நிலம் யாருடையது?
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,574
பல ஆண்டுகளுக்கு முன், வட இந்தியாவின் ஜேட்புரி என்னும் ஊரில் ஒரு வழக்கு, நீதி மன்றத்தில் நடைபெற்றது.
தண்ணீர் தொட்டியின் அருகில் உள்ள நிலம் சம்பந்தமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே ஒரு வழக்கு.
அந்த நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது பற்றி வாதாடினார்கள். ஆனால், இருதரப்பினருக்கும் ஆவணங்கள் ஆதாரங்கள் எதுவுமில்லை.
“95 வயதுள்ள தாவூத்பீகாவும், ஆபா அபுவும் எப்படிச் சொல்கிறார்களோ, அப்படியே நடந்து கொள்கிறோம்” என்று இந்துக்கள் கூறினார்கள்.
அந்த இரண்டு முஸ்லீம் கனவான்களும் “அந்த நிலம் இந்துக்களுக்குத்தான் சொந்தம்” என்று சொன்னார்கள்.
எத்தகைய உயர்வான நியாயமான எண்ணம் கொண்டிருந்தனர் என்பதை நினைக்கும்போது உள்ளம் நெகிழ்கிறது.
– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.