கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 6, 2025
பார்வையிட்டோர்: 4,217 
 
 

தற்கால மனிதர்கள் சிலர் தன் நோக்கத்தை அடைய பகீரதப்பிரயத்தனம் செய்வதை விட்டு, பிறர் நோக்கத்தை தடை செய்ய முயன்று தனது முன்னேற்றப் பலனை முழுமையாகப்பெறுவதை இழந்து விடுகின்றனர். 

சிரமப்பட்டுப்பெற்றதை பயன்படுத்த மறந்து, எதிரே தனக்கு மேல் தூரத்தில் தெரியும் இன்னொன்றுக்காக, இன்னொருவரின் முயற்ச்சியைத்தடுப்பதற்காக கூடுதல் பிரயத்தனம் மேற்கொள்கின்றனர்.

அப்பியத்தனத்திற்கான பிரயாண காலமே வாழ்வின் பெரும்பகுதி கழிந்து விடுவதால் தனது நோக்கத்தின் பலனை நுகர்வதின் காலம் அவர்களுக்கு மிகவும் குறைந்து விடுகிறது. 

தன்னால் இயலாததை, தனக்கு வாழத்தெரியாததை பிறர் செய்து விட்டால், அவர்களுக்கு பல வகையில் இடையூறுகளைக்கொடுத்து கெடுத்தும் விடுகின்றனர்.

உண்மையில் நாம் இந்த பூமியில் பிறப்பெடுத்திருப்பதே பிறந்ததிலிருந்து ஆயுள் உள்ள வரை உரிய வயது காலத்தில் இயல்பாகக்கிடைக்கும் பலன்களை பிறருக்கு இடையூரின்றி முழுமையாக நுகரத்தான் என்பது ஒருவருக்கும் தெரிவதில்லை.

மேற்கண்ட படியான சிலரது சூழ்ச்சித்தனங்களை நினைத்து வருத்தத்துடன் தனது தோட்டத்து மரங்களில் காய்த்த பழங்களை பாதையோரத்தில் மரத்தடியில் தள்ளு வண்டியில் கடை போட்டு போட்டி வியாபாரிகளின் சூழ்ச்சிகளிலிருந்து சாணக்யமாக தப்பித்து இடைவிடாமல் விற்பனை செய்து கொண்டிருந்தான் சரவணன்.

சரவணன் பிறந்து பத்து வருடம் இருக்கும் போது அவனது தந்தை ஒரு விபத்தில் இறந்து விடவே, தந்தை கவனித்து வந்த தோட்டத்து வேலைகளை கவனிக்க ஆரம்பித்ததால் பள்ளிப்படிப்பு தடைபட்டுப்போனது.

தோட்டத்திற்கே வந்து வியாபாரிகள் அங்கே காய்த்த பழங்களை ஒரு கிலோ ஐந்து ரூபாய்க்கு வாங்கி, அதுவும் கடனுக்கு….. வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ நாற்பத்தைந்து லாபத்தில் ஒன்பது மடங்கு கூடுதலாக விலை வைத்து ஐம்பதுக்கு விற்பதைக்கண்டவன், தானே வியாபாரியாகவும் மாறினான். 

நல்ல வருமானம் வரவே பாதையோரமுள்ள ஒருவருடைய இடத்தை வாடகைக்கு பிடித்து கடை அமைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தான்.

‘தாய் மரக்கனிகள்’ என கடைக்கும் பெயரிடவே, பாதையில் செல்வோர் ஒரு முறை வாங்கியவர்கள் தொடர்ந்து வாங்க ஆரம்பித்தனர். 

வாரம் முழுக்க கெடாமல் இயற்கையான கனிகள் கிடைத்ததால் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்தனர்.

எதிரே கடை நடத்தியவரின் வியாபாரம் பாதிக்கவே சரவணனைப்பழிவாங்கத்திட்டம் போட்டார்.

வேறு நபரை வைத்து சரவணனிடம் இரண்டு கிலோ மாம்பழங்கள் வாங்கிச்சென்று, அதற்கு உடனே பழுக்கும் கல் வைத்து, இரண்டு நாளில் கெட்டுப்போனதை வீடியோ எடுத்து கடையின் பெயரைப்போட்டு பதிவிட , அதை பலரும் பகிற மனவேதனை யடைந்தான் சரவணன்.

ஆனால் எதிரிலிருந்த, நயவஞ்சகம் கொண்டு வீடியோவை வலைத்தளத்தில் பதிவிட்ட எதிரியான கடைக்காரர் தன் கடையை காலி செய்து விட்டுச்செல்லும் அளவிற்கு, தன்வினை தன்னைச்சுடும் எனும் பழமொழிப்படி  அவரது தூண்டுதலால் பதிவில் வந்தது பொய்யான செய்தி எனவும், தொழிலை அழிக்கச்செய்த சதி எனவும் சரவணனின் வாடிக்கையாளர் ஒருவர் எதிர் வீடியோ போட்டு விட,

‘தாய் மரக்கனிகள்’ கடையின் பெயர் தமிழகம் முழுவதும் வலைத்தளவாசிகளின் பகிர்வால் பிரபலமானது.

வாடிக்கையாளர்கள் முன்பை விட அதிகரித்து மிகப்பெரிய கடையாக உருமாறியதோடு, பல ஊர்களில் கிளைகளைத்தொடங்கும் நிலையும் உருவானது.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *