மனிதர் உணர்ந்துகொள்ள அது மனித காதல் அல்ல..!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 2,954
சில கதைகளின் முடிவு கண்ணில் நீரை வர வழைத்துவிடும்., அதுபோலவே, விழும் சில கண்ணீர்த் துளிகளும் சில சமயம் மிகப்பெரிய கதையை வரவழைத்துவிடுவதும் உண்டு!
படிக்காத மேதை ரங்கராவ் தோற்றத்தைக் கண்முன் அப்படியே கொண்டு வந்து நிறுத்திவிடுகிற தோற்றம்தான் அந்தப் பெரியவரின் தோற்றமும். உலகத்தில் ஒருத்தரைப்போலவே ஏழுபேர் இருப்பார்களாமே?! அதை மெய்ப்பிக்கும் வகையில் படிக்காத மேதை ரங்காராவின் உருவம்தான், பெரியவரின் தோற்றமும், அவர் வாழ்ந்த வாழ்க்கையும்.
“ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி!”. இதுவரை ரங்காராவும் அந்தப் பெரியவரும் பெருமளவில் ஒன்றே போலத்தான்.
ஒரேஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை…
அந்த ஒன்பதிலே ஒன்றுகூட உருப்படி இல்லை…!! இதில்தான் பெரியவர் ரங்காராவிலிருந்து மாறினார். ஒன்பது பிள்ளைகளும் உருப்படியானாலும், ஏனோ பெரியவர் பெரிதாய் வாழ்க்கையில் சோபித்துவிடவில்லை.
அவர் ஒரு வீடு கட்டினார். அது ஓட்டுவீடுதான். கட்டும்போது அந்தக் காலத்தில் அந்த காண்டிராக்டர் ஒரு ஆறாயிரம் ரூபாய்தான் கூடுதலாய்க் கேட்டார். ஓட்டுவீட்டை ‘டெரஸ்டு’வீடாக்க!. பெரியவர் ஒரு பாலிசிதாரர். எல்.ஐசி பாலிசி காரர் அல்ல..! கடன் வாங்க்குவதில்லை எனும் பாலிசி அவர் பாலிசி!!. காரணம் பெரியவரின் அப்பா, அப்பாவியாக, யாருக்கோ ஜாமீன் கைஎழுத்து போட்டு இருந்த வீட்டைத் தொலைத்துவிட்ட ஏமாளித்தனம் இவர் அடிமனதில் ஆழப்பதிந்ததால், தன் பிள்ளைகட்டும் கடன் வாங்காதீங்கங்கறதை கீதாஉபதேசமாய் உபதேசித்து வந்தார்.
அவர் வீட்டுக்கு ஜன்னல் கிழக்கும் மேற்குமாயிருக்கும் அதற்குக் கொசு வலைகூட அடிக்க மாட்டார். கொசுகடி கும்பகோணக் கொசுவை விஞ்சினாலும், ஈஸி சேரில் அமர்ந்தபடியே பனை விசிறியால் தனக்குத்தானே கவரி வீசுவாரே ஒழிய, கொசுவலை அடிக்க மாட்டார்.!, உத்தரத்தில் ஃபேன் மாட்ட மாட்டார்.! கருமி என்பதால் அல்ல!…ஆன்று அவர் மனம் ஒன்பதுக்கும் புத்தியில் எட்டவில்லை!! அவருக்குள்ளிருந்த கருணை உள்ளத்தின் பெருமை இப்போது புரிகிறது. ஃபேன் மாட்டினால், திறந்திருக்கும் ஜன்னல்கள் வழியே வந்து ஓட்டு உத்திரத்தில் கூடு கட்டும் குருவிகட்கு இடையூறு என்று எண்ணினார். அப்படி, ஃபேனில் அடிபடாத குருவிகள் கூட்டிலிருக்கும் குஞ்சுகளை விழுங்க உத்திரம் வழியே பாம்புகள்கூட வரும். வீட்டிலுள்ளவர் தொந்தரவைப்பார்த்தார் ஒருநாள் வேண்டா வெறுப்பாக பெரியவர் ஜன்னல்களுக்கு கோழி வலையைக் கொசு வலையாய் அடித்தார். குருவி வரவில்லையே ஒழிய கொசு வந்தது. வலைவழியே இருந்தபடியே குருவிகள்’ இன்னா நைனா இப்படி பண்ணீட்டயேன்னு?!’ கேட்கறா மாதிரி கோழிவலையைப் பற்றிக் கொண்டு ஜன்னல் வையே வெளியிலிருந்து கிறீச்சிடும், பெரியுவர் விழிகளில் சில சொட்டு கண்ணீர் கசியும்.
இன்று, குருவி வளர்க்க கூடுதருகிறார்கள். அவரோ குருவிகளுக்காகவே குருவிகள் இனம் வளர தன் வீடு வளராமல் காத்தார். எதிர் வீட்டுப்பசங்க கிரிக்கெட் ஆடி ஓட்டை உடைத்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார், அதற்காக அச்சப்பட்டு, டெரஸ்ட் ப்ண்ணலை., ஒன்பதில் எல்லாம் உருப்படியாயும் தன் மனப்படி யாருமில்லையே என்கிற எதிர்பார்ப்பே விழிநீராய்க் கசிந்து வித்யாசமான கதையாய் கசிந்தது. ஓட்டுவீடு உருமாறி டெரஸ்டானால், குருவிகள் எங்கே போய் குடியிருக்கும்?! என்ற அவரின் குருவிமீதான காதல் மனிதர்கள் புரிந்து கொள்ள மனித காதல் அல்ல…! அதையும் தாண்டி புனிதமானது.
அந்தப் புனித பண்பும், அன்பும் கடவுளால் புரிந்து கொள்ளப்பட்டதால்தான் அவருக்கு ஒன்பது வாரீசு. அவர் வாசீர்சுகளுக்கு ஒவொருவருக்கும் ஒன்று இரண்டோடு சரி.
வாழும் உயிர்களை நாம் நேசித்தால், வாழும் வாழ்க்கை நம்மை நேசிக்கும்.