தாமதம்
கதையாசிரியர்: எஸ்.ரவீந்திரன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: March 12, 2026
பார்வையிட்டோர்: 160

அது சென்னை தேசிய நெடுஞ்சாலை. இன்ஸ்பெக்டர் ரவி, போலீஸ் குழுவினருடன் பதட்டமாக நின்று கொண்டிருந்தார். அதற்கு காரணம்.சற்று முன் அவருக்கு வந்த ஒரு போன் கால்.
காலையில் போலீஸ் நிலையத்தில் முக்கிய சில கேஸ்களை பார்த்துக் கொண்டிருந்தார் ரவி, அப்போது ரிங்க் ரிக்கி என தொடர்ந்து போன் ஒலித்தது.
அதை எடுத்து, “ஹலோ நான் இன்ஸ்பெக்டர் பேசறேன்.நீங்க யாரு..?” என்றார்
“சார். நான் யாருங்கிறது இருக்கட்டும். இப்ப நான் சொல்லப்போறது ஒரு முக்கியமான விஷயம்”
“சரி சொல்லு..என்ன மேட்டர்?” என ரவி பதட்டமாக கேட்டார். மறுமுனையில் பேசிய நபர்,
“சார். பத்து மணிக்கு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வேன் வரும்.அதில ஹவாலா பணம் வருது. கல்யாணத்துக்கு போற மாதிரி பெண்களும் வருவாங்க விடாதீங்க, இதோ நம்பரை நோட் பண்ணிக்குங்க..” என கூறிவிட்டு போனை துண்டித்து விட்டான்.
அடுத்த நிமிடமே ரவி தன் போலீஸ் படையுடன் இங்கே வந்து விட்டார்
”பாஸ் நம்ம 500 கோடி பணத்தை எப்படி கடத்தப் போறோம்னு சொல்லுங்க..நீங்க இப்படி அமைதியா இருக்கீங்க …? பத்து மணிக்கு சென்னை போற நெடுஞ்சாலை பக்கத்தில் ஒரு ஆள் நிப்பார். எப்படியாவது இந்த பணத்தை அவருகிட்ட கொடுக்கணும்.” – என்றான் அந்த கூட்டத்தை சேர்ந்த முனியப்பன்.
“ஒன்னும் கவலைப்படாதே. நாம போலீஸ் கவனத்தை திருப்பனும்” என்றார் பிரபல கடத்தல் மன்னன் ரத்தினம்.
“சரி சொல்லுங்க..உங்க பிளான் என்ன.?”
“இப்ப நான் சொல்ற மாதிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன் போடு.”
“சரி பன்றேன்.அப்படி சொன்னா என்ன நடக்கும்?”
”நாம சொல்ற மாதிரி ஒரு வேனை ரெடி பண்ணி ஆட்களை கல்யாண வீட்டுக்கு போற மாதிரி செட்டப் பண்ணு. அவங்க கிட்ட போலி ரூபாய் நோட்டு கட்டுகளை கொடுத்து அனுப்பனும். அவங்க போற கார் நம்பரையும் சொல்லு. போலீஸ் அதே நினைப்பில் இருப்பாங்க. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாம டூ வீலர்ல அந்த வழியா தப்பிச்சிடனும். சரியா? எப்படி என் ஐ டி யா?” என்றார் ரத்தினம்.
சரியாக மணி 9.50 , அந்த வேன் மின்னல் வேகத்தில் வந்தது, செக் போஸ்டில் ரவி மற்றும் போலீஸ் படை தயாரானது. நம்பரை சரிபார்த்த போலீசார் வேனை மறித்தனர்.
உள்ளே நுழைந்து பரபரப்பாக பின்னால் புல்லட்டில் ரத்தினமும் முனியப்பனும் வந்தனர்.
அங்கே கூட்டமாக இருந்தது. நிறைய பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
புல்லட்டை நிறுத்திய ரத்தினம், அங்கே நின்ற ஒருவரிடம் “இங்கே என்ன இவ்வளவு கூட்டம்?” என்றார்.
”சார்! பல ஹவாலா பணம் பிடிபட்டு இருக்கு” என்றதும் 500 கோடி ரூபாயுடன் இருவரும் பறந்தனர்.
– தமிழ்நாடு- இ-பேப்பர் (26-02-2026).