பூவாண்டிச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 11, 2025
பார்வையிட்டோர்: 191 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ராசாவுக்கு ரெண்டு பொம்பளப் பிள்ளைக. ராசா, இவங்கள நல்லா வளக்குறாரு. நாட்டயும் நல்லாப் பரிபாலனம் செஞ்சுகிட்டிருக்காரு. 

ராசாவோட தங்கச்சி வீட்ல, ஒரு ஆம்பளப் பையன் இருக்கா. அவன விட்டுட்டு, ராசா தங்கச்சியும் – தங்கச்சி புருசனும் செத்துப் போனாங்க. 

இப்டி இருக்கயில, ரெண்டு பொண்ணுகளும் வயசுக்கு வந்திட்டாங்க. வயசுக்கு வந்து, ஒன்னப் பாரு என்னப் பாருண்டு இருக்காங்க. இருக்கயில, ரெண்டு வேரயும், ஒரு முனி தூக்கிட்டுப் போயிருச்சு. தேடுறாங்க தேடுறாங்க… தேசந்தேசமா தேடுறாங்க. நாடு நாடாத் தேடுறாங்க. எங்ஙயும் காங்க முடியல. 

அப்ப, தங்கச்சி மகன் வாரா. நாந்தேடிப் போறேண்டு மாமங்கிட்ட கேக்குறா. மருமகனத் தொலைக்க ராசா விரும்பல. சின்னப்பய எங்குட்டாச்சும் போயிருவாண்ட்டு, போக வேணாம்ண்டு சொல்றாரு. 

சொல்லவும்-, கேக்காம, மந்திர வாளயும், கணயாழியயும் வாங்கிக்கிட்டுப் போறா. நடந்து போறர். 5 ரெம்பத் தூரம் போன பெறகு, ஒரு மரத்தடில ஒக்காந்து கட்டுச் சோத்த சாப்டுறா. 

சாப்டயில, அங்கிட்டிருந்து ஒரு வணிகன் வர்ரா. வந்ததும், எங்க போறண்டு கேட்டா. கேக்கவும் -, எங்க மாமன் மகளத் தேடிப் போறேண்டு சொன்னா. ஒரு ஆளுனால காங்க முடியாது. இதுக்கெல்லாம் ரெண்டுவேரு போகணும்ண்டு சொல்றா. சரி! நிய்யும் வாண்டு சொல்லி, ரெண்டு வேரும் போறாங்க. 

காட்டுப் பாதயில குருத போகுது. அப்ப, அங்கிட்டிருந்து எதுக்கால, பார்வதி. பரமசிவ ரெண்டுவேரும் வாராங்க. இவங்களப் பாத்திட்டு, எங்க போறங்கண்டு கேட்டாங்க. எங்க மாமன் மகள்களக் காணம், தேடிப் போறோம்ண்டு சொல்லவும் -, அவங்க மூணு குளுவைகளக் குடுத்து, எதனாச்சும் ஆபத்து வந்தா இந்தக் குளுவைகள்ல: 

ஒண்ணப் போடுங்க, தண்ணியாப் போகும்டு 
ரெண்டாவதப் போடுங்க, மலாயாப் போகும் 
மூணாவதப் போடுங்க, தீயாப் போகும்ண்டு 

சொல்லி குடுத்தாங்க. அதயும் வாங்கிக்கிட்டுப் போறாங்க. போயிப் பாக்கயில, மலமேல ஒரு பெரிய குக இருக்கு. அந்தக் குகயில, ரெண்டு வேரயும் தனித்தனியா வச்சிருக்கு முனி. பாக்கயில, ரெண்டுவேரும் அழுதுகிட்டிருக்காங்க. 

மொதல்ல, – மூத்தவ இருக்ற குகைக்குள்ள போயி -, கணயாழிய கொடில முடுஞ்சு மண்டக்கி நேரா விட்டர். கணயாழி போயி மண்டயில பட்டுச்சு. படவும் – எந்திரிச்சுட்டா, எந்திரிச்சுப் பாக்கயில, அத்த மகன் . வாண்டு கூப்ட்டர் வந்தா வரவும் குருதயில தூக்கி வச்சுக்கிட்டு வேகமா வராங்க. 

அப்ப, – ஆங்காத்து வீசுது – பொங்காத்து வீசுதுண்டு, முனி வருது. இவங்கள பாத்திட்டுத் தொடுத்து வருது. தொடுத்து வரயில, ஒரு உருண்டயப் போட்டா. பூமியெல்லாந் தண்ணியாப் போச்சு. தண்ணியக் கடந்து முனி வெரட்டி வருது. வெரட்டி வரவும், ரெண்டாவது உருண்டயப் போட்டர். மலயா வளந்து நிக்கிது. முனி; அந்த மலயயும் தாண்டி வருது. வரவும், மூணாவது உருண்டயப் போட்டா, திய்யாப் புடுச்சு எரியுது. எரியவும், முனி திய்யக் கடந்து வர முடியல. அப்ப ஊர நெருங்கி வந்திட்டாங்க. வரவர – கூட இருக்ற வாணிகச் செட்டி சந்தேகப்பட்டுக்கிட்டிருக்கா. 

அண்ணக்கி ராத்ரி, இவ தனியா படுக்க மாட்டேண்டுறா, ஏண்டா முனி, தூக்கிட்டுப் போயிரும்ண்டு. சுத்தி காவக்காரங்கள் இருக்க வச்சுட்டு, ரெண்டுவேரும் அரமணக்குள்ள படுத்திருக்காங்க. அப்பஃ இவ, அவள மடில போட்டு ஒறங்குறா. மாறி – மாறி, ஒருத்த மடியில ஒருத்த ஒறங்கிக்கிட்டிருக்காங்க. 

ஒறங்கிக்கிட்டிருக்கபோது, முனி வந்திருச்சு. வந்து, காவக் காரங்கள புடுச்சுத் தூண்ல கெட்டி வச்சிட்டு, இவனத் தூக்கிக் கீழ போட்டுட்டு, அவளத் தூக்கிட்டுப் போயிருச்சு. கொண்டு போயி, ஊருக்கு அடுத்த ஒத்தப்புளிக்குக் கொண்டு போகுது. அங்க ஒரு பெரிய பாதாள அறை இருக்கு. அங்க தங்கச்சியும் இருக்கா. இவளயும் அங்க கொண்டு போகுது. இதப் பாத்துக்கிட்டிருந்தவ வந்து சொல்லிப்பிட்டா. 

சொல்லவும், இவ போறா. போயி, ஏழு வண்டி ஊனாங்கொடியப் புடுங்கி, ஒண்ணாக் கெட்டி, கொடியப் புடிச்சு எரங்கிப் போறா. அப்ப, வாணிகச் செட்டி மக, காவ காத்துக்கிட்டு மேல நிக்கிறா. 

போயிப் பாக்கயில, ரெண்டு பொண்ணுகளவும் ரெண்டு பக்கம் போட்டு, முனி: நடுமையத்ல படுத்து, தங்கச்சி மேல ஒரு காலும், அக்கா மேல ஒரு காலும் போட்டுப் படுத்துக் கெடக்கு. 

போனவ, ரெண்டு வேரயும் வெலக்கி விட்டுட்டு, ஒரே வெட்ல ரெண்டு துண்டாக்கிப்பிட்டா முனிய. வெட்டுன அவசரத்ல, மந்திர வாள அங்க போட்டுட்டு, மூணு வேரும் மேல ஏறி வாராங்க.கங்கின் 

மேல வந்தவ, இடுப்ல ஒடவாளப் பாத்தா. இல்ல, ரெண்டு வேரயும் வாணிகச் ஒட்டி மகனப் பாத்துக்கிரச் சொல்லிட்டு, பெறகும் எரங்கிப் போறா. போயி, வாள் எடுத்துக்கிட்டு, மேல ஏறி வரயில, கொடிப் பக்கத்ல இருந்த வாணிகச் செட்டி, கொடிய வெட்டி விட்டுட்டா கொடிய வெட்டி விடவும், பாதாளக் கொகைக்குள்ள விழுந்து நொறுங்கிப் போனா. 

அவ விழுந்து செத்துப் போகவும், இந்தப் பிள்ளைக மயமாத் துடிக்குதுக. அவ, நடங்க வீட்டுக்குப் போவோம்ண்றர். இந்தப் பிள்ளக போக மாட்டேங்குதுக. போக மாட்டேண்டவும் நல்லாப் புளிய வெளாற வெட்டிக்கிட்டு வெரட்டி வெரட்டி அடிக்கிறா. அடிச்சு வீட்டுக்குக் கொண்டு வரா. அப்ப பாத்தவங்க சந்தோசப்படுறாங்க. ஏ..ண்டா, காணாமப் போன பிள்ளைக வந்திருச்சுண்டு. சந்தோசமா வீட்ல வச்சிருக்காங்க. இருக்கயில, இந்தப் பிள்ளைக மொகத்ல ஈஸ்வரி (கலை) இல்ல. இப்பயே கல்யாணம் வக்யணும்ங்கறா வாணிகச் செட்டி. ஆனால், இந்தப் பிள்ளைகளுக்குக் கல்யாணத்ல் இஸ்டமல்ல. 

இப்டி இருக்கயில. கல்யாணத்ல இருந்து தப்பிக்கிறதுக்கு, நாங்க நோம்பு இருக்கணும்ண்டு, தாயி தகப்பங்கிட்டச் சொல்றாங்க. தாயுந் தகப்பனும் நோம்பு இருக்கச் சரிண்டு சொல்லிட்டாங்க. எப்படிப்பட்ட நோம்புண்டா, ஊசிய நட்டு, அதுமேல ஒக்காந்து நோம்பு செய்றாங்க. அத்த மகன, கடவுளு காப்பாத்தித் தரணும்ண்டு ஊசில தவமிருக்காங்க. 

இருக்கயில, இந்த வாணிகச் செட்டி மக், தெனக்கிம் ஒத்தப் புளிய மரத்துக்குப் போயிப் பாக்க, – திரும்பி வந்துற, போயிப் பாக்க, – திரும்பி வந்திறவுமா இருக்கா. 

இந்தப் பிள்ளைக, அத்த மகி உயிரோடவரணும்ண்டு, ஊசில தவமிருக்காங்க. இருக்கயில, பார்வதியும் – பரமசிவனும் இவங்க தவத்துக்கு எரக்கப்பட்டு, பாவம்! இந்தப் பொண்ணுக, அன்னமுமில்லாம, தண்ணியுமில்லாம இப்டிக் கெடக்குகளேண்டு, மனசு எரங்கி, இவங்க நோம்பு இருக்ற எடத்துக்கு வராங்க. வந்து, எதுக்கு நோம்பு இருக்கீங்கண்டு கேக்குறாங்க. 

கேக்கவும் -, எங்கத்த மகன, பாதாளக் கொகைக்குள்ள எரங்கவும், இந்த வாணிகச் செட்டி மக, கொடிய வெட்டி விட்டுட்டா. வி ழுந்து செத்துப் போனாரு. இப்ப, எங்கள இந்த வாணிகச் செட்டி மக் கல்யாணம் முடிக்கணும்ண்டு சொல்றர். இப்ப எங்கத்த மக உயிரோட வரணும். நீங்க எழுப்பித் தரணும்ண்டு கேட்டாங்க. நீங்க நோம்ப நிறுத்திக்கங்க, நாங்க, உருசுண்டாக்கித் தரோம்ண்டு சொல்லிட்டுப் போயிட்டாங்க. 

போனதும், கழுகுகள விட்டு, கறித்துண்டங்கள பெறக்கிட்டு வரச் சொன்னாங்க. பெறக்கிட்டு வந்து குடுத்துச்சுக. அதுல ஒரு துண்டத்தக் காணம். அந்தத் துண்டம் போயி -, ஏழு கடலுக்கு அப்பால போயிக் கெடக்கு. அதப் போயி, ஒரு கழுகு எடுத்திட்டு வந்து குடுத்துச்சு. எல்லாத்தயும் ஒண்ணு சேத்து வச்சு உசுரு குடுத்து எழுப்பி விட்டாங்க. 

எழுப்பி விடவும் எந்திரிச்சு வணங்குனர். வீட்டுக்குப் போற வரைக்கும் ரூவத்த மாத்தி விடச் சொன்னர். மாத்தி விட்டுட்டாங்க. புண்ணும் புளிச்சியுமா, வரா. வரயில், வாணிகச் செட்டி, ஒத்த புளிய மரத்துக்குப் போறா. இவ வீட்டுக்கு வாரா. 

வந்து, பூவாண்டிச்சி வீட்ல தங்கிக்கிட்டர். அந்தப் பூவாண்டிச்சி, தெனக்கிம் பூக்கொண்டு போயி; அந்த வீட்ல குடுத்திட்டு வருவாளாம். ஒருநா, பூ முடியயில, கணயாழிய வச்சு முடிஞ்சு விட்டுட்டா. அண்ணக்கி: ராசா மகளுக்குக் கல்யாணம், பூவாண்டிச்சி, பூவக் கொண்டு போயிக் குடுத்தா, குடுக்கவும் – இந்தப் பிள்ளைக நம்பிக்கையில்லாம, பூவ வைக்காமப் போட்டுட்டுப் பேசாம ஒரங்கிட்டாங்க. ஒரங்கயில, அத்த மக எந்திரிச்சு வரமாதிரி கனாக் கண்டாங்க. அந்த ஆவுகத்ல பூவ்வ எடுக்க, அதுக்குள்ள இருந்து ஒரசுச்சு. ஒரசவும் பாத்தா கணயாழி. 

அத்த மகனோட கணயாழிண்டு தெரிஞ்சுகிருச்சு. பூவாண்டிச்சி வீட்டுக்குப் பெறப்ட்டுப் போகயில, பூவாணிச்சிகிட்ட ஒங்க வீட்ல ஆரு இருக்கதுண்டு கேட்டா. வீட்ல எம்பேராண்டி இருக்காண்டு பூவாண்டிச்சி சொன்னா. நர் அவரப் பாக்கணும்ண்டு சொல்லிட்டுப் போறாங்க. போயி பாத்திட்டு நம்ம அத்த மகனாச்சேண்ட்டு, அவனயும் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வாராங்க. வந்து பாத்தா.

கல்யாண மேடையில, வாணிகச் செட்டி மக் ஒக்காந்திருக்கா. வந்து, நடந்ததச் சொன்னர். சொல்லயில, வாணிகச் செட்டி மகனுக்கு கெதக் கெதக்ண்டுது. சொல்லிட்டு, இப்ப நீங்க,ஆருக்கு வேணும்ண்டாலும் கெட்டிக் குடுங்கண்டு சொல்லிட்டுப் போறா. ஊருல இருக்க ஆளுக: வாணிகச் செட்டி மகனப் புடிச்சு, சுண்ணாம்புக் காளவாசல்ல வச்சு நீத்துப்ட்டு, அத்த மகனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு, நல்லாப் பொளச்சாங்களாம். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமய மரபு தழுவிய கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *