மாற்றும் மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 26, 2019
பார்வையிட்டோர்: 18,097 
 
 

முல்லாவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது. அது புறாவைப் போல இருக்கும். முல்லா இதற்கு முன் இப்பறவையைப் பார்த்ததில்லை. அவருக்கு இப்பறவையின் அகண்ட தாடையும், வளைந்த அலகும் அதிக அளவில் இருக்கும் சிறகும் ரசிக்கத் தக்கதாக இல்லை.

”என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா? ஏ பறவையே,உன்னையும் புறா போல அழகாக ஆக்குகிறேன்,” என்று கூறிக்கொண்டே, அதிகமாகவுள்ள இறகுகளைப் பிய்த்தெடுத்தார். வளைந்த அலகை ஒரு சிறு உளி கொண்டு செதுக்கி வளைவைக் குறைத்தார். ஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார்.

பின் திருப்தியாக, “இப்போதுதான் நீ புறா போல அழகாக இருக்கிறாய்,” என்றார்.

மனிதர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறோம். நம்மிடம் இருந்து யாரேனும் ஏதாவது விசயத்தில் மாறுபட்டு இருந்தால், அது சரியா, தவறா என்று பார்க்காமல் நம்முடைய கருத்துக்கு ஏற்றார்போல அவர்களையும் மாற்ற முயற்சி செய்கிறோம்.

பால்கன் பறவையின் அழகை ரசிக்கத்தவறிய முல்லா போல, நாமும் மற்றவர்களிடம் உள்ள நல்ல விசயங்களை ரசிக்கத் தவறி விடுகிறோம். நம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்தால் அதை ஒரு தவறாகவே கருதுகிறோம். அதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. நம் வழிக்கு அனைவரும் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனால் தான் பிரச்சினைகளே!.

நம் பால்கன் பறவையை பால்கனாகவே பார்க்க வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *