கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 28, 2025
பார்வையிட்டோர்: 249 
 
 

மழைக்கு முன்னாடி வீட்டுத் தென்னமரத்திருலிருந்து தேங்காய்களைப் போட்ட மயில்சாமி சாக்கு நிறைய அந்தத் தேங்காய்கள் எடுத்து அடுக்கினான். மனைவி மதிலி கேட்டாள் ‘எதுக்குங்க இத்தனை தேங்காய் சாக்குல அடுக்கறீங்க? எதாவது விசேஷமா? எங்கிட்டக் கூடச் சொல்லலையே?!’ என்றாள் ஆர்வமாக,

‘இல்லை…! வியாழக்கிழமை விநாயகருக்கு நூத்திஎட்டுத் தேங்காய் உடைத்தால்…’

‘உடைத்தால்…???’

‘எனக்கு வரும் இடைஞ்சலெல்லாம் இருக்கற எடம் தெரியாம போயிடும், அதுக்குத்தான் நூத்திஎட்டுத் தேங்கா சாக்குல அடுக்கறேன்!’. என்றான்.

இடைஞ்சல் போகாதுங்க..! இருக்கற தேங்காதான் வீணாப்போகுமென்றாள் மைதிலி.

‘நீ என்ன சொல்றே? எனக்கு எத்தனை வலி தெரியுமா? என்னை முன்னேறவிடாம எத்தனை இடையூறு தெரியுமா?!’ என்றான்.

‘ஓ! யாரு பண்றா…?’

‘வேற யாரு? எல்லாம் தெரிஞ்சவங்கதான்!’

‘அதுக்கு, விடலை போட்டா தேங்காயை வீணாக்குவாங்க…?!’

‘பின்னே என்ன பண்றதாம்?’ என்றான்.

‘உங்களுக்கு எடைஞ்சல் பண்றதா நீங்க நெனைக்கிற ஒவொருத்தர் வீட்டுக்கும் போய் ஆளுக்கு ரெண்டுகாயைக் கொடுத்து, ‘எங்கவீட்டுக் காய் கொடுத்துட்டுப் போக வந்தே’ன்னு சொல்லி கொடுத்து, அவங்க மொகத்தைப் பாருங்க! அவங்க மனசும் குளிரும். இனி வர்ற எடைஞ்சலும் குறையும்!. அவங்க ஐம்பத்து நாலு பேரா இருக்கப் போறாங்க எதோ நாலைந்து பேருதான்! ஒண்ணு தெரிஞ்சுக்குங்க.. எதிரி இல்லாத வாழ்க்கை… இனிக்காது! சுவத்துல எறியற பந்து கூட, எறிய வேகத்துல திரும்பி வரும். மெதுவா எறிஞ்சா மெதுவா.. வேகமா எறிஞ்சா வேகமா! வளர்ச்சியையும் அப்படிக் காட்டணும், எதிர்ப்புக்குத்தக்க வேகம் காட்டணும்!’

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *