பேதைமை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,494
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
அறியாமை
இராசமாபுரத்து அரசனான சச்சந்தன், தன் அரசைச் செலுத்தி வரும்படித் தன் மந்திரியான கட்டியங்காரனிடம் ஒப்படைத்தான். அவன் நம் பிக்கை என்னும் குணத்தை அறியாதவன். அவ் வறியாமையை யுடைமையால், பழி பாவங்களாகிய நாணம் அடைய வேண்டியவைகளுக்கு வெட்கப் படாமலும் தேடவேண்டிய புகழைத் தேடாமலும் அன்பு கொள்ளும் இடமான தன் அரசனிடத்தில் அன்பு கொள்ளாமலும் காக்கவேண்டிய நல் லொழுக்கத்தைக் காக்காமலும் அவன் சச்சந் தனைக் கொன்று தானே அரசனாகிப் பழிபாவங் களை அடைந்ததோடு இன்பம் இல்லாத அரசையும் பெற்றான். இவ்விதம் செய்யும் தொழில் அறிவில் லார் தொழிலாகும் என்று வள்ளுவரும் கூறினார்.
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில். (63)
நாணாமை = நாணவேண்டிய பழி பாவங்களுக்கு வெட்கப்படாமையும்
நாடாமை . = ஆராய்ந்து தேடவேண்டியவற்றைத் தேடாமலும்
நார் இன்மை = (எவரிடத்தும்) அன்பு இல்லாமையும்
யாதொன்றும் = (காத்தற்குரியவற்றுள்) எது ஒன்றையும்
பேணாமை = காவாமையும்
பேதை தொழில் = அறிவில்லாதவனுடைய செயலாகும்.
கருத்து: நாணாமை, ஆராய்ந்து தேடாமை, அன் பின்மை, பேணாமை இந்நான்கு குணங்களும் அறிவில்லாதவன் செயலாகும்.
கேள்வி: அறிவில்லா தவன் தொழில் என்ன?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.