புல்லறிவாண்மை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,618
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
இழிவான அறிவுடைமை
கொள்ளிடம் ஆறு சுமார் 1, பர்லாங்கு அகலம் இருக்கும். அவ்வாற்றில் வெள்ளம் அதிகமாகச் செல்லும் நேரத்தில் தோணிக்காரர்கள் எப்பொழு தும் , அணா வாங்கினவர்கள் அன்று 4 அணா இக்கரையிலிருந்து அக்கரைசெல்வதற்கு வாங்கினார் கள். அப்போது ஓர் உலோபி , ‘அணா கொடுத்துச் சென்ற நான், மேலும் 31 அணா கொடுத்தா போ வேன், நீந்திச்செல்வேன்” என்று நீந்த ஆற்றில் இறங்கினான். அருகில் இருந்தவர், “வேண்டாம்” என்று தடுத்தனர். பலர் சொல்லைக் கேட்காமலும், தனக்கும் புத்தியில்லாமையாலும் பண ஆசை ஒன்றே எண்ணி நீந்தினான். சிறிது தூரம் போன தும் தண்ணீர்வேகத்தில் அவனை இழுத்துச் சென் றது. சிறிது நேரம் சத்தம் போட்டான். கரையில் இருந்தவர்கள், “நாம் சொல்லியதையும் கேட்க வில்லை; அவனுக்கும் அறியும் சக்தி இல்லை. இத் தன்மையான உயிர் உடலை விட்டு நீங்குமளவும் பூமிக்குப் பெரிய நோய் ஆகும்; அழிதலே நல்லது” என்று எவரும் உதவி செய்யச்செல்லவில்லை. பின் நெடுந்தூரத்தில் உயிர் போய் மிதப்பதைக் கண்டார் கள். பின் வரும் குறளும் இக்கருத்தை அறிவிக்க வந்துள்ளது.
ஏவவும் செய்கலான்; தான்தேறான்; அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய். (64)
ஏவவும் செய்கலான் = (பல்லறி வாளன் தனக்கு நன்மைதருவனவற்றை அறிவுடையார்) சொல்லவும் செய்யான்
தான் தேறான் = (அதுவல்லாமல்) தானாகவும் இவை செய்வன என்று அறியான்
அ உயிர் = அந்த உயிர்
போஒம் அளவும் = (உடலைவிட்டு) நீங்குமளவும்
ஓர் நோய் = நிலத்திற்குத் தாங்குதற்கரிய ஒரு நோயாம்.
கருத்து: அறிஞர் சொல்வதைக் கேளாமலும் தானா கவே அறியாமலும் இருக்கிற புல்லறிவாளன் நிலத்திற்குப் பாரமாகும். –
கேள்வி: உலகிற்கு நோயைப் போல்பவன் எவன்?
விளக்கம்: மலை முதலியவற்றைத் தாங்கும் நிலத் திற்குப் பாவ உடல் பெரும் பாரமாய்த் துன்பம் செய்த லின் “ஓர்நோய்” என்று கூறினார்.
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.