தேவ ஆட்டுக்குட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 95 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரபுக்கள், பிரதானிகள், மன்னர்கள், மந்திரிகள் முதலிய சீமான்கள் குழுமி இருந்த ஒரு சபையில் ஜாண் வெஸ்லி என்ற வல்லமையான பிரசங்கி பேசுகையில் விரியன் பாம்புக் குட்டிகளே!” என்ற மேற்கோளை டுத்து அவர்கள் முகத்துக்கு நேரே வீசி மிகக்கண்டித்துப் பேசினார்.

கூட்டம் முடிந்து வெளியேறுகையில் வெறுப்புக் கொண்ட இரண்டொரு பிரபுக்கள், “இப்பிரசங்கம் கூலிக்கார மக்களுக்குரியது; எங்களுக்குரியதல்ல” என்றார்கள்.

“அவர்களுக்கு என் பிரசங்கம். ‘உலகத்தின் பாவங்ளைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்பதாகும்” என்று வெஸ்லி சுடச்சுடப பதிலிறுத்தார்,

பிரபுக்களின் வாய் அடைபட்டது.

”திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற.” [நீதிமொழிகள் 31:8]

”ஐகவரியவான்களே, கேளுங்கள்! உங்கள் மேல்வரும் சர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.” [யாக்கோபு 5:1]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *