திருமறைத் தியான முறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 96 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அமெரிக்க ஐக்கிய மாகாணத்தில் ஒரு விடுகதைப் படம் உள்ளது. அப்படத்தில் பிரசிடெண்ட் வாஷிங் உனைக் கண்டு பிடிக்க வேண்டும்.

படத்தைப் பார்த்தவுடன் மரஞ்செடி கொடிகள் தான் தெரியும். ஆனால் அப்படத்தையே உற்று நோக் குங்கால் வாஷிங்டன் கல்லறையின் அண்மையிலிருக் கிற மரங்களின் மத்தியில் அவரின் முழுஉருவத்தையும் காணலாம்.

விவிலிய நூலையும் ஒரு விடுகதைப்படமாகக் காண்போம். இப்படத்திலிருந்து கிறிஸ்துவைக் கண்டு பிடிக்கவேண்டும்.

வேதாகம ஏடுகளை வேண்டாவெறுப்பாக அங்கு மிங்கும் தள்ளிக்கொண்டே போனால் வேதநாயகனைக் கண்டுகொள்ள முடியாது. மனதை ஒரு முகப்படுத்தி பயபக்தியோடு படித்தால்தான் கிறிஸ்துவைக் காண முடியும்.

வேதவாசிப்பின் முறைபற்றி மார்ட்டின் லுத்தர் கூறுகிறார்:

திருமறைநூல் ஒரு மரத்துக்குச் சமம். முதலா வது மரத்தை அசைப்பேன். அதாவது வேதப் புத்தகம் முழுவதையும் பொதுவாகப்படிப்பேன். பின்பு மரத் தின் மேலேறித் தனித்தனிக் கிளைகளை அசைப்பேன். அதாவது அதிகாரம் அதிகாரமாக ஆழ்ந்து தியானிப்பேன். இறுதியாக ஒவ்வொரு இலையையும் தேடிப் பிடிப்பேன். ஆம், ஒவ்வொரு வசனமாகத் தேடி வாசிப்பேன்.

“கர்த்தருடைய புத்தகத்திலே தேடி வாசியுங்கள்” [ஏசாயா

”வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்… என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகேள.” [யோவான் 5:39]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *