புத்தியுள்ள மனைவி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 101 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜான் என்ற குருவானவர் எலியாவைப் போல மிகுந்த வெறுப்புடன், “ஆண்டவரே போதும்! என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்” என்று அடிக்கடி சொல்வார்.

அவருடைய சபையில் ஓயாது சண்டை. சச்சரவு; குமுறல், குழப்பம். தான் தோன்றித்தனமான தாறு மாறுகளைத் தாங்க முடியாமல் அவ்வாறு அலறுவாராம்.

அவருடைய மனைவி, “இப்படி நீங்கள் சொல்வது ஆண்டவருக்குக் கொஞ்சமும் பிரியமாயிருக்காது. உங்கள் கவலைகளைக் கடவுளிடம் சொல்லுங்கள் என்று பரிவுடன் பலமுறை வேண்டியும் பயனில்லை. ‘கூடி ஜெபிப்போம் வாருங்கள்’ என்று கூவி அழைத்தும் வராமல் இளக்கரித்துப்போய் பெருமூச்சு விட்டார்.

ஒருநாள் இரவில் மிகுந்த துக்கத்தோடு, “ஆண்டவரே போதும்! என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்”” என்று கூப்பாடு போட்டு அலறினார்.

உடனே அவர் மனைவி, கறுப்பு உடுப்பை அணிந்து கொண்டு வெளியே புறப்பட்டார்.

“இந்த இரவில் துக்க உடுப்போடு எங்கே போகி றாய்?” என்று கேட்டார் குருவானவர். அதற்கு அந்த அம்மாள் ‘நான் சவப்பெட்டி செய்கிறவனைத் தேடிப் போகிறேன்.’ என்றார்கள்

குருவானவர் தம் மதியீனத்தை உணர்ந்தார். தம் மனைவி மூலம் உணர்த்திய கடவுளுக்குத் துதி செலுத் தினார்.

“பிரசங்கிமார் பலர் போதிக்கிறார்கள். அவ்வளவு தான், ஆனால் அவர்களுடைய மனைவிமாரோ சாதிக்கிறார்கள், என்றார் பெரியவர் ஒருவர்.

ஆயினும் எல்லோரும் அப்படி அல்ல.

“வீடும் செல்வமும் தாய் தந்தையரால் தரப்படுகின்றன. னால் தக்க விவேகமுள்ள மனைவி ஆண்டவராலேயே தரப்டுகிறாள்.” (பழமொழி ஆகமம் 19:4)

“ஆண்டவரோடு இணைந்திருப்பதில் எப்போதும் மகிழ்ச்சி யோடிருங்கள்; மீண்டும் சொல்கிறேன்; மகிழ்ச்சியோடிருங்கள்” [பிலிப்பியர் 4:4)

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *