பகை மாட்சி




(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
பகையினது சிறப்பு
பண்டைக் காலத்தில் உறையூரில் இருந்து தித்தன் என்ற சோழன் ஆண்டு வந்தான். இவ னுக்குச் சோழன் போர்வைக்கோ பெருநற்கிள்ளி என்ற ஒருபுதல்வன் இருந்தான். இவன் தந்தையின் கட்டளைபெறாமல் முக்காவல் நாட்டு ஆமூர் மல்ல னிடம் வீண் சண்டைக்குச் சென்று அவனைக்கொன் றான். இதைக்கண்ட தந்தை. “என்னைக் கேட்டுச் செய்யவேண்டும் என்ற என் கட்டளைக்கு அஞ்சா மலும், பகைவர் வலிமைகளைப் பற்றி அறிய வேண்டியவைகளை அறியாமலும், பிறருடன் கூடி வாழும் பொருத்தமில்லாமலும், உலோபகுணம் உடைமையும் கண்டு நீ எனக்குப்பின் இவ்வரசை ஆளும் தன்மை உடையவன் இல்லை இவ்விதகுணம் இருப்பதால் பகைவர்க்கு எளியன் ஆவாய்; என் நாட்டைவிட்டு வெளியே செல்,” என்று கட்டளை யிட்டுத் தன் நாட்டைவிட்டு வெளியே அனுப்பினான்.
அவனும் தன் குற்றத்தை உணர்ந்து வெளிச் சென்று தன் காலத்தைக் கழித்தான். வள்ளுவரும் “இந் நான்கு குண முடையவர் பகைவர்க்கு எளிய ராவர்” என்று கூறியுள்ளார்.
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.(66)
அஞ்சும் = (ஒருவன் அஞ்ச வேண்டர் தவைகளுக்கு) அஞ்சுவான்
அறியான் = தெரியவேண்டியவைகளைத் தெரியான்
அமைவு இலன் = பிறருடன் கூடும் பொருத்தமில்லாதவன்
ஈகலான் = ஐவரிடத்திலும் உலோபகுணமுடையவன்
பகைக்கு = இவ்வித குணமுடையவன் எதிரிக்கு
தஞ்சம் எளியன் = அடிபணிவதில் மிக எளியனாவான்.
கருத்து: பயப்படாமை முதலிய நான்கு குணங்களை யும் உடையவன் பகைவர்க்கு எளியன் ஆவான.
கேள்வி: எக்குண முடையவரை எளிதில் வெல்லலாம்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.