயத்ரியின் அக்கா பேத்தி சரண்யாவிடமும் அவளின் சின்ன வயதில் நிறைய சில்மிஷங்கள் செய்தார். இலை மறைவு காய் மறைவாக அவளிடம் அடிக்கடி அத்து மீறியிருக்கிறார்… சரண்யாவுக்கு சற்று விவரம் தெரிந்ததும் சுதாரித்துக் கொண்டாள். சிதம்பரநாதனை முற்றிலுமாக தள்ளியே வைத்தாள்.
அதன்பிறகு படிப்பில் கவனம் செலுத்தி டென்டல் மெடிகல் பாஸ் செய்து தற்போது சென்னை அடையாறில் சொந்தமாக டென்டல் க்ளினிக் வைத்திருக்கிறாள்.
ஏஜி ஆபீஸில் வேலை பார்த்த நாட்களில் பல பெண்களுடன் சிதம்பரநாதன் தொடர்பில் இருந்தார். ‘ஸ்கின் டு ஸ்கின் நோ ஸின்’ என்பது அவரது கோட்பாடு. பார்ப்பதற்கு மிகவும் கண்ணியமாக சாதுவாக தோற்றமளித்ததால், பெண்களிடம் நைச்சியமாகப் பேசி அவர்களைப் படுக்கைவரை இழுத்து வந்து விடுவார்.
ஐம்பத்தைந்து வயது வரையில் இப்படி அசாதாரணமாக வளைய வந்த சிதம்பரநாதன், வயதாகியும் எண்ணங்களில் அதே அதீத ஆசைகள் அலையடித்தாலும், அவருக்கு உடல் இடம் கொடுக்கவில்லை. உடம்பில் பழைய துடிப்பும், வீரியமும் முற்றிலுமாக வடிந்து விட்டிருந்தது.
அவரையொத்த வயது ஆண்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் கட்டிய மனைவியிடமே ஆக்டிவ் செக்ஸ் வைத்துக் கொள்ளமுடியாமல் அடங்கிப் போனார்கள். ஆனால் சிதம்பரநாதனால் அப்படி அடங்க முடியவில்லை. அவரின் உடல் இடம் கொடுக்காவிட்டாலும் மனசு விதம் விதமாக கற்பனை ஊற்றுக்களுடன் அலைந்தது.
அப்போது அவருக்குத் தோன்றியதுதான் நாவின் வன்மை. வாய்க்கு வயதாகாதே என்று எண்ணி உற்சாகமானார். ‘வாய்’மையே வெல்லும் என்று நம்பத் தொடங்கினார். யாமிருக்க பயமேன் காலண்டர்களைப் பார்க்கும்போது அவருக்கு ‘நாவிருக்கப் பயமேன்’ என்று சொல்லத் தோன்றும். நாக்கு அவருக்கு அதிக நம்பிக்கை கொடுத்தது. நாட்கள் செல்லச்செல்ல நாவால் ஆழமாக நிரடினால் அது பெண்களுக்கு மிகுந்த உற்சாகமளிக்கும் என்பதை அனுபவ பூர்வமாக நம்பத் தொடங்கினார். .
அவ்வளவுதான்… அவரது ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. தனது வயதைக் காரணம்காட்டி இளம் பெண்களை தைரியமாக நட்புடன் அணுகத் தொடங்கினார். “யு லுக் க்ரேஸ்புல் அண்ட் கார்ஜியஸ்” என்று அவர்களிடம் வசீகரமாகப் புன்னகைப்பார். பெரும்பாலோர் அவரது புகழ்ச்சிக்கு மயங்கி விடுவார்கள். சற்று நெருங்கியதும் அவர்களிடம், “யு நோ ஐயாம் வெரி ஓல்ட்… பட் ஐ கேன் ஸ்டில் கீப் யு ஹாப்பி” என்று ரகசியமாக உள்ளே நுழைந்து விடுவார்.
இன்றளவும் அவரது அட்டகாசத்துக்கு அளவே இல்லாமல் போனது…
அன்று ஒரு சீமந்ததிற்காக மனைவியுடன் மயிலாப்பூர் சென்றிருந்தார். அங்கு டாக்டர் சரண்யாவைப் பார்த்துப் பேச நேரிட்டது. பந்தயக் குதிரை மாதிரி கழுவிச் சீவிய பப்பாளி நிறத்தில் கம்பீரமாகக் காட்சியளித்தாள். அவளைப் பார்த்தவுடன் சிதம்பரநாதனுக்கு நாக்கு ஊறியது. அவளுடன் சற்று தனிமை கிடைத்தவுடன்,
“என்ன சரண், யு லுக் வெரி ப்ரெட்டி… ஐ கேன் நைஸ்லி ப்ளேவ் (plough) யூ வித் மை ரோட்டேட்டிங் டங்…” என்று புன்னகைத்தார்.
சரண்யா அதிர்ந்து போனாள். கிழவன் இன்னும் மாறவேயில்லை போலும்… சின்ன வயதில் தன்னைச் சிதைக்க முற்பட்ட அதே கிழவன்… அவளுள் சினம் பொங்கியது. அவளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த கருநாகம் தலையைச் சற்று தூக்கிப் பார்த்தது.
“அப்படியா தாத்தா, எங்கே உங்க நாக்கை நீட்டிக் காண்பிங்க…”
ஆவலுடன் நாக்கை நீட்டிக் காண்பித்தார்.
