பயம்
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு காட்ல -, ஒரு நரி இருந்திச்சாம். அந்த நரிக்குப் புலியக் கண்டா பயம். தன்னக் காட்டிலும் பெரிய பெராணிகளக் கண்டா பொதருக்குள்ள போயி ஒழிஞ்சுக்கிறுமாம்.
ஒருநா, அந்த நரிக்கு கல்யாணம் முடுஞ்சு, பொண்டாட்டி நரியக் கூட்டிக்கிட்டு, காட்டுக்கு வருது, வர்ர வழில, புலி மலம் கழிச்சு வச்சிருந்திச்சு. மலத்தக் கண்டதும், நரி மொகத்தச் சுழுச்சுக்கிட்டு,
மாடு மத்தளக்கார்
எருமக் கடா கெணக்கா ரங்கா
வழி மேல பேண்டு வச்சிருக்கா
அதத் தாண்டி வா – ண்டு
பொண்டாட்டிகிட்டச் சொல்லுது. சொல்லவும், பக்கத்துப் பொதர்ல ஒழிஞ்சுக்கிட்டிருந்த புலி, நரியாரே! என்னா மொனங்கிக்கிட்டுப் போறேண்டு கேட்டுச்சு. கேட்கவும் நரி நடுங்கிப் போயி,
சாமியவுக – போட்டு வச்ச சந்தனம்
சரி கருப்பட்டி கலந்திருக்கு – அதனி
வாரி வழுச்சு வாயில போட்டுக்கிட்டு
வாடிண்டு சொன்னே – ண்டு
சொல்றே-ண்டு சொல்லிட்டு பொதருக்குள்ள மறஞ்சுகிருச்சாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.