பதவிப் பரிதாபங்கள்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
இணைய வெளியீடு: November 7, 2026
முதற்பதிப்பு: 2026
பார்வைகள்: 91 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9

“என்ன மாமா..?”

“ஒரு காலத்தில் முக்கியஸ்தர்கள் பணக்காரர்களின் வீடுகளில் எல்லாம் ஓயாமல் ஒலித்து இன்று கவனிப்பாரற்று கிடைக்கும் தொலைபேசி!” என்றார்.

விகாஷ் அவரை மௌனமாகப் பார்த்தான்.

“சினிமா… நாடகத்தை மூலையில் முடக்கியத்தைப் போல ஒவ்வொரு வளர்ச்சியும் அது தொடர்பானவைகளை மூலையில் முடக்கிவிடுகின்றன விகாஷ்.

இந்த கைபேசி… மக்கள் பயன்பாட்டுக்கு வராதவரை, உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் பேச, பழக இருந்த ஒரே தொடர்பு சாதனம் இந்த தொலைபேசி.

இன்றைக்கும் அரசு அலுவகலகங்கள், அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் வீடுகளில் இருக்கிறதேத் தவிர அவைகள் பெரிதும் உபயோகிக்கப் படாதவைகளாகவே இருக்கின்றன. அன்றைக்குத் தொட்டதற்கெல்லாம் தொலைபேசியைத் தொட்ட கைகள் இன்றைக்கு கைப்பேசிகளை எடுக்கின்றன.

அன்றைக்கு… அதிகாரிகள், அமைச்சர்கள், பணக்காரர்கள் வீடுகளில் அத்தியாவசியமாக இருந்தது தொலைபேசி.

இன்றைக்குப் பாமரன் வரை பயன் படுத்தும் அத்தியாவசியத் தேவையாகி தொலைபேசியை மூலையில் முடக்கி விட்டது இந்த கைபேசி.

‘இதுவரையில் இது எப்படி நம் கவனத்திற்கு வராமல் போனது…! இதற்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்குமா…?’ என்று யோசித்து ஒலிவாங்கியை எடுத்து காதில் வைத்தேன்.

“கொர்ர்ர்…” என்ற சத்தத்துடன் உயிர் இருந்தது.

உடனே… எண்கள் அழுத்தி தொலைத்தொடர்பு அலுவகத்தைத் தொடர்பு கொண்டேன்.

“தொலைத்தொடர்பு நிலையமா…”

“ஆமாம் சார்..!”

“நான் அமைச்சர் ஆனந்தவள்ளி கொலைதொடர்பான சி.பி.சி.ஐ.டி.”

“நன்றி. சொல்லுங்க சார்…?”

“இப்போ இந்த எண் புழக்கத்தில் இருக்கா..?”

“இருக்கு சார்!”

“அடிக்கடி உபயோகிக்கப் படுத்தப்பட்டிருக்கா..?”

“அதிகமாய் இல்லே சார். ஆனா… ஒரு கைபேசி எண்ணிற்கு மட்டும் அடிக்கடி மிஸ்சுடு கால்கள் போகும். அதுவும் இரவு நேரங்களில்தான் அதிகம் போகும்…”

“இந்த வருசம் மார்ச் 21. கொலை நடந்த தேதியில் அழைப்பு போயிருக்கா…?”

“இருக்கு சார்..?”

“எத்தனை மணி..?”

“இரவு மணி 10.10.”

“அந்த ஆள் கைபேசி எண், ஆதார்கார்டு விலாசம் எல்லாம் எனக்கு உடனடியாய் வேணும்.”

“அஞ்சு நிமிசத்துல தர்றேன் சார்.”

அவ்வளவுதான் அஞ்சு நிமிசத்துல எல்லாம் வந்து ஒரு மணி நேரத்தில் ஆளையே அமுக்கி…

“பெயர் ஆண்ட்ருஸ் சார்! ஊட்டி கல்லூரி படிப்பில் அறிமுகம். காதல். சார் .

சாதி, மதம் சரி இல்லாததினால் ஆனந்தவள்ளி பெற்றவர்கள் நல்லது சொல்லி அவளை அம்பிகாபதிக்குத் திருமணம் முடித்து வைச்சுட்டாங்க சார்.

திருமணம் ஆனாலும்.. எங்கள் காதல், தொடர்பு விட்டுப்போகலை, கணவனுக்குத் தெரியாமல் கள்ளத்தொடர்பாய் இருந்தது சார்.

இந்த அமைச்சர் பதவிதான் பிரச்சனை. முதல்வர் தொடர்பு எனக்குப் பிடிக்கலை சார்.

வேணாம்! தலை வழுக்கை விழுந்து, தோல் சுருங்கி.. ஆளைப் பார்க்கவே படு கேவலமாய் இருக்கான். அவன் உன் பக்கத்தில் நின்றாலே எனக்குப் பத்திக்கிட்டு வருது. அதுவும் உன்னோடு தொடர்பில் இருக்கான் என்று நினைக்கவே குமட்டுது, கொதிக்குது.

நீ உன் புருசனோடு இருக்கிறதே எனக்குப் பிடிக்கலை. தாலி கட்டிய கணவன் என்கிற ஒரே காரணத்துக்காக சகிக்கிறேன். பொறுக்கிறேன். இதை என்னால ஏத்துக்க முடியல. பதவி வேணாம். அவன் தொடர்பும் வேணாம்ன்னு பலமுறை சொன்னேன் சார். ஆனந்தவள்ளி ஏத்துக்கலை. கொலை நடந்த அன்று எங்களுக்குள் வாக்குவாதம் முற்றி… முகத்தில் தலையணையை அழுத்தி கொலை சார்…” சொன்னான்.

“சரி. எல்லார் கண்ணிலும் மண்ணைத் தூவி எப்படி இந்த வீட்டிற்கு வருகை தொடர்பு..?” கேட்டேன்.

“எங்கள் தொடர்பு திட்டமிட்டது சார். இன்று எவன் எங்கிருந்தாலும் காட்டிக் கொடுக்கும் கருவியாகி விட்டது இந்த கைபேசி. அதனால் நமக்குள் கைபேசி தொடர்பு, பேச்சு வேண்டாம். வீட்டில் ஆள் இல்லா சமயம் தொலைபேசி வழியாய் என் கைபேசிக்கு மிஸ்சுடு கால் கொடு. நான் அரைமணி நேரத்தில் வருகிறேன். பேச்சுக்களையும் நேரிலேயே பேசிக்கொள்ளலாம். இது உனக்கும் எனக்கும் பாதுகாப்பு என்று பேசி முடித்த வழி. அவள் திருமணம் முடித்த நாளிலிருந்தே இதுதான் எங்கள் வழி. அவள் வீடும் இதே அமைப்பு என்பதால் கண்காணிப்பு கேமராவிலிருந்து எல்லார் கண்களிலும் மண்ணைத் தூவி எங்கள் தொடர்பு. இங்கேயும் அப்படி தொடர்பு சார்.

அவள் பத்து மணிக்கு மேல் தொலைபேசி வழியாய் மிஸ்சுடு கால் கொடுத்து விட்டு, வீட்டின் சமையற்கட்டில் தொங்கும் கடைசி கதவு சாவி எடுத்து, வீட்டின் கொல்லைக் கதவு திறந்து வந்து இந்த சுற்றுச் சுவர் கதவு பூட்டு திறந்து தாழ்ப்பாள் எடுத்து விட்டு சாவியை பூட்டில் விட்டு வருவாள். நான் இந்த கதவு திறந்து, பூட்டி, வீட்டின் கொல்லை வாசல் வழியே அறைக்குச் செல்வேன். திரும்ப அவள் என்னோடு வந்து நான் வந்தவழியே வெளியேறியதும் எல்லாவறையும் பூட்டி சாவியை இருக்கும் இடத்தில் வைத்து விட்டு நல்ல பிள்ளையாய் அறையில் படுத்து விடுவாள்.” முடித்தான் என்றார்.

விகாஷ் அதிர்ச்சியில் பேசாமல் இருந்தான்.

“இந்தக் கொலையில் கட்டியவனுக்கும் கள்ளனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு மாப்ளெ.”

“என்ன…?”

“மனைவி தவறினால் கட்டியவன் மன்னிக்கிறான். ஆனால் கள்ளன்…? கணவன் தொட்டாலே சகிக்க முடியாதவனாகி… அதையும் அவள் தாண்டும்போது கொலைக்காரனாகிறான்.”

“ஆமாம்!”

‘ இது மனிதர்களுக்கிடையே ஆன மனோரீதியான வித்தியாசம் விகாஷ். ஒரு சில ஆண்கள், பெண்கள் இந்த மனப்பதிவில் இருக்காங்க. அதனால்தான் சில இந்த கள்ளத்தொடர்பு கொலைகளில் கணவன் – மனைவி, கள்ளனால் கொலை செய்யப் படுக்கிறான். மனைவி – கள்ளச்சி, கணவனால் கொலை செய்யப் படுகிறாள். இந்த அமைச்சர் ஆனந்தவள்ளி கொலையிலும் இதுதான் மூச்சு, முடிச்சு.” நிறுத்தி முடித்தார் தன்ராஜ்.

“ஆமாம் மாமா..!” என்று திருப்தியாய்த் தலையாட்டினான் ஆகாஷ்.

(முற்றும்)

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *