தியாகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 3, 2025
பார்வையிட்டோர்: 368 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒழுங்கான வடிவம்.கமையப் புள்ளியிலிருந்து கோணங்களில் அமைதி அமைய இழுக்கப்பட்ட வரைகள். வடிவொத்த பல கோணி களாக ஒன்றில் ஒன்றாக அடங்கும் பல உருவங்கள். சிறு ஓட்டையினால் உட்புகும். கதிரவனின் ஒளிக் கீற்று ஒன்றில், அச்சிலந்தி வலையின் ஒரு பகுதி மின்னுகின்றது. 

தன் உடலைப் பிழிந்தெடுத்துச் சமைத்த வீட்டினைப் பார்த்துச் சிலந்தி பூரிப்பெய்துகின்றது. ‘யாம் பெரிதும் வல்லோமே’ என்கிற நிறைவு. 

அந்தரத்திற் சாகஸங் காட்டும் வித்தைக்காரனுக்குத் தெம்பு கொடுக் கக் கீழே சர்க்கஸ்காரர் விரித்திருக் கும் வலையோ? புள்ளினத்தைச் சிறைப்பிடிக்கத் தானியந் தூவி விரிக் கப்பட்டிருக்கும் வேட்டுவன் வலையோ? 

சிலந்தி வலை! 

அதனை இறுமாப்புடன் பார்க்கின்றது அதன் கர்த்தாவாகிய சிலந்தி.  

நாள் முழுவதும் உழைத்த அலுப்பு. அலுப்பும் களிப்பும் கொடுக்கும் போதையில், மையப் புள்ளியின் மருங்கிற் பொய்யுறக்கங் கொள்ளுகின்றது. 

வலையின் ஒரு கோடியிற் சிறு சலனம் ஏற்படுவதைச் சிலந்தி உணருகின்றது. அந்தரத்திற் சாகஸம் புரிந்த ஈ ஒன்று அந்த வலையில் விழுந்து விட்டது. ஈயின் அரும்பாடு. சிக்கலி லிருந்து விடுபட எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் சிக்கலை அதிகரிக்கின்றன. ஈ தானாகவே இறகுகளைப் பசை இழைகளிலே தோய்க்கின்றது. 

கலையும் அதன் மாண்பும். 

உழைப்பும் அதன் பயனும். 

ஈக்கு விடுதலை கிடையாது. 

உரலிலிடப்பட்டது. உலக்கைக்குத் தப்புமா? 

சிலந்திக்கு இரை நிச்சயம். 

அவசரம் ஏதுங் கொள்ளாது தனது இரைப் பொருளைச் சிலந்தி பார்க்கின்றது. 

வலையினது ஒரு முனையின் இணைப்பு இழைகள்  அறுகின்றன. 

அந்தப் பகுதி பல்லியின் பாரத்தைத் தாங்கமுடியாது அறுந்துவிடுகின்றது. 

ஈ, பல்லியின் அரிசிப் பற்களுக் கிடையில் அகப்பட்டு நசிகின்றது. 

சிலந்தி மறுபுறந் திரும்பி இலேசாக நகருகின்றது. 

– மரபு (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: தைப் பொங்கல் 1964, அரசு வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *