யோசனை! – ஒரு பக்க கதை





அலுவலகத்திற்குச் செல்லும் திவ்யாவைக் கண்ட ஆதவன் முகத்தில் மின்னல் மலர்ச்சி.
அவள் அருகில் வண்டியை நிறுத்தி, ”ஒரு உதவி…? ” என்றான்.
”சொல்லுங்க ? ”
”போற வழியில உள்ள தபால் பெட்டியில இந்த கவரை சேர்க்கனும்.” நீட்டினான்.
”கண்டிப்பா…” கை நீட்டி வாங்கி நடந்தாள்.
நாலடி நடந்தவள் உறையைப் பார்த்து தன் கைபேசியை எடுத்து எண்கள் அழுத்தி காதில் வைத்து…….
”ஹலோ..!” என்றாள்.
”சொல்லுங்க திவ்யா.? ”
”இப்போ பேசுறது என் நம்பர். சேமிச்சு வைச்சுக்கோங்க.” சொன்னாள்.
”முகத்தைப் பார்த்து மனசைப் படிச்ச நமக்கு எப்படி பேசன்னு யோசனை. அதான் என் கைபேசி எண், விலாசத்தைத் தெரிவிக்க இந்த அஞ்சல் உறை யோசனை.” என்றான்.
”நன்றி !” திவ்யா மலர்ந்தாள்.
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
Good ப்ரோபோசல் பய Adhavan.