பக்கங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 7,499 
 
 

”அம்மா …. மணி எட்டாயிருச்சி ” ரஞ்சினி கூக்குரலிட்டாள்.

”அதுக்கு என்னவாம்?”

”நான் டியுசன் போயாகணும்.”

”உன்னை யாரு போக வேண்டாங்கிறா…சோறுதான் சமைச்சி ரெடியா இருக்கு. போட்டு சாப்பிட்டு மத்தியானத்திற்கு அடைச்சிக்கிட்டு கிளம்ப வேண்டியதுதானே.”

”ம். அது தெரியாமலா இருக்கேன். மாதம் பிறந்து பத்து தேதியாச்சு. டியுசன் பீஸ் எப்பக் கொடுக்கிறதாம்…?”

“டியுசன் பீஸா! நீ நேற்றே கொடுக்கலையா….?”

”வவ்வே …. கொடுத்தியாக்கும்?”

”பின்னே! நேத்தைக்கு நீ டியுசன் விட்டு வாறப்போ இன்னைக்கு என்னச் சொல்லி கொடுத்தாங்கனு கேட்டேனா. நீ இங்கிலீஸ்ல ரெண்டாம் பாடமுனு சொன்னீயா. நீ சாப்பிட்டுக்கிட்டு இருந்தப்போ அந்தப் புத்தகத்தைத் திறந்து ரெண்டாம் பாடத்துக்குள்ளே வச்சிட்டேனே. ஆத்தா! நீ பார்க்கலையா….? படிக்க புத்தகத்தை விரிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்.”

ரஞ்சினி அவசரமாக புத்தகத்தை தேடிப்பிடித்து புரட்டினாள்.

இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளில் காந்தி சிரித்துக்கொண்டிருந்தார்.

புத்தகத்திற்குள் ஒரு விரலை நுழைத்துக் கொண்டு வேக நடை போட்டாள். அம்மா கூடவே வருவதாக தெரிந்த்து அவளுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *