முனிவினும் நல்குவர் மூதறிஞர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 40 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சளுக்க நகராகிய வாதாபியைக் கொள் ளை யிட்ட பல்லவ வீரர்களுள் செங்கதிர்மாறன் என் றொரு பெருந்தகையாளன் இருந்தான். போரில் அவன், தன் மெய் முழுதும் காயமடைந்து, விடாயால் வருந்தினான். 

அவன் தோழர்கள் போர்க் களத்திற்கு மிக வும் தொலைவிலிருந்து நறுநீர் கொணர்ந்தார்கள். அதை அவன் பருக நினைக்குமளவில் ஓர் ஏக்கக் குரல் கேட்டுத் திரும்பி நோக்கினான். சளுக்க வீர னொருவன் விடாயினால் நெடுநேரம் விக்கி ஏங்கு வது கண்டு, தனக்கு வந்த நீரை அவனுக்கே கொடுக்க முனைந்தான். 

ஆனால், நீரை எடுக்கத் திரும்பியதும் அச் சளுக்கன், தன் கைவாளை அவன் முதுகுப் புறம் வீசினான். நல்ல வேளையாக சளுக்கன் கையின் ஆற்றல் மிகவும் குன்றி யிருந்ததனால் செங்கதிர் மாறன் தப்பிப் பிழைத்தான். 

தன் உயிர் மறுத்து உதவி செய்த அவ்வள்ள லிடம் நன்றி கொன்ற சளுக்கன்மீது அனைவரும் சீற்றங் கொண்டெழுந்தனர். செங்கதிர்மாறனும் சீற்றங்கொண்டான். ஆனால், அவன் பிறரைத் தடுத்து, “சளுக்கன் எனக்குச் செய்த தீமைக்குத் தக்க தண்டனை நானே கொடுக்கிறேன்,” என்று கூறினான். 

அதன்பின் அவன் அச்சளுக்கனை நோக்கி, நீ தூய வீரனா ? நன்றிகொன்ற உனக்கு நான் நினைத்தபடி குடிக்க இருந்த நறுநீர் முழுமையும் தரக்கூடாது. இதோ பாதி நீர் மட்டும் தருகிறேன். குடித்துத் தொலை,” என்றான். 

சீற்றத்திலும் ஈகையைக் குறைப்பதன்றி நிறுத் தாத அவன் இயற்கை அருட்குணங் கண்டு அச் சளுக்கன் கூட மனம் மாறி அவனிடம் மீண்டும் நட்புக் கொண்டான். 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *