கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 5, 2025
பார்வையிட்டோர்: 495 
 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நேற்றுக் காலையில் அலுவலகத்தில் தொடங்கிய அந்த, மனநோவு, நாள் முழுவதையும் பாழடித்தது போதாதேன்று, இரவில் நுளம்புக் கடிய ல் அருண்டபோது கூட, நினைவு வந்து நித்திரையை வேறு வெகு நேரம் நாசமாக்கியது. பன்னிரண்டரையோ. ஒன்றே மணியிலிருந்து வெகுநேரம் விழித்திருந்தான். இருளோடு சேர்ந்து- இருளால் இன்னுங் கனங் கொண்டு அழுத்தியது நோவு. ஆனால், அதில் – அந்த வீணான விழிப்பில் கூட ஒரு பயன் விளைந்தது, இந்த யோசினை பளிச்சிட்டது அப்போதுதான். 


நினைக்கிற போதெல்லாம் கண்கள்’ கூடக் கலங்கு கிறமாதிரி அவனுக்கு நேற்று மனம் வெந்திருந்தது. யாராவது கேட்டால் கட்டாயம் சிரிப்பார்கள்-இதற்கா இப்படி என்று. ஆனால் விஸ்வத்தின் வேலை அந்த அளவுக்குப் பாதித் திருந்தது. விஸ், இப்படித் திட்டம் போட்டுத் தன்னை அவமானப்படுத்தியது போல நடந்ததற்கு – தன்மனதை. இப்படிக் குத்திக் காயம் பண்ணியதற்கு-தான் என்ன செய்திருப்பேன் என்று தெரியத்தானில்லை. நினைத்தே நினைத் துப் பார்த்தான், இல்லைத்தான். 

ஏதோ வேலை விஷயமாய் மூர்த்தியுடனும் பராவுடனும் பேசிக்கொண்டிருந்த போது, இவர்களிருந்த இடத்திற்கு வலு ஆர்ப்பாட்டமாய் வந்தான் விஸ். 

‘அண்ணே ஒருக்கா வாறீங்களா கன்ரீனுக்கு!’ என்று மூர்த்தியைக் கேட்டவன். 

‘……. பரா, வர்றியா? வாவேன்……..’ என்றான். 

உடனே ஒன்றும் புரியாமல், புரிந்ததும் ஏதோ தன்னுள் சுருண்டு போக, பேசாமல் இடத்திற்குத் திரும்பினான் இவன்.

இரண்டு நிமிடங்கள் கழிய, இந்த மூவருடனும், ஆனந்தனும் சோதியுமாய் கன்ரீன் பக்கமாய்ப் போனதைக் கண்டபோதுதான் அடி பலமாய் அவனுள் விழுந்தது. இந்த ஸெக்ஷனில் ஏழு பேர் தமிழர்கள். எழுபத்தேழாம் ஆண்டுக் கலவரத்துடன் இவர்கள் நெருக்கம் புழக்கமெல் லாம் அநேகமாக இந்த ஏழு பேருக்குள்ளேயே சுருங்கிக் கொண்டிருந்தது. சிவநேசன், பெரியவர்; பொஸ். அவரை யெல்லாம் கன்ரீனுக்கு அழைக்க முடியாது. 

அவர்கள் பார்வையால் மறைந்ததும், முதல் தரம் வதியும் அழுகையுமாய் மனம் பொங்கியது…. 

ஏனிப்படி என்று தான் தெரியவில்லை, விஸ் பயலுக்கு அடிக்கடி மாறுகிற மூட்தான். என்றாலும் இவனால் இதை விழுங்கிக் கொள்ள முடியவில்லை…. 

தன்னில் கூட ஆத்திரம் வந்தது – இந்தமாதிரிச் சின் னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கலங்கிப் போகலாமா என்று. 


இன்று பிற்பகல், தேநீர் வேளைக்குக் கொஞ்சம் மூன் னதாகவே, ஒவ்வொரு மேசையாகப் போனான்…. 

‘ஒரு ரீ சாப்பிடலாம்…. வாறீங்களா?….’ 

‘என்ன விசேஷம்?’ நட்பும் ஒப்புதலுமாய்த் திருப்பிக் கேட்க, 

‘கன்ரீனிலை சொல்லுறனே’ 

நேற்றுக் காலை எல்லோரும் கூடிய போது, தன் பிரசன்ன மின்மையை இவர்கள் கூடக் கவனித்திருக்க மாட்டார்களா? ‘ஏன் கண்ணன் வரவில்லை?’ என்று கேட் டிரூக்க மாட்டார்களா? சில சமயம் முடிந்திராதுதான்; மரியாதையில்லை. 

விஸ்ஸிடமும் வலு சாதாரணமாய்ப் போய்க் கூப்பிட் டான். தன்னால் நன்றாக நடிக்க முடியும் போலும். விஸ்ஸின் மூகத்தில் குற்ற உணர்ச்சியும் தயக்கமுந்தெரிந்தன என்று தான் பட்டது. அவன் மறுதலிக்க இவன் இடம் வைக்க வில்லை. 

‘எட, வாடாப்பா….அப்பிடியொண்டும் பெரிசா இல்லை’ கன்ரீனுக்குப் போகும் வழியில் மூர்த்திதான் கேட்டான்: 
 
‘நேற்று விஸ், இண்டைக்குக் கண்ணன் நாளைக்கு யார்?’

ஆறு ரீக்கும் ஆறு வடைக்கும் ஓடர் கொடுத்துவிட்டு, மேசையைச் சுற்றிருந்த நண்பர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டபோது, யாரோ திரும்பவும் கேட்டான்: 

‘என்ன விசேஷம்? இப்ப சொல்லு….’ என்று. 

ஏதோ சொன்னான் – அந்த நேரம் மனதில் பட்டதை. ஒப்புக் கொண்டு விட்டார்கள்; பாராட்டினார்கள். ஒன்றுங் கவனத்தில் விழவில்லை. கன்ரீன் பையன் கொண்டுவந்து வைத்த தட்டில், விஸ் எப்போ கைவைப்பான் என்று பார்த் திருந்தான். 

விஸ் இரண்டாவது தடவை வடையைக் கடித்து விட்டு, தேநீரை ஒரு மிடறு உறிஞ்சிய போது கண்ணன் வலு சாதாரணமாக – மெல்லிய சிரிப்புடன் கேட்டான்; ‘விஸ் நேற்று நீகூட எல்லாருக்கும் ரீ வாங்கிக் குடுத்தியாமே?’ 

– மல்லிகை, டிசம்பர் 1986.

– முளைகள் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1982, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *