மின்வெட்டு – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,932
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,932
மீனா! இப்பல்லாம் உன் சமையல்ல எங்கம்மாவின் கைமணம் இருக்கு. நேத்து மோர்க்குழம்பும் நல்லா இருந்தது. இன்னிக்கு துவையலும் நல்லா இருக்கே.ஈகோவை விட்டுட்டு எங்கம்மாகிட்ட கேட்டு கத்துக்கிட்டயா?
ம்க்கும், உங்கம்மா கிட்டல்லாம் கேக்கல.அதுக்குக் காரணம் மின்வெட்டுதான்.
என்னது?
பின்னே! ரெண்டு நாளா அம்மியில அரைச்சுதானே மோர்க்குழம்பும் துவையலும் செய்தேன்!
ஓ! மின்வெட்டுக்கு தாங்க்ஸ் என்றான் மனதிற்குள்.
– பூதேவி (ஜூலை 31, 2012 )