நாட்டு எலியும் நகரத்து எலியும்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 1,928

எலி வளையானாலும் தனி வளை என்று கிராமப் புறத்து வயல்வெளியில் வசித்துக் கொண்டிருந்த கிராமத்து எலி, ஒரு நாள் வயல்வெளியில் இருந்த தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வெளியே உலா வந்து நகரம் வரை வந்து விட்டது.
அதனை எதிர்கொண்டு வரவேற்ற நகரத்து எலி ‘நண்பரே நீங்கள் எங்கள் ஊரிலேயே இருங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தது.
புதிய எலி நண்பனின் வேண்டுகோளை ஏற்று அதனுடன் சென்றது. புதிய நகரத்து நண்பனின் இருப்பிடத்திற்குச் சென்றது. சில மணி நேரங்களில், நகரத்து எலி, ஓடுங்கள் ஓடுங்கள் மனிதர்கள் வந்து விட்டார்கள் என்று கிராமத்து எலியிடம் கூறியது.
‘நகரத்து நண்பா இப்படி ஓடி ஓடி பயந்து பயந்து நகரத்தில் வாழ்வதை விட கிராமத்து வயல்வெளியே எனக்கு சுகமான, சுதந்திரமான வாழ்வு’ என்று கூறிய கிராமத்து எலி, கிராமத்தை நோக்கி ஓடியது.
நீதி – அஞ்சி அஞ்சி வாழ்தல் கூடாது.
(நாட்டுப் புறக் கதைகளிலிருந்து )
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
திருந்திய அசோகன்
அந்தனி ஜீவா
August 1, 2026
இருவர்களும் திருடர்களே
பம்மல் சம்பந்த முதலியார்
July 22, 2026
கானநாதனும் அவனது அமைச்சர்களும்
பம்மல் சம்பந்த முதலியார்
July 22, 2026
