நடத்துனர் – ஒரு பக்க கதை





(2013 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பேருந்து நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது. படிகட்டுகளில் பயணிகள் தொங்கிக் கொண்டிருந்தனர்.
நடத்துனரின் வேலை மிகப் பரிதாபமாக இருந்தது.
எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்து விட்டு சரியான சில்லரை தந்து எந்த ஒரு நிறுத்தத்திலும் விடாமல் வண்டியை நிறுத்தி ஏறி இறங்குகிறவர்களுக்கு வசதி செய்து கொடுக்கிறார். அவ்வப்பொழுது மக்களிடம் டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள். செக்கிங் வந்தால் மாட்டிக் கொள்வீர்கள் என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இதை நானும் என் நண்பனும் பார்த்து கொண்டிருந்தோம்.
திடீரென்று கண்டக்டர் யாரது ஒருவர் டிக்கெட் வாங்க வில்லை என்று கேட்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
உடனே நான் நடத்துனரிடம் எப்படி இந்த கூட்டத்தில் ஒருவர் மட்டும் டிக்கெட் வாங்க வில்லை என்று கண்டுபிடித்தீர்கள் என்று கேட்க அவர் இதெல்லாம் ஒரு சாமர்த்தியம். டிக்கெட் வாங்காமல் இருப்பவன் நம்மை கண்டு பிடித்துவிட்டார்கள் என்று பயந்து டிக்கெட் எடுத்து விடுவான் என்று கூறினார்.
நான் நடத்துனரின் சாமர்த்தியத்தை கண்டு வியந்தேன்.
– மங்கை சிறப்பிதழ், 06-2013