நஞ்சப்பனும் நம்பிள்ளையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2022
பார்வையிட்டோர்: 7,636 
 
 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நஞ்சப்பன் என்பவனும், நம்பிள்ளை என்பவனும் பக்கத்து வீட்டுக்காரர்கள். நஞ்சப்பன் வஞ்சகமும் தீமைக்குணங்களும் பொருந்திய உள்ளமுடையவன். நம்பிள்ளையோ கள்ளங்கப்படு சிறிதும் இல்லாத வெள்ளை மனத்தினன். பக்கத்துவீட்டுக்காரர்களாகிய இருவருக் கும் தீராப் பகையாக இருந்து கொண்டேயிருந்தது. இருவரும் பத்து நாளைக்கு நட்பினர் போல் இருப்பார்கள்; பிறகு பகை மூண்டுவிடும்.

நஞ்சப்பன் கள்ள மனத்தினன் ஆகையால், சமயம் பார்த்து நம்பிள்ளையை ஏமாற்றவேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தான். ஒரு முறை நம்பிள்ளை மாடுவிற்று இருநூறு வெண்பொற் காசுகளைக் கையிருப்பாக வைத்துக்கொண்டிருந்தான். அந்தப் பொருளை எப்படியேனும் ஏய்த்துப் பெற்று விடவேண்டும் என்று எண்ணிய நஞ்சப்பன் வஞ்சத் தோடு நம்பிள்ளையிடம் வந்து, “நண்பா! எனக்கு இப்போது இருநூறு வெண்பொற் காசுகள் கட்டாயமாக வேண்டும்; இரண்டு நாட்களில் திருப்பிக் கொடுத்து விடுவேன்,” என்றான்.

நம்பிள்ளை, “சிறிதுநேரம் பொறுத்துவா; கொடுக்கிறேன்,” என்றான். நஞ்சப்பன் சென்றவுடன் நம் பிள்ளை தன்னுடைய நண்பர்கள் சிலரிடஞ்சென்று செய்தியைக் கூறி அவர்களுடைய எண்ணத்தைக் கேட்டான். அவர்கள், “கொடுக்காதே! நஞ்சப்பன் உன்னுடைய பகைவனல்லனோ? பிறகு கொடுக்காமல் ஏமாற்றுவான்,” என்று கூறினார்கள். நம்பிள்ளை பாது காப்பாகிவிட்டான். அவன் மீளவும் வந்து கேட்ட பொழுது, “எனக்கே இப்போது செலவு இருக்கிறது. ஆகையால் நான் தரமுடியாது,” என்று கூறிவிட் டான். நஞ்சப்பன் தன்னுடைய சூழ்ச்சி பலிக்க வில்லையே என்று நாணிச்சென்றான்.

“ஒன்னாரைத் தேறேல் ” (இ – ள்.) ஒன்னாரை – பவைர்களை, தேறேல் – நம்பாதே.

– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *