மனிதாபிமானம் – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,154
அப்பா…யாரோ பைக்கிலே இருந்து விழுந்துட்டாங்க! நிறுத்தி பார்க்கலாம்பா…’’
‘’டேய்…பேசாம வாடா.உன்னை இண்டர்வியூவிலே விட்டுட்டு நான் ஆபிசுக்கு போகணும்’’
செழியனை இறக்கி விட்டுட்டு திரும்பும் வழியில் ஒரு திருப்பத்தில் திடீரென்று வந்த காரினால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்!
செழியனின் வயதையொத்த ஒரு வாலிபன் அவரை தூக்கி ஓரமாக உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தான்.
‘’பெரிய அடி எதுவும் இல்லை. நீ கிளம்புப்பா’ என்றார்.
‘இல்லீங்க சார்…நீங்க இங்கிருந்து கிளம்பினதும் போறேன். எனக்கு வேலை எதுவும் இலை. இண்டர்வியூவுக்குதான் போறேன்’’
‘’இந்த வேலை இல்லேன்னா இன்னொரு வேலை . பெரியவர்களுக்கு உதவணும். அதுதான் மனிதாபிமானம் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லுவார்.’’
அவருக்கு சுருக்கென்று தைத்துது. வலி இப்போதுதான் தெரிந்தது.
– மதனா (27-10-2010)