கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,732 
 
 

”கிராமத்து பசங்களை உங்க ஜவுளிக்கடையில வேலைக்கு வெச்சிருக்கீங்க. இந்த சிட்டியில் வாடிக்கையாளர்கிட்டே எப்படி பேசணும், என்ன மாதிரி பாடி லாங்வேஜ் காட்டணும்னு அவங்களுக்கு நாங்க கத்துத் கொடுக்கிறோம். ஒரு வார வகுப்புக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுங்க…”

போன வாரம் சுய முன்னேற்றப் பயிற்சியாளர் ஒருவர் வந்து கடை உரிமையாளர் தங்கபாண்டியாரிடம் சொன்ன யோசனை அது.

அவர் அது பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் கடைக்கு வந்த இரு பெண்கள் பேசிக் கொள்வது காதில் விழுந்தது.

”பெரிய மால் எல்லாத்தையும் விட்டுட்டு இந்தக் கடையில் எதுக்கடி டிரெஸ் எடுக்க வந்தே?” ஒரு பெண் கேட்க…

”நீ சொல்ற கடைகள்ல சேல்ஸூக்கு நிக்கிறவங்க ‘கீ’ கொடுத்த பொம்மை மாதிரி பேசுவாங்க. இந்தக் கடைப்பசங்க இயல்பா
பேசி, நம்ம சொந்தக்காரங்க மாதிரியே நடந்துக்கிறாங்க. இப்படி வெள்ளந்தியா பேசுறவங்களுக்காகத்தான், துணி எடுக்க
எப்பவும் இங்கேயே வர்றேன்…” மற்றவள் பதில் சொன்னாள்.

வாடிக்கையாளர்களின் பேச்சைக் கேட்ட தங்கபாண்டியன், தன் கடைப் பையன்களையும் ‘கீ’ கொடுத்த பொம்மையாக மாற்ற வேண்டாம் என்று தீர்மானித்தார்…!

– கீர்த்தி (ஏப்ரல் 2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *