பலமான காயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 76 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கல்லூரி முதல்வர் ரெய்னி, ஸ்காட்லாந்து நாட்டவர். அவரைப்பற்றிய புரளிகள் பத்திரிகைகளில் வாரந்தவறாது வந்து கொண்டிருந்தன.

அனைத்தும் பொய்ப்பிரசாரங்கள். ஆயினும் அவர் முகத்திலாவது, அகத்திலாவது வேதனையோ வருத்த மோ சிறிதும் கிடையாது. மாறாக மிகுந்த மலர்ச்சி யுடனே காணப்பட்டார். அவதூறுகள் அலையலையாகக் குமுறியும் அவர் குதூகலமாகவே இருந்தார்.

பிரின்சிபால் ரெய்னிக்கு பைத்தியமோ என்றுகூட பலரும் நினைத்தார்கள்.

ஒருநாள் முதல்வரின் நண்பர் டாக்டர் உவைட் அவரைச் சந்தித்து ‘உம்மை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே! இவ்வளவு விஷமப் பிரச்சாரங்கள் வந்தும் தாங்கள் விருப்புடன் அமைதியாய் இருப்ப தென்ன?’ என்று வியப்புடன் வினவினார்.

கணப்போதும் தாமதியாது முதல்வர் பதில் கூறினார்:

“பலமான காயம்தான். ஆனால் தைலம் தடவிக் காயத்தை ஆற்றிவருகிற ஒரு ஜீவன் என்வீட்டிலுண்டு எனவே நான் எப்போதும் களிப்புடன் இருக்கிறேன்”.

அம்மாமாரே! உங்கள் கணவன்மார் உங்களைக் குறித்து இவ்வாறு சாட்சி சொல்லக்கூடுமா?

“உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக் கொடியைப்போலிருப்பாள்,” [சங்கீதம் 128:3]

“நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதி செலுத்தக்கடவோம்; ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது. அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்”. [வெளிப்படுத்தல் 19:7]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *