பரீட்சைகள் – ஒரு பக்க கதை





விளையாடி விட்டு வீட்டுக்குள் வந்த சிறுவன் குமரேஷை, ”படிக்காமல் என்ன விளையாட்டு எப்போதும்?” என்று அம்மா சத்தம் போட்டாள்
பதிலேதும் சொல்லாமல் டி.வி.ரிமோட்டைக் கையில் எடுத்தான் அவன்.
என்ன பண்றே? சானலை மாத்தி கார்ட்டூன் பார்க்க உட்காரப் போறியா? நீ உன் ரூமுக்குள் போய்ப் படி…எதையும் இப்போ மாத்தக்கூடாது” என்றாள் அம்மா.
சிரித்தபடியே அம்மாவைப் நிமிர்ந்து பார்த்த குமரேஷ் ரிமோட்டில் மியூட் பட்டனை அழுத்தி விட்டு சொன்னான்:
”நான் சானலை மாத்தலம்மா…கீழ் ஃபிளாட் மகேஷ் அண்ணா பெரிய பரீட்சைக்குப் படிக்கிறான்…நம்ம வீட்டு டி.வி.சத்தம் அவனுக்குப் பயங்கர தொல்லையாக இருக்கும்…பாவம்மா அவன்..அதனால சவுண்டைக் கம்மியா வச்சிட்டுப் போறேன்.”
பெருமையுடன் அவனைப் பார்த்தாள் அம்மா.
– பர்வதவர்த்தினி (8-6-11)