மரணம் கூட என்னைத் தீண்டாது





(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்னடா சேகர் சோகமாக இருக்கிறாய்?” என்று கேட்டவாறு உள்ளே வந்தான் கணேசன்.
“ஒன்றுமில்லை கணேசன்” என்று சொன்னவாறு கையில் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்ட சேகர், கணேசனுக்கும் ஒன்றைக் கொடுத்து விட்டு “உன்னிடம் சொல்லக் கூடாத விஷயமில்லை. இன்று திவ்யா அறைக்கு வந்திருந்தாள்” என்றான்.
“அவள் இங்கு வந்திருந்தால் நீ சந்தோஷப்பட்டிருக்க வேண்டுமே ஒழிய துக்கமாக இருக்கிறாய்?”
“எனக்கு எய்ட்ஸ் வந்திருக்கிற உண்மையைச் சொன்னேன். காச் மூச்சென்று கத்திவிட்டுப் போனாள்” சிரித்தான் சேகர்.
“என்னடா இதையெல்லாம் கூட அவளிடம் சொல்ல வேண்டுமா? நீயே ஏன் உன்னையே தேய்த்துக் கொள்கிறாய்”
“உண்மையைச் சொன்னால் தப்பாடா? அது மட்டு. மில்லை. நீ கூட மனம் திறந்து அன்று நான் காதலிருப்பதற்கு முன்பே நீயும் அவளைக் காதலித்ததாகச் சொன்னாயே, அதையும் கூட அவளிடம் சொன்னேன்.
என்ன மாமா வேலையா பார்க்கிறாய்? உன் நண்பனுக்கு ஏதாவது ஒரு வேசியைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வை என்று சொல்லி விட்டுப் போனாள்” திரும்பவும் சிரித்தான் சேகர்.
“என்னடா எவ்வளவு மென்மையான விஷயத்தை..” என்று கணேசன் முடிப்பதற்குள் “நான் பக்குவமாக அவளுக்கு மென்மையாகத்தான் சொன்னேன் கணேஷ். எனக்குத்தான் வாழ்க்கை இனி இல்லை என்று ஆகிவிட்டப் போது அவளுக்காவது, அவளை விரும்பிய என் நண்பன் மூலம் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று நான் நினைத்தது தவறா? இல்லை அதை எடுத்துச் சொல்ல வேண்டிய விதத்தில் தவறிப் போனேனா என்பதுதான் தெரியவில்லை”
“அது சரி. உனக்கு இந்த எய்ட்சு நோய் எப்படி வந்தது என்பதையாவது, அவளிடம் சொன்னாயா?”
“அதையெல்லாம் எடுத்துச் சொல்லி அவளுக்குப் புரியவாப்-போகுது”
“இருந்தாலும் இவ்வளவு பரந்த மனசு உனக்கு எங்கி ருந்து வந்தது சேகர்? ஏதோ ஒரு குழந்தைக்கு ரத்தம் கொடுத்து அதனால் உனக்கு இரத்தம் போதாத போது உனக்கு ஏற்றிய ரத்தத்தில் இந்த நோயும் கலந்திருந்தது என்பதை ஏன் எடுத்துச் சொல்லவில்லை?”
“கணேசா…. என் மனசுக்கு நான் நல்லவன் என்பது புரியும்போது மரணம் கூட என்னைத் தீண்டுவதற்கு யோசிக்கும். நீ ஏன் கவலைப் படுகிறாய். திவ்யாவை யார் மூலமாவது தெளிவு பண்ணி திருமணம் செய்து கொள்” என்றான் கணேசன்.
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |