பிரயோஜனம் – ஒரு பக்க கதை





கடற்கரையிலிருந்த ஒருவர், மணலிலிருந்து எதையோ எடுத்துக் கடலினுள் எறிந்தவாறு இருந்தது என் கவனத்தைக் கவரவே, அருகில் சென்று என்ன சார் செய்யறீங்க? என்றேன்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னே ஒரு பெரிய அலை வந்து நிறைய மீன்களைத் தூக்கிக் கரையிலே வஈசிட்டுப் போயிடுத்து.
துடிச்சிருக்கற அதுகளை ஒவ்வொண்ணா எடுத்துக் கடல்ல போட்டுக் கொண்டிருக்கேன் என்றார் அவர்.
சிரித்தேன் நான். இவ்வளவு மீன்கள் கிடக்க எல்லாத்தையும் போடறதுக்குள்ளே விடிஞ்சிடும். இங்கே மட்டும் இவ்வளவுன்னா இந்த பீச்சிலே மத்த இடங்களிலே எவ்வளவு இருக்கும்? எனக்கென்னவோ உங்க செய்கை பிரயோஜனமானதா தோணலை.
உங்களுக்கு வேணுமின்னா அப்படித் தோணலாம் சார். ஆனா, இந்த மீனுக்கு எவ்வளவு பிரயோஜம்னு யோசீச்சீங்களா? என்றவர், கையிலிருந்த மீனை கடலினுள் வீசினார்.
– ஷேக் சிந்தா மதார் (டிசம்பர் 2011)