மரணப் பிடி
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 19
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வேப்ப மரத்தின் பரந்து விரிந்த நீழலில, ஓலைக் குடிசை வாயிலில் பசித்துப் பதறும் பிஞ்சு மேனியோடு துவண்டு நிற்கிறாள் கனகி. அவள் சோர்ந்த கண்கள் அந்தக் கலட்டு வெளிக்கப்பால் வாழைத் தோட்டத்தினுள்ளிருந்து தாய் வருவதைக் கண்டு விடத் தவித்துப் படபடக்கின்றன.
இன்று ஏழுவயதே நிரம்பிய கனகி, வள்ளியின் வயிற்றில் இருக்கும் பொழுதே அவள் அப்பன் வைப்பாட்டி ஒருத்தியின் வீட்டில் மடங்கி விட்டான். தாயாகியதோடு பிள்ளைப் பாசத்தில் பைத்தியமாகவும் மாறி விட்ட வள்ளி உள்ளூர்த் தோட்டங்களில் கூலி வேலைக்குப் போய் இரண்டு வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி வருகிறாள்.
நேற்றிரவு அந்த வயிறுகள் காய்ந்து கிடக்க நேர்ந்து விட்டது. இன்று காலையிலும் குடிசையில் அடுப்புப் புகைய வழி இருக்கவில்லை. வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும் காலை உணவைக் கொண்டோடி வந்து தருவதாக கனகியின் கன்னத்தைத் தடவிச் சென்ற வள்ளி வருமுன் பசியில் உயிரே போய்விடும் போல் இருக்கிறது, அவளுக்கு!
அதோ கையில் உணவுச் சரையோடு வள்ளி பதைத்துப் பறந்தோடி வருகிறாள். பாதி வழிக்கு ஓடிச்சென்று சரையைப் பறித்துக் கொண்டு குடிசையை நோக்கி ஓடி வந்த கனகி தாய் திரும்பிச் சென்றதையும் கவனிக்காமல் விருட்டென்று குடிசைக்குள் இடியப்பம் நுழைந்து சரையைப் பிரிக்கிறாள்.
நெல்லரிசி பிஞ்சுமிளகாய்ச் சம்பல். நாவில் ஊறிப் பெருகிய உமிழ் நீரை வீழுங்கிவிட்டு இடியப்பத்தை அவசர அவசரமாகப் பிய்த்து வாய்க்குள் திணித்துக் கொண்டிருக்கையில் குடிசைக்கு மேலே வானத்தில ஆகாய விமானத்தின் ஒலி!
அந்த ஒலி நொடிக்குள் பேரொலியாகி…… கனகி அதிர்ந்தாள். ஏதோ அபாயம் நெருங்குவதை உணர்ந்து வெளியில் ஓட எண்ணினாள். ஆனால் பசியைத் தீர்ப்பதற்காக விரைந்துண்ணும் காரியத்தை ஒரு நொடிப் பொழுதும் நிறுத்த அவளால் முடியவில்லை. பசியின் கொடூர வேகத்தைத் தணிக்க ஆவாவென்று அவள் சாப்பிட்டு முடிப்பதற்குள் ஆகாயத்தில் இயந்திரக் கோளாறுக்குள்ளாகி நிலம் நோக்கி வந்து கொண்டிருந்த விமானம் அந்தக் குடிசையின் மேல் இடி முழக்கத்தோடு வீழ்ந்து தீப்பற்ற கனகியின் குரல் கீச்சொலியாக எழுந்து அடங்கியது.
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
தானியங்கி பண இயந்திரம்
ரா.நீலமேகம்
October 18, 2026
ரத்தம் ஒரே நிறம்
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
October 18, 2026
அமைதியின் குரல்
புஷ்பராஜ் கந்தசாமி
October 18, 2026