பண்டிட்ஜி சேவாராம்




ஒரு தடவை பீர்பால் கிட்ட சேவாராம் அப்படீங்கரவர் வந்து “என்னோட அப்பா, தாத்தா இன்னும் அவங்க தாத்தா எல்லாம் பெரிய சமஸ்கிருத பண்டிட்…அவர்ங்களை எல்லாம் அவங்க காலத்துல மக்கள் ‘பண்டிட்ஜி’ ன்னு கூப்பிடுவாங்க. இப்ப என் கிட்ட எந்த காசோ, பணமோ இல்லை. அது எனக்கு வேண்டாம், ஆனா அவங்களை எல்லாம் கூப்பிட்ட மாதிரி என்னையும் மக்கள் பண்டிட்ஜி னு மக்கள் கூப்பிடனும். அதுக்கு ஒரு வழி சொல்லுங்கன்னு சொன்னாராம்”.
அதுக்கு பீர்பால் சரி அப்ப நான் சொல்றபடி செய்யுங்க. எல்லாரும் உங்களை பண்டிட்ஜீன்னு கூப்பிடுவாங்கன்னு சொன்னாராம். உங்களுக்கு பண்டிட்ஜின்னு கூப்டா பிடிக்காது ன்னு எல்லார்க்கும் தெரியற மாதிரி பண்ணீருங்க அப்புறம் பாருங்கன்னு சொன்னாராம்.
அப்புறம் பீர்பாலும் சேவாராம் இருந்த தெருவுல இருக்குற குழந்தைகள் கிட்ட சேவாராம்க்கு பண்டிட்ஜின்னு கூப்டா பிடிக்காது, அதனால யாரும் அவரை கூப்டாதீங்கன்னு சொன்னாராம். ஆனா குழந்தைகள் அதுக்கு அப்புறம் சேவாராம பண்டிட்ஜீன்னே கூப்பிட..சேவாராமும் அவருக்கு அப்பிடி கூப்ட்டா பிடிக்காத மாதிரி திட்ட ஆரம்பிச்சாராம். அதுக்கு அப்புறம் அந்த ஊர்ல இருந்தவங்க எல்லாரும் அவரை அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.
அவங்க கூப்பிட்டது சேவாராமுக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் irritate பண்றதுக்காக. சேவாராமுக்கு எப்படியோ அவரை பண்டிட்ஜினு கூப்ட்டா போதும்னு.