“நீளம் காணாது தாத்தா. யு நோ ஐம் எ டென்டிஸ்ட். ஐ கேன் கிவ் யு எ ஸ்மால் ட்ரீட்மென்ட் அண்ட் யுவர் டங் வில் பிகம் லாங்… சண்டே க்ளினிக் வாங்களேன்…” தனது விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினாள்.
சிதம்பரநாதன் அதை வாங்கிக்கொண்டு “கண்டிப்பாக” என்றார்.
ஞாயிற்றுக்கிழமை. காலை பத்துமணி. அடையாறில் சரண்யாவின் க்ளினிக். வார விடுமுறை என்பதால் அங்கு யாருமே இல்லை.
“வாங்க தாத்தா…” வரவேற்றாள்.
மெல்லிய ஏஸியில் க்ளினிக் சுத்தமாக அழகாக இருந்தது.
அவரை உள்ளே அழைத்துச்சென்று அவருக்கு எப்ரன் அணிவித்தாள். தனக்கான மாஸ்க்கை அணிந்து கொண்டவுடன், அங்கே குஷன்களுடன் அழகாக இருந்த நீண்ட நாற்காலியில் அவரை வசதியாகப் படுத்துக்கொள்ள உதவி செய்தாள். அருகே எவர்சில்வர் கலரில் சிறிய வாஷ் பேஸின். அவரின் தலைக்கு மேல் இருந்த பவர்புல் ஹெட் லைட்டைப் போட்டு ஒளிரச் செய்தாள். அவருக்குக் கண்கள் கூச, கண்களை மூடிக்கொண்டார்.
“நாக்கை நீட்டுங்க தாத்தா…”
எச்சிலை நன்கு முழுங்கிவிட்டு வறட்சியான நாக்கை வெளியே நீட்டினார். ‘அப்பாடி இனி என்னுடைய நாக்கை நன்கு சுழட்டலாம்… அதையும் இவளிடமே முதலில் ஆரம்பிக்கலாம்” சிதம்பரநாதனுக்கு உற்சாகம் கரை புரண்டது.
டாக்டர் சரண்யா முதலில் வெள்ளை நிறக் காட்டனால் அவரது நாக்கை அழுந்தத் துடைத்துவிட்டாள். பின்பு பாட்டிலில் பழுப்பு நிறத்தில் இருந்த ஒரு திரவத்தை எடுத்து அவரது நாக்கில் தடவினாள்.
“தாத்தா இன்னும் இரண்டு நிமிடங்களில் உங்கள் நாக்கு மரத்துப் போகும்… டேஸ்ட் பட்ஸ்களுக்கு உணர்ச்சியே இருக்காது…”
கண்களை மூடியபடியே “சரிம்மா” என்றார்.
சிதம்பரநாதனின் நாக்கு முற்றிலுமாக மரத்துப் போனதை உறுதி செய்துகொண்டாள்.
நாக்கை இழுத்துப் பிடித்துக்கொண்டு, மிகக் கூர்மையான கத்தரிக்கோலை எடுத்து, அவரது நாக்கின் கீழ்ப்புரத்தின் அடியில் நிதானமாக, வசமாக வைத்துக்கொண்டாள்.
அவளின் உள்ளே இருந்த கருநாகம் சீறிப் பாய்ந்து எட்டிப் பார்த்தது.
நிதானமாக அவரது நாக்கை கத்தரிக்கோலால் இரண்டாகத் துண்டித்தாள்.
துண்டான நாக்கு, ரத்தம் பீறிட வாஷ்பேஸினில் தெறித்து விழுந்தது.
சரண்யாவின் முகத்திலும் ரத்தம் ஏராளமாக தெறித்தது.
எதோ ஒரு விபரீதம் நடந்துவிட்ட மாதிரியான உணர்வு தோன்ற சபரிநாதன் கண்களைத் திறந்து பார்த்தார். வாஷ்பேஸினில் துண்டாகிக் கிடந்த நாக்கைப் பார்த்ததும், தன் வாயை ஒருமுறை அவசரமாக மூடிப்பார்த்து தனக்கு நாக்கே இல்லாததை உறுதி செய்துகொண்டார். பிறகு பெரிதாக வாய்விட்டு அலறினார்…
கண்களில் ஏராளமான மிரட்சியுடன் சரண்யாவை ஏறிட்டுப் பார்த்தார்.
குரூர வெற்றிப் புன்னகையுடன் அவள் சிதம்பரநாதனைப் பார்த்தபோது, அவள் ஒரு ருத்ர காளியாக அவருக்குத் தோன்றினாள்.
ஏற்கனவே திரு கண்ணனின் காண்டீபன், அடி கிஸ்ஸால, நீலா ஆகாஷ் போன்ற கதைகளைப் படித்துவிட்டு, ஆடிப் போயிருந்தோம். தற்போது ருத்ரகாளி கதையைப் படித்துவிட்டு உறைந்து போயுள்ளோம்.
லாவண்யா, மேட்டூர் டேம், சேலம்.
பயங்கர செக்ஸியாக எழுதும் திரு.கண்ணனுக்கு தமிழகத்தின் ‘குஷ்வந்த் சிங்’ என்று பெயர் வைக்கிறோம்.
முனைவர் வே.தங்க பாண்டியன், மதுரை