நற்செய்தியே
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 83
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வில்லியம் கேரி இங்கிலாந்தில் செருப்புத் தைக்கிற பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடைய கடைக்கு வருகிறவர்களுக்கு கிறிஸ்துவைப்பற்றியே சொல்லிச் கொண்டிருப்பார்.
வந்தவர்களில் முரடன் ஒருவன், “செருப்புத்தைக் கிறவனுக்குப் பிரசங்கம் கூடவா?” என்று சொல்லி ‘உனக்கு என்னையா வேலை’? என்று கோபத்துடன் கேட்டார்.
“நற்செய்தியைப் பிரசங்கிப்பதுதான் என்வேலை” என்றார் கேரி சாந்தமாக.
“பின் ஏன் செருப்புத்தைக்கிறாய்” என்றான் அம் முரடன். உடனே கேரி, ”வயிற்றுப் பிழைப்பிற்காக செருப்புத்தைத்தாலும் அதை செம்மையாகச் செய்கிறேன். ஆன்ம ஆதாயத்திற்காக நற்செய்தி கூறுகிறேன்” என்றார்.
தூய பவுலின் பிரதான வேலை நற்செய்திப் பணியே. ஆனால் வயிற்றுப் பிழைப்பிற்காக கூடாரம் செய்யும் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார்.
அவ்வாறே உலகமெங்குமுள்ள கடவுளுடைய பிள்ளைகள் வாழ்க்கைக்காகப் பற்பல தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் நற்செய்திப்பணிதான் பிரதான வேலையாகும்.
“நற்செய்தியை அறிவிக்கவும், சமாதானத்தைத் தெரிவிக்கவும், வருகிறவருடைய மலரடிகள் மலைகள் மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!” [இசையாஸ் 52:7]
“நற்செய்தியைப் பற்றி நான் நாணமடையமாட்டேன்.” [உரோமையர் 1:16]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
