முட்டைக்கு ஒரு புத்தகம்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 102
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சீனப் பையன் ஒருவன் பலகாரம் வாங்கக் கடைக் ப் போனான். சீனப்பிள்ளைகளின் வழக்கப்பிரகாரம் ஒரு கோழிமுட்டையைக் கொண்டு போனான்.
வழக்கமாகக் காலைச்சிற்றுண்டி வாங்கும் கடை முன்னால் மக்கள் கூட்டம் மிகுதியாயிருந்தது, முட்டி மோதிக்கொண்டு முன்னால் போய்விட்டான். அங்கு நின்ற ஓர் ஆங்கில துரையைப் பார்த்தவுடன் ஆச்சரியமடைந்தான். இதற்கு முன்பு அவன் வெள்ளை முகத்தைப் பார்த்தவனல்லன்.
அவ்வெள்ளையர் பல சிறுசிறு நூற்களை விற்றுக் கொண்டிருந்தார். பலர் காசு கொடுத்து வாங்கிக் கொண்டார்கள். சீன மொழியில் அச்சிடப்பட்ட நற்செய்திப் பங்குகள் தாம் அவைகள்.
சிறுவனுக்குப் படிக்கத் தெரியாது. அவனின் தகப்பனுக்கு வாசிக்கத் தெரியும். ஒரு புத்தகம் வாங்கினால் தகப்பன் களிப்படையக்கூடும் என்று கருதினான்.
“இந்த மூட்டைக்குப் பதில் ஒரு புத்தகம் கொடுப்பீர்களா?” என்று நடுக்கத்துடன் கேட்டான். ஆங்கில மிஷனரி சம்மதித்தார். புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு சிறுவன் மகிழ்ச்சியோடு வீட்டிற்குச் சென்றான்.
சிறுவனின் மகிழ்ச்சி சீக்கிரமே துக்கமாக மாறியது “ஒரு கோழி முட்டைக்குப் பதில், வாங்கிய புத்தகமானால் அது பயனற்றதாகத்தானே இருக்கவேண்டும்” என்று தகப்பனார் வருத்தப்பட்டு சபித்துக்கொண்டார்.
பையன் துக்கத்துடன் பகல் முழுவதையும் போக்கினான். இரவு 12 மணிக்கு தாய் தன் மகனை எழுப்பி “உன் தந்தை சொல்வதைக் கேள்” என்றாள்.
“மகனே! இது ரொம்ப நல்ல புத்தகம். இயேசு என்ற ஒரு மனிதர் குருடனையும் சப்பாணியையும் சுகப் படுத்திவிட்டாராம். முடவன் நடக்கவும், குஷ்ட ரோகி குணமடையவும் செய்தால் அவர் உண்மையான கடவுளாகத்தானே இருக்கவேண்டும்?” என்றார்.
மறுநாள் அவர்கள் குடும்பமாக மிஷனெரியைத் தேடிச்சென்று மெய்வாழ்வு பெற்றார்கள்.
“அநேகமாயிரம் பொன்வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்” [சங்.119:72]
“மெய்வாழ்வுக்குரிய நெறியை எனக்குத் தெரியப்படுத்தினீர்” (திருத்தூதுவர் 2:28)
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
